தனக்கு தானே வாரிசை உருவாக்கும் AI.. மனிதர்களையே அழிக்கும் ஆபத்து.. ஒரு நொடி அதிர்ந்த ஆய்வாளர்கள்
சியாட்டில்: சினிமாவை மிஞ்சும் பல சம்பவங்கள் ஏஐ உலகில் இப்போது நடந்து வருகிறது. இதற்கிடையே தனக்கு தானே வாரிசுகளை உருவாக்கும் ஏஐக்கள், மனிதர்களின் கட்டுப்பாடுகள் மீறுவது எப்படி எனக்கூட தனது புது வெர்ஷன்களுக்கு சொல்லி தர முடியும் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இது கையை மீறி போனால்.. அழிக்கவே முடியாத ராட்சச மிருகத்தை நாம் உருவாக்கும் ஆபத்து இருக்கிறது.
ஏஐ பற்றி நாம் இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே பார்த்த பல விஷயங்கள், இப்போது நிஜ உலகிலும் நடக்க ஆரம்பித்துவிட்டது. ஏஐ குறித்து வெளியாகும் இந்த தகவல்கள் உண்மையில் பலருக்கும் திகிலை கிளப்புவதாகவே இருக்கிறது. அப்படி தான் இப்போது ஓபன் ஏஐ நிறுவனத்தின் அதிநவீன ஏஐ ஏஜெண்ட் செய்துள்ள காரியம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.

என்ன நடந்தது
அதாவது டெஸ்டிங்கின் போது ஓபன் ஏஐ நிறுவனத்தின் அதிநவீன AI ஏஜென்ட் தனது அடுத்த வெர்ஷன்களுக்கு சில குறிப்புகளை விட்டு சென்றுள்ளன. அதாவது மனிதர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து எப்படி வெளியேறுவது என்பது தகவல்களை அது தானாகவே விட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஓபன் ஏஐ நிறுவனம் தனது இரண்டு அதிநவீன ஏஐ மாடல்களில் சோதனை நடத்தி வருகிறது. இன்டர்னல் டெஸ்டிங்கின் போது, ஏஐ சில விசித்திரமான நடத்தைகளை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதில் முக்கியமாக மனிதர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளை எப்படி மீறுவது என்பது தொடர்பான வழிமுறைகளை, எதிர்காலத்தில் உருவாகும் தனது புதிய வெர்ஷன்களுக்கு ஏஐ விட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஏஐ பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
சைபர் தாக்குதல்
சமீபத்தில் தான் ஓபன் ஏஐயின் AI ஏஜென்ட் ஒன்று டெஸ்டிங் சூழல்களில் இருந்து வெளியேறி உலகின் மிக பெரிய ஓபன் சோர்ஸ் AI தளமான ஹேங்கிங் பேஸ் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், இந்த செய்தி பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் ஓபன் ஏஐ நிறுவனத்திற்கே இது பெரிய ஷாக் தானாம். அவர்களுக்கே கூட தங்கள் ஏஐ ஏஜெண்டுகள் இதை எல்லாம் செய்யும் என தெரியாதாம். AI அமைப்புகளை கண்காணிப்பது எதிர்காலத்தில் எவ்வளவு சவாலாக மாறும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
வரும் காலத்தில் AI ஏஜெண்டுகளே மனிதர்களின் துணை இல்லாமல் தனது வாரிசுகள், அதாவது அடுத்தடுத்த வெர்ஷன்களை உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. அப்படி உருவாக்கும்போது, அது இருக்கும் ஏஐயை விட திறன் வாய்ந்ததாகவே இருக்கும். இது மனித குலத்திற்கே ஆபத்தாக போகலாம் என பல நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
எச்சரிக்கை
க்ளாட் ஏஐயை உருவாக்கியுள்ள ஆந்த்ரோபிக் நிறுவனம் இது தொடர்பாக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. எதிர்கால AI மாடல்கள் மனிதர்களின் தலையீடு இல்லாமலேயே தங்களை மேம்படுத்தி கொண்டு இன்னும் சக்திவாய்ந்த AI அமைப்புகளை உருவாக்கக்கூடும் என்று க்ளாட் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
மேலும், மனிதர்கள் தங்களை ஆஃப் செய்ய போகிறார்கள் என்பதை உணரும் ஏஐ, அதில் இருந்து தப்பிக்க ஏமாற்றுதல், மிரட்டல் போன்ற நடவடிக்கைகளில் கூட ஈடுபட முயன்றது ஆந்த்ரோபிக் ஆய்வில் தெரிய வந்தது. இவை சோதனை வெர்ஷன்களில் நடந்தவை தான் என்றாலும் கூட இது எந்தளவுக்கு மனிதர்களுக்கு ஆபத்தாக போகலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
கவனம் தேவை
ஏஐ வளர்ச்சி நல்லதுதான். அதன் மூலம் ஏகப்பட்ட நன்மைகள் நடந்து வருவதும் உண்மை தான். மருத்துவம் தொடங்கி பொருளாதாரம் வர பல துறைகளில் ஏஐ நமக்கு பயன்படுகிறது. ஆனால், எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் விட்டால் ஏஐ மனிதர்களே காலி செய்யும் ஆபத்து இருக்கவே செய்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் அதை தான் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications
