கூகுள் நிறுவனத்திற்கு செக்.. இனி நெட்டில் தேடுவதையும் சாட் ஜிபிடியிலேயே செய்யலாம்.. தெறி மாஸ் வசதி!
வாஷிங்டன்: இப்போது ஒட்டுமொத்த டெக் உலகமும் ஏஐ பின்னால் தான் போய்க் கொண்டு இருக்கிறது. இதற்கிடையே சாட்ஜிபிடி நிறுவனம் இப்போது புதிதாக சேர்ச் இன்ஜின் வசதியை அறிமுகம் செய்துள்ளது. சேர்ச் இன்ஜினாக செயல்படும் இது கூகுள் நிறுவனத்திற்கு மிகப் பெரிய பொட்டியைத் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது நாம் இணையத்தில் எதாவது தேட வேண்டும் என்று நினைத்தால் முதலே செல்வது கூகுள் தளத்திற்குத் தான். இங்குப் பலரும் இணையம் என்றாலே கூகுள் தான் என்று நினைக்கிறார்கள்.

அந்தளவுக்குக் கூகுள் சேர்ச் இன்ஜின் உலகையே ஆதிக்கம் செலுத்துகிறது. சேர்ச் இன்ஜின் துறையில் முதலில் யாகூ தளம் கொஞ்சம் போட்டி கொடுத்தது. ஆனாலும், பிறகு யாகூ காணாமல் போகவே ஒட்டுமொத்தமாக இதைக் கூகுள் தன்வசப்படுத்தியது.
கூகுள் ஆதிக்கம்: கூகுள் ஆதிக்கத்தை உடைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், அதில் எதுவும் கை கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தான் ஓபன்ஏஐ நிறுவனம் சொந்தமாக இப்போது சேர்ச் இன்ஜின் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தற்போது கட்டணம் செலுத்தும் உறுப்பினர்களாக இருப்போருக்கு மட்டுமே வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் விரைவில் இந்த சேர்ச் இன்ஜினை கல்வி மற்றும் நிறுவன பயனர்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. சேர்ச் ஜிபிடி என்று பெயரிடப்பட்டுள்ள இது, ஒரு சேர்ச் இன்ஜின் போலவே அதாவது கூகுளை போலவே செயல்படுகிறது. இதற்காகத் தனியாக ஒரு செயலியை உருவாக்காமல் சாட் ஜிபிடியிலேயே இது வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
எப்படி: நீங்கள் ஒரு விஷயத்தை சாட் ஜிபிடியில் தேடும் போது உங்களிடம் இணையத்தில் தேட வேண்டுமா என்ற ஆப்ஷன் பாப் அப் ஆகும். அதை கிளிக் செய்தால் சேர்ச் ஜிபிடி மூலம் தேட முடியும். மேலும், நாம் எதாவது கேள்வி கேட்டாலும் அதற்கு ரியல் டைமில் இணையத்தைத் தேடி, அந்த பதில்களையும் இந்த சேர்ச் ஜிபிடி வழங்குகிறது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் கோ பைலட், கூகுளில் ஜெமினி ஆகியவற்றில் இந்த வசதி இருக்கும் நிலையில், இப்போது சாட் ஜிபிடியும் இதை அறிமுகம் செய்துள்ளது.
யார் எல்லாம் பயன்படுத்தலாம்: சாட்ஜிபிடி இணையம் மற்றும் ஐஓபிஎஸ், ஆண்டிராய்டு, மேக் ஓஎஸ், விண்டோஸ் செயலிகளில் இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது சாட்ஜிபிடி பிளஸ் மற்றும் சேர்ச்ஜிபிடி வெயிட்டிங் லிஸ்ட் யூசர்களுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த முடிகிறது.
போட்டி: இதற்கு முன்பு வரை சாட் ஜிபிடியிடம் 2021 வரையிலான தகவல்கள் மட்டுமே இருந்தது. நீங்கள் எதாவது கேள்வி கேட்டால் அது தன்னிடம் உள்ள 2021 வரையிலான தகவல்களை வைத்தே பதில் சொன்னது. இதனால் தற்போதைய நிகழ்வுகளை அதில் அறிந்து கொள்ள முடியாத சூழலே நிலவியது. இந்தச் சூழலில் தான் இப்போது ஓபன் ஏஐ நிறுவனம் அது சேர்ச் இன்ஜின் போலச் செயல்படும் வகையில் மாற்றியுள்ளனர்.
இது நிச்சயம் சேர்ச் இன்ஜின் துறையில் மிகப் பெரிய போட்டியை உருவாக்கும். இது நாள் வரை எந்தவொரு போட்டியும் இல்லாத நிலையில், கூகுள் மட்டுமே இதில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதற்குச் சரியான போட்டியாக இப்போது சாட்ஜிபிடி வந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications