Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டைய கிளப்புதே.. ரூ.8,999க்கு இவ்ளோ வசதிகளோட ஸ்மார்ட்போனா? வேற லெவல்! ரெட்மி 12 சேல் இன்று முதல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் பிரியர்கள் எதிர்பார்க்கும் சகல வசதிகளோடும் 2 மாடல்களை அறிமுகம் செய்கிறது ரெட்மி. இந்த மாடல்கள் இந்திய டெக் சந்தையை அதிர வைக்கும் என்பதே கேட்ஜெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. இன்று மதியம் 12 மணி முதல் இந்த போன்களை வாங்கலாம். இந்த போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்ன விலை என்பதை பார்க்கலாம்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வருகிறது ரெட்மி. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் லேட்டஸ்ட் அம்சங்களோடு, அதேசமயம் குறைவான விலையில் போன்களை மார்க்கெட்டில் களமிறக்குவதில் ரெட்மி எப்போதும் கில்லி. ரெட்மியின் பல மாடல்கள் இந்திய சந்தையில் பெரும் விற்பனை சாதனை படைத்தவை.

 Redmi 12 4G and Redmi 12 5G launch today in India: Full specifications and price details here

டெக் மார்கெட்டில் புயலைக் கிளப்பும் ரெட்மி: அந்த வகையில் தற்போது இந்திய டெக் சந்தையில் பட்ஜெட் விலையில் ரெட்மி 12 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்கிறது ரெட்மி. ரெட்மி 12 4ஜி மற்றும் ரெட்மி 12 5ஜி மாடல் போன்கள் இன்று முதல் விற்பனைக்கு வருகின்றன. இந்தியாவில் இன்று பகல் 12 மணி முதல் இந்த மாடல்கள் விற்பனை தொடங்க உள்ளது. ரெட்மியின் 12 5ஜி மாடல் போனை ஆர்டர் போட மொபைல் போன் பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 Redmi 12 4G and Redmi 12 5G launch today in India: Full specifications and price details here

அப்படி என்ன இந்த மாடலில் ஸ்பெஷல்? ஸ்னாப் டிராகன் 4 ஜென் 2 சிப்செட் உடன் வரும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. 50 மெகா பிக்சல் உடன் ட்ரிபிள் கேமரா, 5000 mAh பேட்டரி, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெறும் ரூ.11,999 விலையில் வருகிறது என்றால் சும்மாவா?

இந்தியாவில் முதன்முறையாக: ரெட்மி 12 5ஜி போன் ஸ்னாப் டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டில் இயங்குகிறது. இந்த சிப்செட் 4nm ப்ளாக்சிப் லெவல் கட்டமைப்பு கொண்டது. இது இந்தியாவில் புதுசு. இது அதிவேக 5ஜி, மற்றும் அட்வான்ஸ்டு பவர் செயல்திறனை வழங்குகிறது. Redmi 12 MediaTek Helio G88 பிராசசருடன் வருகிறது. இந்த மாடல்கள் கிரிஸ்டல் கிளாஸ் டிசைனுடன் பிரீமியம் கிளாஸ் பேக் மற்றும் இன்பைனிட்டி கேமரா டெகோ அமைப்பைக் கொண்டுள்ளன.

ரெட்மி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 6.79 இன்ச் டிஸ்பிளே, 168.60 மிமீ அகலமும் 76.28 மிமீ தடிமனும் கொண்டவை. இதன் எடை சுமார் 198.5 கிராம். ஃபோன் 1080 x 2460 (FHD+) ரெசல்யூஷன் மற்றும் 396 பிக்சல்கள் (ppi) பிக்சல் அடர்த்தியை வழங்குகிறது.

முக்கியமான அம்சங்கள்: இந்த போன்கள் மூன்ஸ்டோன் சில்வர், ஜேட் பிளாக் மற்றும் பாஸ்டல் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. ஸ்டோரேஜை பொறுத்து 5ஜி மாடலில் மூன்று வேரியண்ட்கள் உள்ளன. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் வந்துள்ளது. 4ஜி மாடலில் 2 வேரியண்ட்கள் உள்ளன.

கேமராவை பொறுத்தவரை, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கேமராக்களுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் ட்ரிபிள் கேமரா அமைப்பை ஃபோன் கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் முன்புற கேமராவும் உள்ளது. ஃபோன் ஆண்ட்ராய்டு 13ல் இயங்கும். மேலும், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி திறனுடன் வருகிறது.

 Redmi 12 4G and Redmi 12 5G launch today in India: Full specifications and price details here

விலை விவரங்கள்: ரெட்மி 12 4ஜி போனின் விலை ரூ.9,999 முதல் தொடங்குகிறது. வேரியண்ட்டுக்கு ஏற்ப விலையில் மாற்றம் உள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.9,999. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் போன் விலை ரூ.11,499.

ரெட்மி 12 5ஜி போனின் விலை ரூ.11,999 முதல் தொடங்குகிறது. வேரியண்ட்டுக்கு ஏற்ப 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.11,999 விலையில் வருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் போன் விலை ரூ.13,499. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் போன் விலை ரூ.15,499 விலையில் வருகிறது.

இன்று பகல் 12 மணி முதல், அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் எம்.ஐ தளங்களிலும், நாடு முழுவதும் உள்ள MI ஸ்டோர்களிலும் இந்த மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கும். ரூ.8,999 முதல்.. ரூ. 15,499 வரையிலான விலையில் கிடைக்கும் இந்த சூப்பர் ஸ்மார்ட் போன்களை வாங்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+