குக்கிராமத்திலும் அதிவேக இன்டர்நெட்.. அதுவும் மிக குறைந்த விலையில்.! புது பிளானை இறக்கும் ஜியோ! வாவ்
டெல்லி: நமது நாட்டில் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் இணையச் சேவையை வழங்கும் வகையில் ஜியோ நிறுவனம் புதிதாக ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது இணையம் இல்லாமல் எந்தவொரு வேலையும் நடக்காது என்ற நிலையே இருக்கிறது. அதிவேக இணையம் என்பது இப்போது கிட்டதட்ட அடிப்படைத் தேவையாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

இருப்பினும், பல்வேறு காரணங்களால் இப்போது கிராமப்புற பகுதிகளில் டிக்கெட்கள் கிடைப்பதில்லை. இந்தப் பிரச்சினையைச் சரி செய்யும் வகையில் ஜியோ நிறுவனம் புதிதாக ஒரு கருவியை அறிமுகம் செய்கிறது.
ஜயோ ஸ்பேஸ் பைபர்: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் சாட்டிலைட் அடிப்படையிலான இணையச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஜியோ ஸ்பேஸ் பைஃபர் (JioSpaceFiber) என்று பெயரிடப்பட்டுள்ளது. நமது நாட்டில் இதற்கு முன்பு இணையச் சேவையே இல்லாத பகுதிகளுக்கும் இந்த ஜியோ ஸ்பேஸ் பைஃபர் அதிவேக பிராட்பேண்ட் வசதியைக் கொண்டு சேர்க்கிறது. டெல்லியில் நடைபெறும் இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இது இந்தியாவின் டிஜிட்டல் தளத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. ரிலையன்ஸ் ஜியோ இப்போது ஏற்கனவே 45 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் ஜியோவுக்கு தேவையான அடுத்தகட்ட பாய்ச்சலை நிச்சயம் கொடுக்கும்.
மூன்றாவது கருவி: ஏற்கனவே ஜியோவிடம் ஜியோ பைபர் மற்றும் ஜியோ ஏர் பைபர் இருக்கும் நிலையில், அந்த வரிசையில் இப்போது ஜியோ ஸ்பேஸ் ஃபைபரும் இணைந்துள்ளது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் அதிவேக இணையச் சேவையை இது உறுதி செய்வதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். செயற்கைக்கோள் நெட்வொர்க் என்பது மொபைல் பேக்ஹால் திறனையும் அதிகரிக்கும். இதன் மூலம் நாட்டின் மிகத் தொலைதூர பகுதிகளில் கூட ஜியோவின் 5ஜி சேவை கிடைக்கும்.
இதற்காக ஜியோ நிறுவனம் முன்னணி செயற்கைக்கோள் ஆபரேட்டரான எஸ்இஎஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. எஸ்இஎஸ் நிறுவனம் தனது அதிநவீன நடுத்தர சுற்றுப்பாதை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திற்கான அணுகலை ஜியோவிற்கு வழங்குகிறது. இணையத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதையே இது வரும் காலத்தில் நிச்சயம் மாற்றியமைக்கும். இதன் தொழில்நுட்பம் மூலம் இணையச் சேவையை வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ இருக்கும்.
அதிவேக சேவை: இதன் மூலம் ஜியோ நிறுவனத்தால் நாடு முழுக்க குறைவான விலையில் அதிவேக சேவையை வழங்க முடியும். பெரும்பாலான நேரங்களில் இந்த ஜியோ ஸ்பேஸ் ஏர் ஃபைபர் மூலம் நல்ல வேகத்தில் இணையம் கிடைக்கும் என்று ஜியோ தரப்பில் கூறப்படுகிறது.. குஜராத்- கிர், சத்தீஸ்கர்- கோர்பா, ஒடிசா- நபரங்பூர், அசாம்- ஜோர்ஹட் என நான்கு கிராமத்தில் ஏற்கனவே ஜியோ இந்த ஏர் ஸ்பேஸ் ஃபைபர் மூலம் தனது இணையச் சேவையை ஆரம்பித்துவிட்டது.

இந்த தொழில்நுட்பம் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், அவை தொலைதூர பகுதிகளாக இருந்தாலும் இணையச் சேவை கிடைப்பதை உறுதி செய்யும். அதுவும் குறைந்த விலையில் கிடைக்கும். அதேநேரம் வயர்லெஸ் இணையத்தில் எப்போதுமே நம்மால் பிராட்பேண்ட் வேகத்திற்கு இணையச் சேவையைப் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்தளவுக்கு வேகம் கிடைக்காது என்றால் பிறகு எதற்கு இந்த தொழில்நுட்பம் நேரடியாக பிராட்பேண்ட் போடலாமா என்ற கேள்வி வரும்.
பொதுவாக கிராமப் பகுதிகளில் பிராட்பேண்ட் அமைத்தால் லாபம் வராது என்பதால் எந்தவொரு நிறுவனமும் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் இந்தப் பகுதிகளில் பிராட்பேண்ட் சேவை அமைக்க மாட்டார்கள். அதுபோன்ற இடங்களில் இந்த ஸ்பேஸ் பைபர் பெரியளவில் உதவும்.எனவே, அதுபோன்ற கிராமங்கள் குறைந்த செலவில் இணைய அணுகலைப் பெற வேண்டுமானால் இது சிறந்த வழியாக இருக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications