நாங்க நாலு பேரு! விற்பனையில் சக்கை போடு போடும் லோ பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்! இதைவிட குறைவா கிடைக்காது!
சென்னை: சில ஆயிரங்களில் முதல் சில லட்ச ரூபாய்கள் வரை ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றன. புதிதாக ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டும் என்பவர்களோ, வயதானவர்களுடன் வீடியோ கால் பேசும் வசதியோடு மலிவு விலை போன் வேண்டும் என்றாலோ பெஸ்ட் சாய்ஸாக சில மாடல்கள் உள்ளன.
பட்ஜெட்டில், அதே சமயம், 4 ஜிபி ரேம் + 4 ஜிபி இண்டர்னல் மெமரி கொண்ட போன்கள், புதிதாக ஸ்மார்ட் போன் உலகில் நுழைவோருக்கு நல்ல சாய்சாக இருக்கும். இந்த அம்சங்களோடு ஸ்மார்ட் போன் சந்தையில் இப்போது சக்கைப்போடு போடும் 4 பட்ஜெட் விலை லேட்டஸ்ட் மாடல்களை பார்க்கலாம்.

மோட்டோ E13 (ரூ.6,449): மோட்டோரோலா தனது பட்ஜெட் ஸ்மார்ட்போனான Moto E13-ஐ இந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த போன் 2 ஜிபி, 4 ஜிபி, 8 ஜிபி என பல வேரியண்ட்களில் வந்தாலும், நாம் பார்க்கப்போவது சிறப்பான செயல்பாட்டோடு, குறைவான விலையிலும் வரும் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் பற்றித்தான்.
64 ஜிபி ஸ்டோரேஜ் என்றாலும் 1 டி.பி வரை எக்ஸ்பாண்ட் செய்துகொள்ளலாம். மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. பின்புற 720x1600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

மேலும் மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் Unisoc டி606 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. இந்த சிப்செட்டின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவுகிறது. இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் மாடல். Moto E13 ஆனது 10W சார்ஜிங் வேகத்துடன் 5,000mAh திறன் கொண்டது. இந்த போனில் f/2.2 Aperture, 1.12um Pixel Size, PDAF கொண்ட 13 MP முதன்மை கேமரா மற்றும் 5 MP முன்புற கேமரா உள்ளது.
இதன் இன்னொரு சிறப்பம்சம் இதன் லைட் வெயிட். போனின் எடை 179.5 கிராம் தான். Moto E13 தற்போது சிறப்பு விலையான ரூ.6,449க்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை தளங்களில் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது.

போகோ C51 (ரூ.5,999): வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்புது அம்சங்களுடன் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களை களமிறக்கும் போகோ, சி51 எனும் புதிய மாடலை களத்தில் இறக்கியது. Poco C51 ஆனது 720x160 பிக்சல் ரிசல்யூசன் கொண்ட 6.52 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. Poco ஸ்மார்ட்போனில் f/2.0 லென்ஸ் மற்றும் செகண்டரி கேமராவுடன் 8 MP பிரதான சென்சார் கொண்ட டுயல் கேமரா அமைப்பு பின்புறம் இடம்பெறுகிறது. செல்ஃபிக்காக முன்பக்கம் 5 MP கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட் மூலம் 4ஜி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 4ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது. Poco C51 ஆனது மைக்ரோ SD கார்டைச் சேர்ப்பதன் மூலம் 1TB வரை விரிவாக்கக்கூடிய 64 GB இன்டெர்னல் மெமரி வசதி கொண்டுள்ளது.
Poco C51 ஆனது 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த ஸ்மார்ட் போன் விற்பனைக்கு உள்ளது. Moto E13 தற்போது சிறப்பு விலையான ரூ.5,999க்கு அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை தளங்களில் தற்போது கிடைக்கும்.

ரெட்மி A2 (ரூ.6,394): ரெட்மி A2 மாடல் ஸ்மார்ட் போன் MediaTek Helio G36 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட பெரிய டிஸ்ப்ளே பேனலை வழங்குகிறது. இது 6.2' இன்ச் கொண்ட HD+ உடன் 1600 × 720 பிக்சல் உடைய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 400 nits பீக் பிரைட்னஸ், 120Hz டச் சாம்ப்ளிங் ரேட் உடன் வருகிறது. இது 4GB LPDDR4X ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
இந்த போன் பின்புறம் 8MP AI டூயல் கேமரா, 5MP முன் கேமராவுடன் வருகிறது. இந்த போன் 5000mAH பேட்டரியை 10W சார்ஜிங்குடன் வருகிறது. Redmi A2 4GB ரேம் + 64GB மாடல் விலை தற்போது ரூ.64999 ஆக உள்ளது.
சாம்சங் கேலக்சி M04 (ரூ.6,449) : சாம்சங்கின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான கேலக்சி எம்04 பின்புறத்தில் 13 மெகா பிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை கொண்ட கேமராக்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. மேலும் எல்இடி பிளாஷ்லைட்டுகள் உள்ளன. வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் 6.5-இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளேவைப் கொண்டுள்ளது.

6.5 இன்ச் டிஸ்பிளேவுடன், 720x1600 பிக்சல்களின் ஹெச்டி + கிளாரிட்டியை வழங்குகிறது. இதில் மீடியாடெக் ஹீலியோ P35 செயலி பொருத்தப்பட்டுள்ளது. 5000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த போன் தற்போது விலை குறைக்கப்பட்டு அமேசானில் ரூ.6449க்கு கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த 4 மாடல்களுக்கும் மக்கள் மத்தியில் செம மவுசு உள்ளது.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications