ரூ. 21,000 தள்ளுபடி.. காஸ்ட்லி சாம்சங் மொபைலுக்கு மெகா ஆஃபர்! இதை விட விலை குறையாது! மிஸ் பண்ணாதீங்க
டெல்லி: பிளிப்கார்ட் தளத்தில் இப்போது சாம்சங் கேலக்ஸி S23 FE மாடலுக்கு மிகப் பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைலில் நீங்கள் ரூ. 21000 டிஸ்கவுண்ட் பெற முடியும். இந்த தள்ளுபடி எப்படிப் பெற வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
இந்த நவீன உலகில் உலகில் மொபைல்போன்கள் கிட்டதட்ட 6ஆவது விரல் போலவே மாறிவிட்டது. நாம் வெளியே செல்லும் போது மொபைல் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

நமது நாட்டில் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் இருந்தாலும் கூட சாம்சங் நிறுவனத்திற்கு எனத் தனியாக ஒரு செல்வாக்கு இருக்கவே செய்கிறது. இதனால் தான் சாம்சங் உலகின் முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனமாக இருக்கிறது.
சாம்சங்: இதற்கிடையே சாம்சங் கேலக்ஸி S23 FE என்ற மாடலுக்கு இப்போது மிகப் பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் பவர்புல்லான Exynos சிப்செட்டை கொண்டுள்ளது. மேலும், 4,500mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது, மூன்று கேமரா, AMOLED டிஸ்ப்ளே, ஹோல் பன்ச் கேமரா ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜை கொண்டதாக இருக்கிறது.
இந்த மொபைல் வழக்கமாக ரூ 54,999க்கு விற்பனை செய்யப்படும்.. ஆனால், இப்போது இந்த மொபைலுக்கு தான் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது மிகப் பெரிய தள்ளுபடி, அதாவது ரூ. 21000 டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி காலத்தில் இந்த சாம்சங் கேலக்ஸி S 23 FE மாடலை ரூ. 34,999க்கு வாங்க முடியும். இத்துடன் சில குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.1000 தள்ளுபடியைப் பெற முடியும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ரூ.21 ஆயிரம் தள்ளுபடி பெற முடியும். இதன் மூலம் வெறும் ரூ.33,999க்கு இந்த மொபைலை வாங்க முடியும்.
பெரிய குழப்பம்.. வாட்ஸ்அப்பை திறந்து பார்த்தால் ஷாக்! இது என்ன புதுசா இருக்கு.. ஏன் இப்படி?
தள்ளுபடி: இந்த கேலக்ஸி S23 FE மாடல் 6.4-இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டதாகும். இதில் எக்சினோஸ் 2200 SoC பிராசஸர் இருக்கிறது. மேலும், இதில் 4,500mAh பேட்டரி, 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, IP68 ரேட்டிங் ஆகியவை உள்ளன. இந்த இந்த மொபைல் கிரீம், கிராஃபைட், மின்ட், ஊதா, இண்டிகோ மற்றும் டேன்ஜர் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.
எப்போது வரை: இந்த ஆஃபர் மே 2 முதல் பிளிப்கார்ட் தளத்தில் இருக்கிறது. அதேபோல சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திலும் உங்களால் இதே டிஸ்கவுண்டை பெற முடியும். அதேநேரம் எப்போது இந்த ஆஃபர் முடியும் என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும் என்பதால் இதை மிஸ் செய்ய வேண்டாம்.
இந்த பிளிப்கார்ட்டின் 2024 பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது, சாம்சங் மட்டுமின்றி போக்கோ, ரியல்மி உள்ளிட்ட பல முன்னணி பிராண்டுகளின் மொபைல்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அமேசான் தளத்திலும் கிரேட் சம்மர் விற்பனையில் பல்வேறு மொபைல்களுக்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications