பெரிய குழப்பம்.. வாட்ஸ்அப்பை திறந்து பார்த்தால் ஷாக்! இது என்ன புதுசா இருக்கு.. ஏன் இப்படி?
வாஷிங்டன்: பிரபல வாட்ஸ்அப் நிறுவனம் திடீரென தனது செயலியில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது இணையத்தில் ஒரு விவாத பொருளாக மாறியிருக்கிறது.
உலகில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இதன் காரணமாக வாட்ஸ்அப் செயலியில் வரும் ஒவ்வொரு மாற்றங்களும், அது எவ்வளவு சின்ன மாற்றமாக இருந்தாலும், இணையத்தில் விவாதிக்கப்படும். இந்த முறையும் அப்படி தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அவர்கள் ஐஓஎஸ் செயலிக்கு ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். இந்த அப்பேட்டை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலி தனது நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறி இருக்கிறது.
கலர் மாற்றம்: கடந்த பிப். மாதமே பீட்டா வெர்ஷனில் (டெஸ்டிங் வெர்ஷன்) சிலருக்கு இந்த கலர் மாற்றம் நடந்தாலும், இப்போது தான் இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் யூசர்களுக்கு இந்த அப்டேட் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளது. இது குறித்து அவர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இருப்பினும், பெரும்பாலானோருக்கு இந்த புதிய கலர் பிடிக்கவில்லை என்றே இணையத்தில் பலரும் சொல்லி வருகிறார்கள்.
இப்போது நமது நாட்டில் ஐபோன் வைத்திருப்பவர்களுக்கு இந்த அப்பேட் வருகிறது. இந்த அப்டேட்டை நீங்கள் செய்தால் வாட்ஸ்அப் செயலியின் இன்டர்ஃபேஸ் வழக்கமான நீல நிறத்திற்குப் பதிலாகப் பச்சை நிறத்திற்கு மாறிவிடும். ஆண்ட்ராய்டு மொபைல்களில் வாட்ஸ்அப் செயலி இன்னும் பச்சை நிற இன்டர்ஃபேஸையே கொண்டு இருக்கிறது. ஆனால், ஐபோன்களில் மட்டும் அவை நீல நிறத்திற்கு மாறியுள்ளது.
மொபைல் பிரச்சினை இல்லை: எனவே உங்கள் ஐபோன்களில் திடீரென வாட்ஸ்அப் பச்சை நிறத்தில் மாறினால் அதைக் கண்டு நீங்கள் பதற்றமடையத் தேவையில்லை. இது உங்கள் மொபைலில் வரும் பிரச்சினை இல்லை. வாட்ஸ்அப் நிறுவனமே கொடுத்த அப்டேட் ஆகும்.
முன்பே குறிப்பிட்டது போல இந்த அப்டேட் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வர தொடங்கிவிட்டது இருப்பினும், இப்போது தான் அது அதிகப்படியானோருக்கு சென்று சேர்ந்துள்ளது.. இந்த அப்டேடிற்கு பிறகு வாட்ஸ்அப் செயலியில் அனைத்துமே பச்சை நிறத்தில் மாறி உள்ளது. பொதுவாக நாம் வாட்ஸ்அப்பில் எதாவது லிங்குகளை பகிர்ந்தால் அது நீல நிறத்தில் காட்டும். ஆனால், இந்த அப்டேட்டிற்கு பிறகு அதுவும் கூட பச்சை நிறத்திற்கு மாறியுள்ளது.
விளக்கம்: இந்த அப்டேட் குறித்து வாட்ஸ்அப் முக்கிய ஒன்றைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாட்ஸ் அப் செயலியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் யூசர்களுக்கு ஒரு நவீன, புதிய அனுபவத்தைக் கொண்டு வருவதற்கும் இந்த மாற்றத்தைச் செய்துள்ளோம். வாட்ஸ்அப் செயலியில் சில மாற்றங்களைச் செய்துள்ளோம். செயலி அடுத்த கட்டத்திற்குச் செல்ல இது உதவும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நெட்டிசன்கள்: அதேநேரம் இந்த கலர் மாற்றத்தை நம்மால் மாற்ற முடியாது.. எனக்கு நீல நிறமே போதும் என ஆஃப் செய்ய முடியாது.. அப்பேட் வந்த அனைவருக்குமே கலர் இப்படி பச்சை கலரில் மாறிவிடுகிறது. இதை தான் இணையத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். சம்பந்தமே இல்லாமல் இந்த கலர் மாற்றம் நடந்துள்ளதாகச் சாடி வருகிறார்கள். அதேநேரம் எதிர் தரப்பினர் கலர் ப்ளைண்ட்னஸ் இருக்கும் சிலரால் நீல நிறத்தை ஒழுங்காகப் பார்க்க முடியாது என்பதற்காகவே இந்த மாற்றத்தை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளதாகவும் கூறி வருகிறார்கள்.
மேலும், இந்த அப்டேட் நமது நாட்டில் இப்போது தான் மெல்ல வெளியாகத் தொடங்கியுள்ளது. எனவே, உங்கள் வாட்ஸ்அப் நிறம் மாறினால் பதறாதீர்கள்.












Click it and Unblock the Notifications