Recharge: 11 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா.. அதிரடி பிளானை கொண்டு வந்த ஜியோ & ஏர்டெல்! இதை கவனிங்க!
சென்னை: இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் தமது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.
வெறும் 11 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டாவை வழங்கும் இந்தத் திட்டம், ஒரு மணி நேரம் மட்டுமே வேலிடிட்டி கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ. 11 ரீசார்ஜ் பிளான்
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் இந்த 11 ரூபாய் ரீசார்ஜ் பிளான், குறுகிய கால, அதிக டேட்டா தேவைகளைக் கொண்ட பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த டேட்டா பிளான், வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங் அல்லது அவசர டேட்டா பயன்பாடு போன்ற குறுகிய நேர தேவைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
"யூசர்களுக்கு ஃப்ளெக்ஸிபிள் ஆன மற்றும் மலிவு விலையில் டேட்டா வழங்குவதற்காக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்" என்று ஜியோவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஏர்டெல் நிறுவனம், "இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அவசரகால டேட்டா தேவைகளை எளிதாக்கும்" என்று தெரிவித்துள்ளது.
1 மணி நேர வேலிடிட்டி
இந்த ஒரு மணி நேர வேலிடிட்டி கொண்ட டேட்டா பிளான், பயனர்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு மிகவும் குறைந்த செலவில் அதிக டேட்டாவைப் பயன்படுத்த உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் டிஜிட்டல் கண்டெண்ட்டை அதிகம் பயன்படுத்துவோரை டார்கெட்டாக கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாஃப்ட்வேர் அப்டேட், படங்களை டவுன்லோடு செய்யும்போது டேட்டா தீர்ந்துவிட்டால் அவசரத்துக்கு இந்த பிளானை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சூப்பர் ஆப்ஷன்
இதற்கு முன்பு, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இதுபோன்ற குறுகிய கால டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், ரூ. 11க்கு 10 ஜிபி என்ற இந்தத் திட்டம் விலை மற்றும் டேட்டா அளவு அடிப்படையில் மிகவும் சூப்பரான பிளானாக உள்ளது.
மேலும், மணி நேர அடிப்படையில் பல்வேறு டேட்டா பிளான்களை வழங்குவதற்கு முன்னோட்டமாக இந்த ரீசார்ஜ் திட்டம் பார்க்கப்படுகிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, ஒரு நாளுக்கும் குறைவான வேலிடிட்டி கொண்ட பல்வேறு பிளான்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications