சிம் கார்டு வாங்க இனி இந்த ஆவணம் கட்டாயம் ஆகிறதா.. புதிய மசோதா சொல்வது என்ன? விவரம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று தொலைத்தொடர்பு மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் சிம்கார்டு வாங்க இனி பயோமெட்ரிக் தகவல்கள் பெறுவது அவசியம் என்ற விதி இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் நேற்று முடிவுக்கு வந்தது. கூட்டத்தொடர் இன்று வரை நடைபெறும் முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டன.

இதனால், லோக்சபாவில் 97 எம்.பி.க்களும், 46 ராஜ்யசபா எம்.பி.க்களும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மொத்தம் 146 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் இப்படி நிகழ்ந்தது இல்லை. நாடாளுமன்றத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக நேற்று டெலிகாம் மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக புதிதாக சிம்கார்டு வாங்க தேவையான அடையாள சான்று பயோமெட்ரிக் என்று மசோதாவில் ஷரத்து இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஒய்.சிக்கு பயோமெட்ரிக் ஆவணம் பெறுவது என்பது தற்போது ஆதார் மூலமாக மட்டுமே பெற முடியும். எனவே, இனி சிம்கார்டு வாங்க ஆதார் பயோமெட்ரிக் தகவல் அளிப்பது கட்டாயம் ஆகும் என்பதை அனுமானிக்க முடிகிறது.
தற்போது ஆதார் கார்டு வாங்க அனைத்து கடைகளிலும் ஆதார் விவரங்களையே கேட்கிறார்கள். இருந்தாலும் தற்போது ஆதார் விவரங்கள் என்பது சிம்கார்டு பெற கட்டாயம் இல்லை. ஆனால், மசோதாவில் இடம் பெற்று இருக்கும் இந்த புதிய அம்சம் மூலமாக ஆதார் விவரம் இன்றி சிம்கார்டு பெற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. புதிய சிம்கார்டு வாங்க வாடிக்கையாளரின் பயோமெட்ரிக் விவரங்கள் அவசியம் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் மசோதா சட்டமான பிறகு வெளியிடப்படும் விவரங்களை வைத்த இதை உறுதியாக கூற முடியும்.
தொலைத்தொடர்பு மசோதா 2023 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா இனி குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications