சிம் கார்டு வாங்கும் போது தப்பித்தவறி இந்த தப்பை பண்ணிடாதீங்க.. அப்புறம் கம்பிதான் எண்ணனும்
டெல்லி: போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று தொலைத்தொடர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இன்று ராஜ்யசபாவில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொலைத்தொடர்பு மசோதா 2023- ஐ தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அது குறித்த விவரம் வருமாறு:-

கே.ஒய்.சி எனப்படும் உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்பதில் கடுமையான விதிமுறைகளை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல், போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
3 ஆண்டுகள் சிறை: தொலைபேசி எண்ணில் மோசடி செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். வேறு நபரின் அடையாள சான்றை பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். தொலைத்தொடர்பு கட்டமைப்பை அமைக்க பொது சொத்தாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட காலவரையறைக்க்குள் அனுமதி வழங்குவது அவசியம். தனிநபர் சொத்தாக இருந்தால் உரிமையாளருக்கும் தொலை தொடர்பு கட்டமைப்பை நிறுவும் நபருக்கும் இடையே பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.
டெலிகம்யூனிஷேகன் நெட்வொர்க்கை சேதப்படுத்தினால் சேதத்திற்கு இழப்பீடும் கொடுப்பதோடு சேர்த்து 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக்கப்படும்.
100 எம்பிக்கள் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நடப்பு கூட்டத்தொடரின் போது அவைக்குள் இருவர் அத்துமீறி வண்ண புகைக்குண்டுகளை வீசிய விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இந்த சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமலே பெரும்பாலான மசோதாக்கள் நிறைவேறின.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications