இவ்ளோ விலை மலிவா வேற எங்கேயுமே ரீசார்ஜ் பிளான்கள் கிடைக்காது! ஜியோ கஸ்டமர்களுக்கு 3 ‘ஜாக்பாட்’ ஆஃபர்
சென்னை: ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக போட்டி போட்டு குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை அளித்து வருகின்றன. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூபாய் 200க்குள் 3 சூப்பரான பிளான்களை வழங்கி வருகிறது.
ஜியோ மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு மிக மலிவான விலையில் வெறும் ரூ.198 விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அளிக்கும் பிளானை வைத்துள்ளது. ஏர்டெல், வோடபோன் ஐடியாவில் இந்த விலைக்கு 5ஜி சேவை வழங்கும் பிளான்கள் கிடையாது. அதேபோல வேல்யூ திட்டங்களில் ரூ.189 விலைக்கு ஜியோ யூசர்களுக்கு ஒரு சூப்பரான பிளான் கிடைக்கிறது.

ஜியோ ரூபாய் 189 பிளான்
ஜியோ ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கு லம்ப்சம் டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வேண்டுமானால், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதைவிட சூப்பரான மலிவு விலை பிளானே எங்கும் கிடையாது.
இந்த பிளானை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 kbps வேகத்தில் இணையத்தை பயன்படுத்தலாம். மற்ற டெலிகாம் நிறுவனங்களில் லம்ப்சம் டேட்டா திட்டங்களில் அதன்பிறகு குறைவான வேகத்தில் இயங்கும் வசதி கிடைக்காது. ஆனால், ஜியோவில் இந்த வசதி கிடைக்கும்.
28 நாட்கள் வேலிடிட்டி
மேலும், இந்த பிளானில் 300 எஸ்எம்எஸ்களை அனுப்பிக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களும் இலவசம். இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான சந்தாவை பெற முடியும்.
இந்த பிளானில் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பெஸ்ட் ஆப்ஷனாக இருக்கும்.
ஜியோ ரூபாய் 198 பிளான்
ரூ.200-க்கு குறைவாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட பிளான் வேண்டுமானால், ரூ.198 விலைக்கு கிடைக்கும் பிளானை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது.
இந்த டேட்டாவை 4ஜி வேகத்தில் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதற்கு பிறகும் 64 kbps வேகத்தில் டேட்டா கிடைக்கிறது. அதேபோல எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு 100 அனுப்பலாம். அன்லிமிடெட வாய்ஸ் கால்கள், ஜியோ ஆப்களின் சலுகை இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது.
இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால், வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதற்கு லிமிட் கிடையாது. உங்கள் கையில் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பிளானின் வேலிட்டி மொத்தம் 14 நாட்கள்.
ஜியோ ரூ.199 பிளான்
இதேபோல் ரூ.199 விலை உள்ள ரீசார்ஜ் திட்டத்தையும் ஜியோ செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள். தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். தினசரி 100 எஸ்எம்எஸ் கட்டணமின்றி அனுப்பிக் கொள்ள முடியும். மேலும் அன்லிமிடெட் கால் வசதியும் இருக்கிறது. இந்த திட்டத்திலும் JioTV, Jio Cinema மற்றும் JioCloud க்கான சந்தாவை பெற்றுக் கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications