புக் செய்தால்.. 15 நிமிடத்தில் வீட்டு வேலை செய்ய வரும் பணியாளர்கள்.. அர்பன் கம்பெனியின் புதிய சேவை
மும்பை: பிரபல நிறுவனமான அர்பன் கம்பெனி இப்போது வீட்டு வேலை செய்ய பணியாளர்களை புக் செய்யும் புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நமக்கு எப்போது தேவையோ அப்போது வேலைக்கு ஆட்களை புக் செய்து கொள்ளலாம். 15 நிமிடங்களில் அவர்கள் வீடு தேடி வருவார்களாம். இந்த புதிய திட்டத்திற்கு இணையத்தில் கலவையான விமர்சனங்களே வந்துள்ளன.
இந்த காலத்தில் எல்லாமே இன்ஸ்டன்ட் சேவைகளை நோக்கியே நகர்ந்து வருகிறோம். எதை ஆர்டர் செய்தாலும் 15- 20 நிமிடங்களில் வீட்டிற்கே வரும் இன்ஸ்டன்ட் டெலிவரி தான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. இந்த இன்ஸ்டன்ட் சேவை டிரெண்டில் இப்போது புதிதாக இணைந்துள்ளது தான் உடனடி பணியாளர்கள் (Insta Maids) திட்டம்.

இன்ஸ்டா பணியாளர்கள்
அர்பன் கம்பெனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தில் நீங்கள் புக் செய்தால் வெறும் 15 நிமிடங்களில் வீட்டு வேலை செய்ய பணியாளர்கள் வருவார்கள். வீட்டைச் சுத்தம் செய்தல், சமையல் செய்தல் மற்றும் துடைத்தல் என வீட்டிற்கு வழக்கமாக வரும் பணியாளர்கள் என்ன வேலைகளைச் செய்வார்களோ.. அனைத்தையும் இவர்களும் செய்வார்கள். ரூ.49ல் இருந்து இதற்கான கட்டணம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இப்போது மும்பையில் மட்டுமே இந்தத் திட்டம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நகரங்களுக்கும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அர்பன் கம்பெனியில் இன்ஸ்டா பணியாளர்களாக இருப்போருக்கு இலவச மருத்துவ காப்பீடு, ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்கப்படும் என்றும் அர்பன் கம்பெனி தெரிவித்துள்ளது.
அர்பன் கம்பெனி
இது தொடர்பாக அர்பன் கம்பெனி மேலும் கூறுகையில், "எங்கள் சர்வீஸ் பார்ட்னரின் நல்வாழ்வில் எங்களுக்கு அர்ப்பணிப்பு இருக்கிறது. இந்த புதிய சர்வீஸில் பார்ட்னர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.150-180 சம்பளமாகக் கிடைக்கும். அத்துடன் இலவச சுகாதார காப்பீடு மற்றும் வேலையில் ஆயுள் மற்றும் விபத்து காப்பீடும் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 132 மணிநேரம் (தினசரி 6 மணி நேரம் விகிதம் 22 நாட்கள்) வேலை செய்யலாம். இதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.20,000 வருவாய் உறுதி செய்யப்படுகிறது.
ரேட் எவ்வளவு
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு மணி நேரத்திற்கு ரூ.49 என்ற விலையில் இந்த சர்வீஸை அறிமுகம் செய்கிறோம். இது அறிமுக விலை மட்டுமே..! வரும் காலங்களில் சேவை அதிகரிக்கும் போது சர்வீஸ் பார்ட்னர்களின் வருவாய் மற்றும் எங்கள் பிஸ்னஸுக்கு தேவையான பொருளாதாரம் இரண்டையும் உறுதி செய்யும் வகையில் ரேட் மாற்றி அமைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.
கலவையான வரவேற்பு
அதேநேரம் இணையத்தில் இதற்கு இரு விதமான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. ஒரு தரப்பினர் இதை வரவேற்கிறார்கள். இந்த காலகட்டத்தில் வேலைக்கு பணிப்பெண்கள் கிடைப்பதே சிரமமாக உள்ள நிலையில், அந்த சிக்கலை இது தீர்க்கும் என்கிறார்கள். இந்தியாவுக்கு நாடு முழுக்க பணிப்பெண்களின் தேவை அதிகமாக இருப்பதாகவும் அதை அர்பன் கம்பெனியின் இந்தத் திட்டம் தீர்க்கும் என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.
அதேநேரம் மற்றொரு தரப்பினர் இது மனித உரிமை மீறல் எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். குறைந்த விலையில் ஊழியர்கள் கிடைப்பதை உறுதி செய்யவே புதுமை என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வருவதாகப் பலரும் விமர்சித்துள்ளனர். இந்த திட்டத்தைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்கனு சொல்லுங்க!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications