Vi Recharge: டேட்டாவை அள்ளி அள்ளித் தரும் வோடஃபோன் ஐடியா.. எல்லாமே அன்லிமிடெட்! சூப்பரான 3 பிளான்கள்
சென்னை: வோடஃபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம், தமது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு "நான் ஸ்டாப் ஹீரோ" திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளான்களில் அன்லிமிட்டட் டேட்டா கிடைக்கும். அதிக நெட் தேவைப்படும் யூசர்களுக்கு இந்த பிளான்கள் வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் நடக்கக்கூடிய போட்டியில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு வோடபோன் ஐடியா (Vi) நிறுவனமும் டஃப் கொடுத்து வருகிறது. ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்கும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் பல புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

வோடஃபோன் ஐடியா - நான்-ஸ்டாப் ஹீரோ
அந்தவகையில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்காக ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றபடி "நான்- ஸ்டாப் ஹீரோ" திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு சர்க்கிளுக்கு சூப்பரான 3 நான் ஸ்டாப் ஹீரோ பிளான்கள் உள்ளன. சென்னையில் சிம் வாங்கியவர்களுக்கு இந்த பிளான் கிடைக்காது.
வோடஃபோன் ஐடியா வழங்கும் "நான்-ஸ்டாப் ஹீரோ" பிளான்கள் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற பல எக்கச்சக்கமான நன்மைகளை வழங்குகிறது. Vi நமது தமிழ்நாடு சர்க்கிள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் 3 சூப்பரான நான்-ஸ்டாப் ஹீரோ பிளான்கள் பற்றி பார்க்கலாம்.
Vi ரூ.380 பிளான்
வோடபோன் ஐடியா நான்-ஸ்டாப் ஹீரோ 380 ரூபாய் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD போன் கால்கள் இலவசம், மேலும், இந்த திட்டத்தில் யூசர்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவுடன் தினமும் 100 SMS இலவசமாக கிடைக்கும். தமிழ்நாடு சர்க்கிள் (சென்னை தவிர) யூசர்கள் இதனை பயன்படுத்தலாம்.
Vi ரூ.680 பிளான்
வோடபோன் ஐடியா நான்-ஸ்டாப் ஹீரோ 680 ரூபாய் திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த பிளான் லோக்கல் மற்றும் STD கால்களை அன்லிமிடெட் ஆக வழங்குகிறது. மேலும், யூசர்களுக்கு தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். இந்த பிளானையும் தமிழ்நாடு சர்க்கிள் (சென்னை தவிர) யூசர்கள் இதனை பயன்படுத்தலாம்.
Vi ரூ. 1020 பிளான்
வோடபோன் ஐடியா நான்-ஸ்டாப் ஹீரோ 1020 ரூபாய் திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. மேலும், இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்களும் கிடைக்கிறது. பிற திட்டங்களைப் போலவே இந்த திட்டத்திலும் யூசர்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் டேட்டா இலவசம். இந்த பிளானையும் தமிழ்நாடு சர்க்கிள் (சென்னை தவிர) யூசர்கள் இதனை பயன்படுத்தலாம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications