வீடியோ காலில் வந்த செந்தில் பாலாஜி.. நீதிபதி அல்லி கேட்ட ஒரு கேள்வி.. வந்து விழுந்த ஷாக் பதில்!
சென்னை: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி அல்லி முன் நடந்த விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு இந்த மாதம் 28ம் தேதி வரை அதாவது 15 நாட்களுக்கு நீதிமன்ற காவல் உத்தரவு போடப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை மனுவில், நீதிமன்ற காவலுக்கு பதிலாக எங்களுக்கு கஸ்டடி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜி தரப்பு இடைக்கால ஜாமீன் கேட்டது. இந்த மனுவில் நேற்று அமலாக்கத்துறை முக்கியமான சில கோரிக்கைகளை வைத்தது. அமலாக்கத்துறை வைத்த வாதத்தில் பின்வரும் பாயிண்டுகளை சொன்னது.
1. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கான மெமோவை வாங்க மறுத்தார்.ரிமாண்ட்டை நீக்க கோரிக்கை வைக்க முடியாது, ஜாமீன்தான் கேட்க முடியும்.
2. கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே மெமோவை வாங்க செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார்.
3. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது.
4. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் பொருந்தாது.
5. செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம்.
6. செந்தில் பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
7. செந்தில் பாலாஜியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற கூடாது என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது.
8. செந்தில் பாலாஜி நேற்று முதல்நாள் வரை ஆரோக்கியமாக இருந்த போது எப்படி உடல்நிலை மோசமாகும், என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது.
பொதுவாக அமலாக்கத்துறை வழக்கில் மனுதாரரும் ஆஜராக வேண்டும் என்பதால் செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை மனு நகல் உங்களுக்கு அனுப்பப்பட்டதா என செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார்.
அமலாக்கத்துறை மனு நகல் இன்னும் கிடைக்கவில்ல, என்று செந்தில் பாலாஜி கூறினார். இதையடுத்து அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்கக் கூடாது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம் வைத்தார்.
அவர் தனது வாதத்தில், அமித்ஷா வந்த அடுத்த நாள் நடவடிக்கை எடுத்துள்ளனர், மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்தபோது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை திட்டமிட்டு செய்துள்ளனர்
அடுத்த நாள் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்க கூடாது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனுவை நிராகரிக்க வேண்டும்;
ஏற்கனவே போதுமான விசாரணையை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை செய்துள்ளது. மருத்துவ காரணங்களின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும்; உயர்நீதிமன்ற அமர்வு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதித்துள்ளது; அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது, என்று வாதம் வைத்தனர்
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications