ஆப்பிளுக்கு சவால் விடும் ஜியோ? அம்பானி போடும் மாஸ்டர் பிளான்! வந்தாச்சு மாஸ் கருவி.. அடடே செம
டெல்லி: ஆப்பிள் நிறுவனம் உலகில் டெக் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே ஜியோ, ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாக இறங்கியுள்ளது.
ரிலையன்ஸ் குழுமம் கடந்த சில ஆண்டுகளில் பல துறைகளில் புதிய நிறுவனங்களைத் தொடங்கியுள்ளது. முன்பு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ரிலையன்ஸ் இப்போது பல துறைகளில் கால் பதிக்கிறது.
குறிப்பாக அதன் டெலிகாம் நிறுவனமான ஜியோ இந்திய தொலைத்தொடர்புத் துறையையே புரட்டிப் போட்டது எனச் சொல்லலாம். இதனிடையே இப்போது ஜியோ புதிய சாதனம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது அது குறித்துப் பார்க்கலாம்.
ஆப்பிள்: டெக் உலகின் ஜாம்பவான் என்று ஆப்பிளை நாம் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். அவர்களது ஐபோன்கள், மேக்புக் லேப்டாப்களை உலகெங்கும் பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். டெக் துறையில் இவர்கள் செய்த புரட்சிகள் எனத் தனி லிஸ்டையே போடலாம். குறிப்பாக மொபைல்கள் இந்தளவுக்கு வந்துள்ளது என்றால் அதற்கு அடித்தளமிட்டது என்னவோ ஆப்பிள் தான்.
அவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த ஐபோன் தான் மொபைல் சந்தையைப் புரட்டிப் போட்டது. இப்போது என்ன தான் ஐபோன்களில் புதிதாக எதுவும் இல்லை எனப் புகார்கள் இருந்தாலும் இன்னும் மொபைல்களில் ஐபோன் தான் டாப். இன்னுமே கூட ஐபோன்கள் வைத்திருப்பது ஒரு அந்தஸ்தாகவே கருதப்படுகிறது. இதன் காரணமாகவே பலரும் ஐபோன்களை விரும்பி வாங்குகின்றனர். அதேபோல பாதுகாப்பில் ஐபோனுக்கு நிகராக வேறு எந்த மொபைலும் கிட்ட கூட வராது.
ஏர்டேக்: பாதுகாப்பு என்ற போது இங்கு நாம் ஆப்பிளின் மற்றொரு கருவியையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அது அவர்களது ஏர்டேக் கருவிகள். ஏர்டேக் என்பது ஆப்பிளின் ஒரு வித டிராக்கிங் சாதனமாகும். உரிமையாளர்கள் தொலைக்கும் பொருட்களைக் கண்டறியவே இந்த ஏர்டேக் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இது பார்க்க ஒரு சின்ன நாணயம் போலவே இருக்கும். இதை நாம் மொபைல், நகை அவ்வளவு ஏன் செல்ல பிராணிகளின் காலர் என எந்தவொரு பொருளில் கூட வைக்கலாம்.

இந்த ஏர்டேக்குகளில் இருந்து ப்ளுடூத் சிக்னல்கள் தொடர்ந்து வெளியாகும். இவை தொலைந்துவிடுகிறது என வையுங்கள்.. அப்போது நாம் அதில் இருந்து வெளியாகும் ப்ளுடூத் சிக்னல்களை வைத்து எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். Find My என்ற நெட்வொர்க்கை பயன்படுத்தி நாம் நமது பொருட்களை டிராக் செய்யலாம். இது வரை இதன் மூலம் பல ஆயிரம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனம் வெளியான உடனே ஹிட் அடித்தது.
ஜியோ: இதுபோன்ற ஒரு சாதனத்தைத் தான் இப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இந்தியச் சந்தையில் இறக்கியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிஸ்னஸ் டூ பிஸ்னஸ் பிரிவில் டாப் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. இப்போது அவர்கள் பிஸ்னஸ் டூ கன்ஸ்யூமர் என்ற நேரடியாக மக்களுக்கு விற்கும் வர்த்தகத்திலும் இறங்கியுள்ளனர். இதில் ஜியோ முதல், ரிலையன்ஸ் ரிடைல் வரை எல்லாமே ஹிட்தான்.
எப்படி வேலை செய்யும்: குறிப்பாக அனைத்தையும் விட ஜியோ மக்கள் மத்தியில் ஹிட் அடித்துவிட்டது. அந்த ஜியோ தான் இப்போது இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ஜியோடேக் எனப் பெயரிட்டுள்ளனர். இதில் 50 மீட்டர் வரை பொருட்களை டிராக் செய்ய முடியுமாம். இந்த சாதனத்தை ஜியோதிங்க்ஸ் செயலியில் இணைத்துவிட்டால் போதும், பொருட்களை டிராக் செய்ய முடியும்.
உதாரணத்திற்கு உங்களை பர்ஸில் இந்த ஜியோடேக்கை வைத்துள்ளார்கள் என வைத்துக் கொள்ளும். அதை அங்கேயே வைத்துவிட்டு நீங்கள் கிளம்பினால். சில மீட்டர் சென்றவுடன் உங்கள் மொபைலில் பர்ஸில் மறந்து வைத்துவிட்டு வருகிறீர்கள் என்று அலாரம் அடிக்கும். அதையும் தாண்டி பொருளைத் தொலைத்துவிட்டால் ஜியோ கம்யூனிட்டியில் தொலைந்துவிட்டதைக் குறிப்பிடலாம். அப்போது ஜியோ பயன்படுத்துவோர் யாராவது அருகே வந்தால், அது சிக்னலை பிக் செய்து நமக்குத் துல்லியமாக எங்கே இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்தும்.
இந்த ஜியோடேக்கில் இருக்கும் பேட்டரி சுமார் ஓராண்டிற்கு வருமாம். அதன் பின்னரும் கூட தேவைப்பட்டால் புதிய பேட்டரியை வாங்கி மாற்றிக் கொள்ளலாம். ஆப்பிளின் ஏர்டேக் இப்போது 3,490 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், ஜியோடேக்கின் விலை 2,199ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சிறப்பு சலுகையாக அது 749க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications