இனி இன்டர்நெட் காலி ஆகவே ஆகாது.. கூடவே இலவச ஓடிடிக்கள் வேற.. ரிலையன்ஸ் ஜியோ இறக்கிய புது திட்டம்
டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல ஒடிடி தளங்களின் இலவச சந்தாக்களுடன் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 3 மாதம் செல்லுபடியாகும் இந்தத் திட்டம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் வருகை என்பது இந்தியாவில் டெலிகாம் சந்தையை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. முன்பு ஒரு மாதத்திற்கு ஒரு ஜிபி டேட்டாவுக்கே நாம் அதிக தொகையைக் கொடுக்க வேண்டி இருந்தது.

ஆனால், ஜியோ வந்த பிறகு நிலைமை முற்றிலுமாக மாறியது.. மாதம் ஒரு ஜிபி டேட்டா என்ற நிலை மாறி இப்போது தினசரி 3 ஜிபி டேட்டாவை பேக்குகள் இருக்கிறது. இதனால் ஜியோ நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது.
ஜியோ: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி இப்போது 3 மாதங்கள், அதாவது 84 நாட்கள் வெலிடிட்டி இருக்கும் புதிய திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது நமக்கு அன்லிமிடட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது. மேலும், 100 எஸ்எம்எஸ், தினசரி 2ஜிபி அதிவேக 4ஜி டேட்டா என இதில் பல்வேறு அம்சங்கள் இருக்கிறது.
இதுபோக பல முக்கிய ஒடிடி தளங்களையும் இலவசமாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சோனி லிவ், ஜி5 என பல ஒட்டி தளங்களை நம்மால் இலவசமாகப் பயன்படுத்த முடியும். இவை மட்டுமின்றி, ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் உள்ளிட்ட இலவசங்களையும் அது கொடுக்கிறது. இதற்கான விலை ரூ. 909ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாட்ஜிபிடி இனி தூசு மாதிரி.. வந்தாச்சு "ஜெமினி.." மனித சக்திக்கு அப்பாற்பட்டதையும் செய்யும் "AI"
5ஜி டேட்டா: ரூ. 909 கொடுத்து ரிசார்ஜ் செய்தால் தினசரி 2 ஜிபி விகிதத்தில் 84 நாட்களுக்கு 168 ஜிபி டேட்டா 4ஜி டேட்டா கிடைக்கும். இந்த தினசரி 2 ஜிபி வரம்பிற்கு பிறகு இன்டர்நெட் வேகம் 40Kbps ஆக குறையும். இது 4ஜி டேட்டா தான். அதேநேரம் 5ஜி கவரேஜ் இருக்கும் இடங்களில் தொடர்ச்சியாக அன்லிமிடட் டேட்டா நமக்கு கிடைக்கும். அதாவது 5 ஜி கவரேஜ் இருக்கும் இடத்தில் இருந்தால் எப்போதும் உங்களுக்கு இணையம் காலியே ஆகாது. மேலும், ஜியோடிவி மூலம் சோனி லிவ் மற்றும் ஜி5 தளங்களையும் பயன்படுத்தலாம்.
மற்ற திட்டங்கள்: முன்னதாக கடந்த மாதம் தான் ஜியோ நிறுவனம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் இலவச சப்ஸ்க்ரிப்ஷன் உடன் 808 ரூபாய்க்கு ஒரு பிளானை அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடோவோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்குப் போட்டியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
சமீபத்தில் தான் நெட்ஃபிக்ஸ் சந்தாவுடன் இரண்டு திட்டங்களையும் அறிமுகப்படுத்தி இருந்தது. ஜியோவின் ரூ. 1,099 திட்டத்தில் தினசரி 2ஜிபி 5ஜி டேட்டாவும் ரூ. 1,499 திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இந்த இரண்டிலும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடட் கால்கள் கிடைக்கும்.
அதேபோல ஜியோ நிறுவனம் கிராமப்புறங்களில் தங்கள் இருப்பை அதிகரிக்க ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. இதில் 401 ரூபாயை நாம் செலுத்தினால் போதும்.. ஒரு மாதத்திற்கு 1000 ஜிபி டேட்டா நமக்கு கிடைக்கும். அதேநேரம் இந்த 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தவில்லை என்றால் அது அடுத்த மாதத்திற்கு கேரி ஃபார்வர்ட் ஆகாது.












Click it and Unblock the Notifications