ஜியோ vs ஏர்டெல்.. ஐபிஎல் மேட்ச் பார்க்க நிஜமாகவே எது பெஸ்ட்.. இந்த வோடபோன் ரேஸிலயே இல்ல பாருங்க
டெல்லி: ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், இந்த போட்டிகளை நாம் கண்டுகளிக்க ஏர்டெல் மற்றும் ஜியோ பேக்குகள் வழங்கும் திட்டம் குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் இளைஞர்கள் பலரும் டிவி காட்டிலும் மொபைலில் ஸ்டிரீமிங் மூலமாகவே வீடியோக்களை பார்க்க விரும்புகிறார்கள். இதனால் டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பல பேக்குகளை வாரி வழங்குகின்றன.

புதிய திட்டம்: ஐபிஎல் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ ஒரு புதிய ஆட்-ஆன் டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஆட் ஆன் மூலம் நமக்கு 25 ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கிறது. 25 ஜிபி முடித்துவிட்டால் இணைய வேகம் 64Kbps ஆகக் குறைக்கப்படும். வெறும் ரூ.49க்கு அறிமுகப்படுத்தும் இந்தத் திட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்ற பேக்காக இருக்கும்.
தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளை தங்கள் மொபைலில் லைவில் பார்க்க விரும்பும் பயனர்களுக்கு இந்த புதிய கிரிக்கெட் பேக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஹாட்ஸ்பாட் மூலம் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவி மூலமாகக் கூட ஐபிஎல் போட்டிகளை ஸ்ட்ரீம் செய்ய முடியும். ஒரு போட்டி முழுமையாகப் பார்த்து முடிக்க இந்த 25 ஜிபி சரியாக இருக்கும். இதன் காரணமாகவே இதன் வெலிடிட்டியும் 24 மணி நேரமாக வழங்கப்பட்டுள்ளது.
சத்யம் தியேட்டரில் கூலாக படம் பார்த்த "தல" தோனி.. எந்த படம் தெரியுமா! ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்
ஏர்டெல்: ஏர்டெல் நிறுவனமும் இதே போன்ற திட்டத்தை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.49க்கு வழங்கும் திட்டமும் ஒரு நாள் தான் வெலிடிட்டி ஆனால் அதில் நமக்கு வெறும் 20 ஜிபி டேட்டா தான் கிடைக்கும். அதேபோல வோடபோன் நிறுவனத்திலும் ரூ. 49 பேக் இருக்கிறது. ஆனால், அதில் வெறும் 6 ஜிபி டேட்டா மட்டுமே வழங்குகிறது, இது ஏர்டெல் மற்றும் ஜியோ விட ரொம்பவே குறைவாகும்.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் வழங்கும் இந்த ரூ.49 பேக் டேட்டா ஒன்லி ஏட் ஆன் திட்டமாகும். இதில் நமக்கு அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் என எதுவும் கிடைக்காது. மேலும் இந்த திட்டம் 24 மணிநேரத்திற்கு மட்டுமே வெலிடிட்டி இருக்கும். மீதமுள்ள டேட்டாவை அடுத்த ரீச்சார்ஜிற்கு எடுத்துச் செல்லும் carry forward ஆப்ஷன் இதில் இல்லை.
தேவைப்படாது: அதேநேரம் உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால்.. நீங்கள் ஏர்டெல் அல்லது ஜியோ பயன்படுத்தும் நபர் இருந்தால்.. இந்த பேக் உங்களுக்குத் தேவைப்படாமல் போகலாம்,.. ஏனெனில் இந்த இரு டெலிகாம் நிறுவனங்களும் பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவையை வழங்குகின்றன. இப்போது இந்த இரு நிறுவனங்களும் அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவை வழங்குவதால் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கும் நபர்களுக்கு இந்த பேக் தேவைப்படாமல் போகலாம்.
இது தவிர மேலும் சில ஏட் ஆன் பிளான்களும் உள்ளன. ஜியோவில் நீங்கள் ரூ.222 செலுத்தி 50 ஜிபி டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வெலிடிட்டு முடியும் வரை இந்த 50 ஜிபி டேட்வை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல ஏர்டெல் ரூ.301 செலுத்தினால் 50 GB 4G டேட்டாவையும் கிடைக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications