"பாதுகாப்பு, லாப நோக்கம்!" ஓபன் ஏஐ சாம் ஆல்ட்மேன் பணிநீக்கத்திற்கு உண்மையில் இதுதான் காரணம்! பின்னணி
வாஷிங்டன்: சாட்ஜிபிடியின் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக சில ஷாக் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை டெக் உலகில் யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்த ஓபன் ஏஐ நிறுவனம் தான் ஏஐ துறையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சாட் ஜிபிடியை உருவாக்கியவர்.

அந்த நிறுவனத்தின் முதுகெலும்பாக இருந்தவர் தான் இந்த சாம் ஆல்ட்மேன்.. இதுவரை தான் திடீரென ஓபன் ஏஐ இயக்குநர் குழு சிஇஓ பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டது. ஏஐ துறையின் முகமாக இருந்த சாம் ஆல்ட்மேன் பல நாடுகளுக்கும் சென்று அது குறித்து விளக்கி வந்தார். அப்படியிருக்கும் போது திடீரென அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
ஓபன் ஏஐ: சாட் ஜிபிடியின் முதுகெலும்பாகவும் ஏஐ துறையின் முகமாகவும் இருந்த சாம் அல்ட்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. அவருக்குப் பதிலாக அல்பேனியாவை சேர்ந்த மீரா முரட்டி என்பவர் இடைக்கால சிஇஓவாக நியமிக்கப்பட்டார். சாம் அல்ட்மேன் பதவிநீக்கத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து இணையத்தில் பல வித கருத்துகள் உலா வந்தன.
இது குறித்து ஓபன் ஏஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், சாம் அல்ட்மேன் இயக்குநர் குழுவுடன் வெளிப்படையாகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் அது அவரது செயல்பாடுகளைப் பாதிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனால் இனிமேலும் சாம் ஆல்ட்மேன் ஓபன் ஏஐ நிறுவனத்தை திறம்பட நடத்துவார் என்ற நம்பிக்கையை தாங்கள் இழந்து விட்டதாகவும் ஓபன் ஏஐ இயக்குநர் குழு தெரிவித்திருந்தது.
என்ன காரணம்: வெளிப்படையாக இந்த காரணம் சொல்லப்பட்டாலும் கூட பலரும் ஓபன் ஏஐ நிறுவனம் ஏதோ ஒன்றை மறைப்பதாகவே கருதுகிறார்கள். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கூட இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஏஐ துறைக்கு மிகப் பெரிய சக்தியும் அதனால் மிகப் பெரிய ஆபத்தும் இருக்கிறது. எனவே, இதுபோன்ற கடுமையான நடவடிக்கையை எடுக்கும் போது ஏன் இப்படியொரு நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை இயக்குநர் குழு பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்" என்று ட்வீட் செய்திருந்தார்.
ஓபன் ஏஐ நிறுவனம் குறித்து வரும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது "லாபமும் பாதுகாப்பும்" தான் சாம் ஆல்ட்மேன் சிஇஓ பொறுப்பில் இருந்து நீக்கப்படக் காரணமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓபன் ஏஐ நிறுவனம் முதலில் தொடங்கப்பட்ட போது அது லாபநோக்கற்ற ஏஐ நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு அது தனது திட்டத்தை மாற்றி லாப நோக்கில் செயல்படத் தொடங்கியது.
கருத்து வேறுபாடு: இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அதன் இணை நிறுவனரான எலான் மஸ்க் ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அதேநேரம் ஓபன் ஏஐ லாப நோக்கில் இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அப்போதுதான் டெக் உலகில் அது ஒரு வலிமையான நிறுவனமாக இருக்கும் என்பது அவரது கருத்து. இந்த விவகாரத்தில் சாம் ஆல்ட்மேன் மற்றும் இயக்குநர் குழுவுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அதேபோல பாதுகாப்பும் மற்றொரு காரணமாக இருக்கிறது. ஏஐ கருவிகளால் என்ன மாதிரியான ஆபத்து ஏற்படும் என்பது நமக்கு இதுவரை தெளிவாகத் தெரியாது. அப்படியிருக்கும் போது சாட் ஜிபிடியில் பொறுமையாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வேண்டும் என்பதே எலான் மஸ்க் தொடங்கிப் பல வல்லுநர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், சாம் ஆல்ட்மேன் அனைத்து விஷயங்களையும் மிக விரைவாகச் செய்வதாகக் குற்றச்சாட்டு இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாட் ஜிபிடி மூலம் பயனாளர்கள் தங்கள் விரும்பும் வகையிலான ஏஐ சிஸ்டத்தை உருவாக்கும் வசதியை அவசர அவசரமாக சாம் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதனால் அப்போது ஒரே நேரத்தில் பயனாளர்கள் குவிய, சாட்ஜிபிடியால் இதைச் சமாளிக்க முடியாமல் அது அப்படியே முடங்கிப் போய் இருக்கிறது. அனைத்தையும் இப்படி அவசர அவசரமாக முயல்வதும் பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்தும் என இயக்குநர் குழு அஞ்சுகிறது. இதன் காரணமாகவே சாம் ஆல்ட்மேனை அவர்கள் சிஇஓ பொறுப்பில் இருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications