இந்தியாவிலேயே மலிவான 5ஜி பிளான் எது தெரியுமா.. மறக்காம நோட் பண்ணுங்க.. மாச கடைசியில் கை கொடுக்கும்
டெல்லி: முன்பு எந்தவொரு பிளானில் ரீச்சார்ஜ் செய்தாலும் 5ஜி சேவை அன்லிமிடெட்டாக கிடைக்கும். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அதில் கட்டுப்பாடுகள் கொண்டுவந்துவிட்டனர். இதனால் அன்லிமிட் 5ஜி சேவை எதில் இருக்கிறது என்று பார்த்துப் பார்த்து ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. நீங்கள் ஜியோ சிம் வைத்திருப்பவராக இருந்தால் நீங்கள் எந்த பிளானில் ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் 5ஜி சேவை பெற முடியும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்லா டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை உயர்த்தின. ப்ரீபெய்ட் கட்டணங்கள் அனைத்துமே சுமார் 25% வரை உயர்த்தப்பட்டன.

5ஜி அன்லிமிடெட்: இதற்கு முன்பு வரை நாம் எந்த பிளானில் ரீசார்ஜ் செய்தாலும் 5ஜி சேவையை எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்தலாம். அதாவது தினசி 1ஜிபி பேக் திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் இருக்கும் பகுதியில் 5ஜி சேவை இருந்தால்... அதை அன்லிமிடெட்டாக யூஸ் செய்யலாம். உங்கள் தினசரி கோட்டாவில் இருந்தும் கூட அது கழிக்கப்படாது.
யூசர்கள் பலரும் இதை விரும்பினார். ஆனால், கட்டண உயர்வுக்குப் பிறகு 5ஜி சேவைக்கும் சில கட்டுப்பாடுகளை அறிவித்தனர். இதனால் 5ஜி சேவையைப் பெறுவதில் பலருக்கும் சிக்கல் ஏற்பட்டது. இப்போது தினசரி 2ஜிபி டேட்டா அல்லது அதற்கு மேல் உள்ள திட்டங்களில் ரீச்சார்ஜ் செய்தால் மட்டுமே 5ஜி அன்லிமிடெட்டாக கிடைக்கிறது. இதனால் குறைந்தது 400 ரூபாய்க்காவது மாதாமாதம் ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது.
குறைந்தபட்ச பிளான் எது: ஆனால், ஜியோ நிறுவனம் வெறும் ரூ.198க்கு ரீச்சார்ஜ் செய்தாலேயே 5ஜி அன்லிமிடெட்டாக வழங்கும் ஒரு பிளானை வைத்து இருக்கிறது. மை ஜியோ செயலியில் நீங்கள் தேடினால் அதில் 198 ரூபாய்க்கு ஒரு பிளான் இருக்கும். இதுதான் இப்போதுள்ள மிகக் குறைவான 5ஜி திட்டமாகும். இதன் வெலிடிட்டி, சலுகைகள் குறித்து நாம் பார்க்கலாம்.
இத்திட்டத்தில் நமக்கு வழக்கம் போல அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 எஸ்எம்எஸ், தினசரி 2ஜிபி 4ஜிடேட்டா கிடைக்கிறது. இந்த 2ஜிபி கோட்டா முடிந்தால்.. இணைய வேகம் 64kbs ஆகக் குறைந்துவிடும். மேலும், 5ஜி டேட்டா அன்லிமிடெட்டாக கிடைக்கிறது. இது தவிர ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் உள்ளிட்ட சேவைகளையும் நாம் பண்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இதன் வெலிடிட்டி வெறும் 14 நாட்கள் மட்டுமே இருக்கும்.
யாருக்கு சரியாக இருக்கும்: தங்கள் ஏரியாவில் 5ஜி எந்தளவுக்கு வேகமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் முதலில் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தலாம்.. அல்லது என் வீட்டில் வை-பை இருக்கு.. சும்மா இரண்டு வாரம் மட்டுமே வெளியே செல்லும் வேலை இருக்கு.. அப்போது மட்டும் அன்லிமிடெட் 5ஜி தேவை என்றால் உங்களுக்கும் அது சரியாக இருக்கும்.
இதற்கு அடுத்தபடியாக பார்த்தால் ரூ. 349க்கு ஒரு ரீச்சார்ஜ் பிளான் இருக்கிறது. 28 நாட்கள் வெலிடிட்டி கொண்ட இந்த பிளானிலும் நமக்கு அன்லிமிடெட் 5ஜி கிடைக்கும். எனவே, உங்களுக்கு எது தேவையோ அதில் ரீச்சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications