பட்டையைக் கிளப்பும் ‘த்ரெட்ஸ்’ ஆப்! இப்பவே இவ்வளவு பேர் வந்தாச்சு.. பயன்படுத்துவது எப்படி தெரியுமா?
வாஷிங்டன்: சமூக வலைதளமான ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற புதிய சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள த்ரெட்ஸில் பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலமாகவே சைன் அப் செய்து கொள்ளலாம். த்ரெட்ஸ் ஆப்பை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
ட்விட்டர் சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ப்ளூ டிக் பெற சந்தா, ட்வீட்களை பார்ப்பதற்கு வரம்பு ஆகிய மாற்றங்களால் அதிருப்தி அடைந்துள்ள ட்விட்டர் யூசர்களை கவரும் நோக்கில் த்ரெட்ஸ் சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா.

த்ரெட்ஸ் செயலி: இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் த்ரெட்ஸ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. த்ரெட்ஸ் சமூக வலைதளம் வெளியான 4 மணி நேரங்களிலேயே, 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக மார்க் ஸுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் செயலி மூலம் த்ரெட்ஸ் ஆப்பிற்குள் sign up செய்ய அனுமதிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் அதே ஐடி பெயரிலேயே த்ரெட்ஸ் சமூக வலைதளத்திலும் உங்களின் பெயர் இடம்பெறும்.
இது ட்விட்டர் போலவே டெக்ஸ்டை பிரதானமாக கொண்டு செயல்படும். 500 கேரக்டர்கள் வரையிலான குறுகிய பதிவுகள் அல்லது அப்டேட்களை வெளியிடலாம். 5 நிமிடங்கள் வரை நீளமான வீடியோக்கள் மற்றும், புகைப்படங்கள் அல்லது லிங்க்குகளை த்ரெட்ஸில் பதிவிடலாம்.
த்ரெட்ஸ் ஆப்பை எப்படி பயன்படுத்துவது?:
1.முதலில் ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஐபோன் என்றால் ஆப் ஸ்டோரில் த்ரெட்ஸ் ஆப்பை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.
2.த்ரெட்ஸ் ஆப்பை ஓபன் செய்து "Log in with Instagram" என்பதை தேர்வு செய்யவும்.
3.உங்கள் போனில் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், த்ரெட்ஸ் அதன் மூலமாகவே தானாகவே லாக்-இன் ஆகும்.
4.அதற்கு, இன்ஸ்டாகிராம் ஆப்பில் உடனடியாக ஒரு பெர்மிஷன் நோட்டிஃபிகேஷன் வரும். அதனை அப்ரூவ் செய்தால் போதும்.
5. இன்ஸ்டாகிராம் ஆப்பை தற்போது உங்கள் போனில் பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் விவரங்களை குறிப்பிட்டு sign-up செய்து கொள்ளலாம்.

500 கேரக்டர்கள் வரை: 1. உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் நீங்கள் பின் தொடரும் நபர்களை அப்படியே மொத்தமாக இதிலும் ஃபாலோ செய்து கொள்ளலாம்.
2. 500 கேரக்டர்கள் கொண்ட 'த்ரெட்களை' பதிவிடலாம். 5 நிமிட நீளமுள்ள வீடியோக்கள், மற்றும் இணைப்புகள், 10 புகைப்படங்கள் வரை பதிவிடலாம்.
3. பயனர்கள் இந்த த்ரெட்களை தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அல்லது அவர்கள் விரும்பும் வேறு எந்த தளத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.
4. 16 வயதுக்குட்பட்ட (அல்லது குறிப்பிட்ட நாடுகளில் 18 வயதுக்குட்பட்ட) பயனர்கள் த்ரெட்களில் சேரும்போது இயல்பாகவே பிரைவேட் அக்கவுண்டாக உருவாகும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications