"அம்புக்குறி” இருக்கா? இனி 2 வாட்ஸ் அப் யூஸ் பண்ண தேவையே இல்ல.. வந்தாச்சு ‘செம அப்டேட்’.. எப்படி?
சென்னை: வாட்ஸ்-அப் யூசர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த அப்டேட்டிற்கான விதையைப் போட்டுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். விரைவில் இந்த புதிய அம்சம் அனைவருக்கும் கிடைக்க உள்ளது. இனி வாட்ஸ் அப்பை க்ளோன் செய்து 2 ஆப்களை பயன்படுத்த தேவையில்லை.
உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்டா நிறுவனம் தங்களது யூசர்களுக்கு திருப்திகரமான சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு புதிய வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அந்தவகையில் நீண்ட காலமாக வாட்ஸ் அப் யூசர்கள் எதிர்பார்த்து காத்திருந்த புதிய அம்சம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மல்டி அக்கவுன்ட்: தற்போது டூயல் சிம் பயன்படுத்தும்போது இரண்டு எண்களுக்கும் வாட்ஸ் அப் பயன்படுத்த விரும்பினால், நம் மொபைலில் 'டூயல் ஆப்' அல்லது 'ஆப் க்ளோன்' மூலம் இரண்டு வாட்ஸ் அப் செயலிகளை பேரலல் ஆக பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இனி ஒரே வாட்ஸ் அப் செயலிலேயே 2 எண்களையும் நிர்வகித்துக் கொள்ளலாம்.
ஒரே போனில் பல வாட்ஸ் அப் கணக்குகளை ஸ்விட்ச் செய்து பயன்படுத்த முடியும். இந்த அப்டேட் உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் யூசர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மல்டி அக்கவுன்ட் என்று அழைக்கப்படும் இந்த புதிய அம்சம் மூலமாக யூசர்கள் எளிதில் தங்களது அக்கவுண்ட்களை மாற்றிக்கொள்ள முடியும்.
எப்படி பயன்படுத்துவது?: இந்த புதிய அம்சம் முதல்கட்டமாக வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு பீட்டா யூசர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பீட்டா டெஸ்டர்கள் மல்டி அக்கவுண்ட் அம்சத்தை பெற்றிருந்தால், தங்களுடைய வாட்ஸ் அப் செட்டிங்கில் உள்ள கியூ ஆர் கோடுக்கு அருகில் உள்ள சிறிய ஏரோ ஐ-கானை கிளிக் செய்து மற்றொரு கணக்கை சேர்க்கலாம். அதற்கு புதிய வாட்ஸ் அப் கணக்கின் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்.
மற்றொரு அக்கவுண்டுக்கு மாற்றிக்கொள்ள விரும்பினால் அதே ஐகானை மீண்டும் க்ளிக் செய்து இன்னொரு அக்கவுண்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். அக்கவுண்டை வேறுபடுத்திக் காட்ட, டிபி மற்றும் யூசர் நேம் காட்டப்படும்.

இதன் மூலம் இனி Parallel ஆப் பயன்படுத்தாமல் ஒரே வாட்ஸ் அப்பிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தலாம். தற்போது இந்த புதிய அம்சம் பீட்டா வெர்சனில் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications