இனி வாட்ஸ்அப்பை பழையபடி யூஸ் பண்ண முடியாது! பெரிய ஆப்பை வைத்த மார்க் ஜுக்கர்பெர்க்! இப்படி ஆகிடுச்சே
சென்னை: வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள் இல்லாமல் இத்தனை காலம் யூசர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது அந்த நிலை மாறுகிறது. வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள் காட்டப்படும் என மெட்டா சமீபத்தில் அறிவித்தது. இது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கும் நிலையில், அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இத்தனை ஆண்டுகளாக வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் இல்லாமல் இருந்தன. யூசர்களிடையே வாட்ஸ்அப் மிக வேகமாகப் பிரபலமடைய இதுவே முக்கியமான காரணமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலை மாறவுள்ளது.

அதாவது விரைவில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது தளத்தில் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்த அறிவிப்பை வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் யூசர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
விளம்பரம் எங்கே வரும்?
யூசர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நண்பர்களுக்குப் பகிர ஸ்டேடஸ் என்ற ஆப்ஷன் வாட்ஸ்அப்பில் இருக்கிறது. அதில் நாம் போட்டோக்கள், வீடியோக்களை வைக்கலாம். அது 24 மணி நேரத்திற்குள் தானாக மறைந்துவிடும். அப்படி ஸ்டேடஸ் வைக்கும் இடத்தில் தான் விளம்பரங்களைக் காட்ட வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.
அதேபோல வாட்ஸ்அப் யூசர்களிடையே தங்கள் சேனல்களை விளம்பரப்படுத்தவும் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்க மெட்டா திட்டமிட்டுள்ளது. சேனல்கள் என்பது ஒரு நபர் அனுப்பும் மெசேஜ்களை ஒரே நேரத்தில் பலருக்கும் கொண்டு சேர்க்கும். இதன் மூலம் பிரபலங்கள் அல்லது நிறுவனங்கள் ஒரே நேரத்தில் பலருடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த சேனல்களை பிரமோட் செய்ய வாட்ஸ்அப் கட்டணம் வசூலிக்க உள்ளது.
வாட்ஸ்அப் கடந்து வந்த பாதை
வாட்ஸ்அப் கடந்த 2009ம் ஆண்டு முதலில் தொடங்கப்பட்ட போது, அதைப் பயன்படுத்தவே கட்டணம் என இருந்தது. அதாவது இப்போது ஓடிடி தளங்களைப் போல நாம் ஆண்டுக்குக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என்று இருந்தது. அதன்படி இப்போது ஆண்டுக்கு 1 டாலர் செலுத்த வேண்டியிருந்தது. இந்தியா உட்பட சில நாடுகளில், வாட்ஸ்அப் முதல் வருடத்திற்கு இலவசமாக இருந்தது. இரண்டாவது ஆண்டில் இருந்து கட்டணம் செலுத்த வேண்டும் என இருந்தது.
மெட்டா நிறுவனம்
அப்போது தான் கடந்த 2014ஆம் ஆண்டில், மெட்டா (அப்போது பேஸ்புக்) நிறுவனம் வாட்ஸ்அப்பை 19 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. கொஞ்ச காலத்திலேயே வருடாந்திர சந்தா முறையை மெட்டா ரத்து செய்தது. இருப்பினும், அப்போது வாட்ஸ்அப்பின் நிறுவனர்களும் சரி, மெட்டாவின் மார்க் ஜூக்கர்பெர்க்கும் சரி, யூசர் டேட்டாவை விளம்பரங்களுக்காகப் பகிரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
அதன் பிறகு வாட்ஸ்அப் செயலியில் மெட்டா தொடர்ச்சியாக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து செய்து வந்தது. இந்தச் சூழலில் தான் விளம்பரங்களையும் வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. மெட்டாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் யூசர்களுக்கு விளம்பரங்கள் காட்டப்படும்.
யூசர் டேட்டா
அதேநேரம் யூசர்களின் தனிப்பட்ட செய்திகள், அழைப்புகள் மற்றும் ஸ்டேட்டஸ்களை குறிவைத்து விளம்பரம் இருக்காது. அதாவது ஒருவர் என்ன மெசேஜ் செய்கிறார்.. என்ன பேசுகிறார் என்பதைக் கண்காணித்து விளம்பரங்கள் வராது. அது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனாக தொடரும். அதற்குப் பதிலாக யூசர் ஒருவர் எந்த நகரில் இருக்கிறார்.. என்ன மொழி பேசுகிறார் என்பது உள்ளிட்ட டேட்டா பாயிண்டுகளை வைத்து விளம்பரங்கள் வருமாம்.
அதேபோல க்ராஸ் டேட்டா ஷேரிங்கும் இருக்கும். அதாவது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் தளங்களும் மெட்டா வசமே இருக்கிறது. இதனால் அங்கு உங்கள் டேட்டா இருந்தால் அதன் அடிப்படையிலும் வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள் வரும். இந்த விளம்பரங்களைக் கட்டுப்படுத்தவும், டேட்டா பகிர்வைக் கட்டுப்படுத்தவும் சில ஆப்ஷன்கள் உள்ளன. இருப்பினும், விளம்பரங்களை முழுவதுமாக நிறுத்த முடியாது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications