அடேங்கப்பா..! இந்த வசதியையும் கொண்டு வரப்போகுதா வாட்ஸ்அப்? இனி ஆபீஸ் மீட்டிங்கே நடத்தலாமே!
சென்னை: வாட்ஸ் அப்பில் அவ்வப்போது, புதிது புதிதாக வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் லேட்டஸ்ட்டாக போனின் மொத்த ஸ்கிரீனையும் யாருக்கு வேண்டுமானாலும் ஷேர் செய்யும் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வரப்போகிறது. முழு விவரத்தை தெரிஞ்சிக்கலாமா..?
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் ஆப், உலகம் முழுவதும் அதிக யூசர்களை கொண்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பலகோடி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி அவ்வப்போது அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது. அதனால் தான் வாட்ஸ் அப்புக்கு போட்டியாக எந்த இன்ஸ்ட்டண்ட் மெசேஜிங் ஆப் வந்தாலும் வந்த வேகத்திலேயே காணாமல் போகின்றன.
அப்டேட் கிங்: முதலில் மெசேஜ் செய்யும் தளமாக மட்டும் இருந்த வாட்ஸ் அப், வாய்ஸ் கால், வீடியோ கால் என அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. யுபிஐ பேமெண்ட் அனுப்பும் வசதியையும் வாட்ஸ் அப்பே கொண்டு வந்தது. இப்படி பல்வேறு செயலிகளில் உள்ள வசதிகளை ஒரே ஆப்பில் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறது வாட்ஸ் அப்.

இந்நிலையில் தான் வாட்ஸ்அப் செயலி, விரைவில் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட இருக்கிறது. அது வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷேரிங் வசதி. இந்த அம்சம் மூலம் போனின் வாட்ஸ் அப் ஸ்கிரீனை மட்டுமல்லாமல், போனில் உள்ள மொத்த ஸ்கிரீனையும் யாருக்கு வேண்டுமானாலும் பயனர்கள் ஷேர் செய்து கொள்ள முடியும்.
ஸ்கிரீன் ஷேரிங்: ஏற்கனவே இந்த ஸ்கிரீன் ஷேர் வசதி, ஸ்கைப் (Skype), கூகுள் மீட் (Google Meet), ஜூம் (Zoom call) உள்ளிட்ட வீடியோ காலிங் ஆப்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இனி வரும் காலங்களில் வாட்ஸ் அப்பிலும் இந்த ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
தற்போது இந்த ஸ்கிரீன் ஷேரிங் வசதி சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வசதி அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டதும், வாட்ஸ்-அப் பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும், வீடியோ கால் மூலம் நண்பர்களுடன் பேசும்போது, அவர்களது போனின் ஸ்கிரீனை அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்துகொள்ள முடியும்.
வீடியோ கால்களின் போது ஒரு யூசர் தன்னுடைய மொபைல் ஸ்க்ரீனை மற்றொரு யூசருடன் பகிர்ந்து கொள்ள முடியும். ஆபிஸ் மீட்டிங்கின் போது தகவல்களை காட்டவோ, வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பிக்கவோ இந்த ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்ஷன் உதவும்.
உங்க திரையில் இருப்பது அவங்க திரையில்: தற்போதைய சூழலில் வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் 32 பேர் வீடியோ காலில் பங்கேற்கலாம். இந்த எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டால், ஆபீஸ் ஆன்லைன் மீட்டிங்குகளே இனி வாட்ஸ் அப்பில் நடந்தாலும் நடக்கலாம்.
வாட்ஸ் அப்பில் நீங்கள் பேசும்போது கீழே இருக்கும் இந்த ஸ்கிரீன் ஷேரிங் வசதிக்கான பட்டனை ஆன் செய்து விட்டால் உங்கள் போனில் நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்களோ அவை அனைத்துமே உங்களுடன் வீடியோ காலில் இருக்கும் மற்றொரு யூசருக்கு, அல்லது குரூப் காலில் இருந்தால், அனைவருக்கும் அவர்களது திரையில் பார்க்க முடியும்.
உங்கள் வாட்ஸ் அப்பிற்கு வரும் நோட்டிபிகேஷன்கள், நீங்கள் உங்கள் போனில் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் மற்ற அனைத்து விஷயங்களையும் மற்றவரால் வீடியோ கால் மூலமாக இந்த ஸ்கிரீன் ஷேர் வசதியை கொண்டு பார்க்க முடியும்.

ஸ்கிரீன் ஷேரிங் வசதியை எப்படி பயன்படுத்துவது?: 1. வாட்ஸ்-அப் ஆப்பை திறந்து அடிப்பகுதியில் உள்ள பாருக்கு செல்லவும்.
2. கேமரா சுவிட்ச் ஆப்ஷனுக்கு அடுத்ததாக உள்ள புதிய ஐகானைப் பார்க்கவும்.
3. ஸ்கிரீன் ஷேரிங் ஆப்ஷனை செயல்படுத்த அந்த ஐகானை தொடவேண்டும்.
4. ஒரு பாப்-அப் தோன்றி, உங்கள் ஸ்க்ரீன் ஷேர் செய்யப்படுவதைப் பற்றி எச்சரிக்கும்.
5. உங்கள் போன் ஸ்கிரீனை மற்றவருடன் பகிரத் தொடங்க "ஸ்டார்ட் நவ்" என்பதைக் க்ளிக் செய்யவும்.
6. ஸ்கிரீன் ஷேரிங் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில், "உங்கள் திரையைப் பகிர்கிறீர்கள்" என்ற செய்தியைப் பெறுவீர்கள்.
7. ஒருவேளை உங்களுக்கு இந்த வசதி பிடிக்கவில்லை எனில் நீங்கள் "டு நாட் டிஸ்டர்ப் (DND)" மோடை ஆன் செய்து வைத்துக் கொள்ளலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications