எலக்ட்ரிக் ஸ்கூட்டர் vs பெட்ரோல் ஸ்கூட்டர்.. இரண்டில் எது பெஸ்ட்! எதன் விலை குறைவு! எதை வாங்கலாம்
டெல்லி: இப்போது டூ வீலர் வாங்கலாம் என நினைக்கும் அனைவருக்கும் வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா அல்லது மின்சார ஸ்கூட்டரை வாங்கலாமா என்பது தான். இதற்கான பதிலைப் பார்க்கலாம்
இப்போது உலகெங்கும் மின்சார வாகனங்கள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு, பருவநிலை மாற்றம் தொடங்கி இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே டெஸ்லா கார்கள் ஏகத்திற்கும் ஹிட் அடித்துவிட்டது. இந்தியாவிலும் மின்சார கார்கள் இருக்கிறது என்றாலும் கூட, நமது நாட்டில் முதலில் டூவிலர்களே முழுமையாக மின்சார வாகனங்களாக மாறும் எனச் சொல்லப்படுகிறது.
மின்சார வாகனங்கள்: ஏதர் நிறுவனம் பல ஆண்டுகளாகவே எலக்ட்ரிக் ஸ்கூட்டகர்களை வெளியிட்டு வருகிறது. ஆனால், மின்சார டூவிலர்களில் பெரும் புயலைக் கிளப்பியது என்னவோ ஓலா தான். ஓலாவின் டூவிலர்களுக்கு நாட்டில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும், டிவிஎஸ், பஜாஜ் என முக்கியமான நிறுவனங்களும் இதில் இறங்கியுள்ளது. அதேபோல இப்போது ஹீரோ நிறுவனம் விடா என்ற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டகர்களை கொண்டு வருகிறது.
இந்த நேரத்தில் டூ வீலர் வாங்கலாம் என நினைக்கும் அத்தனை பேருக்கும் எழும் கேள்வி- இப்போது வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா அல்லது மின்சார ஸ்கூட்டரை வாங்கலாமா என்பது தான். இது குறித்து நாம் சற்று விரிவாகப் பார்க்கலாம். பெரும்பாலான மக்களுக்கு விலைதான் முக்கியமான விஷயம். அதில் எது விலை குறைவானது, எதில் அதிக வசதிகள் உள்ளது, எதை வாங்குவது பெஸ்ட் என்பதை நாம் பார்க்கலாம்.
விலை: இதில் இதன் விலையை ஒப்பிடுவோம்.. பெட்ரோலில் இயங்கும் பிரபல ஹோண்டா ஆக்டிவா 6G மாடல் இப்போது தமிழ்நாட்டில் 73,815 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டிவிஎஸ் ஜூபிடர் 125 மாடல் 78,625 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் பிரபல மின்சார டூ வீலரான நிறுவனமான ஏதர் நிறுவனத்தின் ATHER 450X மாடல் தமிழ்நாட்டில் 1.46 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஹோண்டாவின் பெட்ரோல் வாகனத்தை விட மின்சார டூ விலர் விலை இரண்டு மடங்கு அதிகமாகும்.
இதை வைத்துப் பார்க்கும் போது மின்சார ஸ்கூட்டரை வாங்குவது முட்டாள்தனமாகத் தோன்றுகிறதா.. ஆனால் உண்மை அது இல்லை. ஸ்கூட்டரை வாங்குவது ஒரு செலவு என்றால்.. அதை ஓட்ட ஆகும் செலவும், மெயின்டென் செய்ய ஆகும் செலவும் கூட தனியாக இருக்கிறது. அதையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மற்ற செலவுகள்: கடந்த 2021இல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 90 ரூபாய் என்ற ரேஞ்சில் இருந்தது. ஆனால், இப்போது பெட்ரோல் ரூ.100ஐ கடந்துவிட்டது. கடந்த பல மாதங்களாகவே பெட்ரோல் விலை ரூ.1000ஐ தாண்டியே இருக்கிறது. மறுபுறம் மின்சார ஸ்கூட்டர்களுக்கு பெட்ரோல் பஞ்சாயத்து இல்லை. நாம் வீடுகளிலேயே சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். இதற்குத் தனியாகச் செலவாகாது.
அதேபோல வாகனங்களை நாம் அவ்வப்போது சர்வீசுக்கு விட வேண்டும். பெட்ரோல் ஸ்கூட்டர்களை முறையாக சர்வீஸ் விட்டால் சராசரியாக 4800 ரூபாய் வரை செலவாகும். அதேநேரம் மின்சார வாகனங்களுக்கு இது சரிபாதியாகக் குறையும். அதாவது ரூ. 2400 மட்டுமே செலவாகும்.
ஒரு கிமீ-க்கு எவ்வளவு செலவாகும்: இதில் நாம் கணக்கில் எடுத்துள்ள ஆக்டிவா மற்றும் ஜூபிட்டர் மாடல்கள் சராசரியாக ஒரு லிட்டருக்கு 45 முதல் 48 கிமீ மைலேஜ் தரும். அதன்படி பார்த்தால் 10 கிமீ பயணிக்க நமக்குச் சராசரியாக ரூ. 21.20 ஆகிறது. அதேநேரம் ஏதர் மின்சார ஸ்கூட்டரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 கிமீ வரை ஓட்டலாம். அதன்படி பார்த்தால் 10 கிமீ பயணிக்க நமக்கு ரூ.2.40 மட்டுமே செலவாகும். இது நமக்கு மிகப் பெரிய லாபத்தைக் கொடுக்கும்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் போது நாம் அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தாலும்.. அதன் பிறகு அதில் செலவு மிகக் குறைவு.. பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். சரி இப்போது விஷயத்திற்கு வருவோம் இரண்டில் எது பெஸ்ட்?
எது பெஸ்ட்: நீங்கள் அதிகமாகப் பயணம் செய்யும் நபராக இருந்தால்.. அதாவது தினசரி ஆபீசுக்கு செல்ல வேண்டும் என்றால் மின்சார ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது சரியாக இருக்கும். இருப்பினும் மின்சார ஸ்கூட்டரில் குறிப்பிட்ட கிமீ பிறகு சார்ஜ் போட வேண்டும். நமது நாட்டில் சார்ஜிங் வசதி இன்னும் முழுமையாக வரவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே உங்களால் பெட்ரோல் வாகனத்தைப் போல நீண்ட தூரம் செல்ல முடியாது. இதை முக்கியமாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதேநேரம் நீங்கள் அதிகம் பயணிக்க மாட்டீர்கள்.. அல்லது அதிகப் பணத்தை முன்கூட்டியே செலவழிக்க விருப்பமில்லை என்றால் பெட்ரோல் வாகனமே போதும்.
-
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.. எல்லாமே அடுத்தடுத்து உயருகிறதே.. இனி கட்டுப்படுத்தவே முடியாது! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications