போட்டு தாக்கும் சாட் ஜிபிடி..வந்தது மேஜர் மாற்றம்! இனி நீங்க நினைச்சு கூட பார்க்காததையும் செய்யுமாம்
வாஷிங்டன்: சாட் ஜிபிடி தான் இப்போது டெக் உலகில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதனிடையே மொத்தம் 20 வேலைகளைப் பட்டியலிட்டுள்ள சாட்ஜிபிடி, இந்த வேலை எல்லாம் பறிபோகும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நூற்றாண்டை புரட்டிட்டு போட போகும் கருவியாக நிச்சயம் ஏஐ கருவிகள் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் கடந்த சில மாதங்களில் ஏஐ கருவிகள் அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

குறிப்பாக ஓபன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய சாட் ஜிபிடி தான் இதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றது. ஏஐ துறையை சாட் ஜிபிடிக்கு முன், சாட் ஜிபிடிக்கு பின் எனப் பிரிக்கலாம் எனச் சொல்லும் அளவுக்கு ஏஐ துறையில் வேற லெவல் தாக்கத்தைக் கொண்டு வந்தது.
சாட் ஜிபிடி: சாட் ஜிபிடி உலகின் முதல் ஏஐ கருவி இல்லையென்றாலும், அது நாம் பார்த்ததிலேயே மிகவும் வலிமையான ஒரு ஏஐ கருவியாக இருந்தது. எந்த கேள்வியைக் கேட்டாலும் துல்லியமாகப் பதில் அளித்தது. கேள்வி மட்டுமில்லை. பாடல், கவிதை காமெடி என எதைக் கேட்டாலும் சாட் ஜிபிடி உடனுக்கு உடன் நறுக் பதில்களைத் தருகிறது. மேலும், தமிழ் உள்ளிட்ட பல பிராந்திய மொழிகளிலும் இதைப் பயன்படுத்தலாம் என்பது இதன் மற்றொரு சிறப்பாகும்.
இதன் காரணமாகவே சாட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது. தொடக்கக் காலத்திலேயே சாட் ஜிபிடி இந்தளவுக்கு பவர்ஃபுல்லாக இருக்கிறது. வரும் காலங்களில் இது மேலும் மேலும் சக்திவாய்ந்த ஏஐ கருவியாகவே மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இது மனிதக் குலத்தை நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
டேட்டா: இப்படி அனைத்து கேள்விகளுக்கும் சாட் ஜிபிடி பதில் சொல்ல அதற்கு ஃபீட் (feed) செய்யப்பட்டுள்ள பல கோடி டேட்டாக்களே காரணமாகும். 2021ஆம் ஆண்டு வரை நடந்த அனைத்து டேட்டாக்களையும் வைத்தே சாட் ஜிபிடி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே சாட் ஜிபிடியால் தற்போது என்ன நடக்கிறது என்பதைச் சொல்ல முடியாது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் சாட் ஜிபிடி இயங்க இணையச் சேவை தேவை என்றாலும் அது இணையத்தில் இருந்து தற்போதைய தகவல்களை எடுக்காது.
இதன் கரணமாகவே தற்போது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் யார், பிரிட்டன் பிரதமர் யார் என கேட்டால் 2021 வரை மட்டுமே தனக்குத் தகவல் இருப்பதாக சாட்ஜிபிடி பதிலளிக்கும். சாட் ஜிபிடி கருவியால் ஏகப்பட்ட வேலைகள் நமக்கு ஆனாலும் கூட தற்போதைய தகவல்களை அதனால் எடுக்க முடியாமல் இருப்பது அதற்கு ஒரு பாதகமாகவே பார்க்கப்பட்டது. இதைச் சரி செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
முக்கிய அப்டேட்: இதை ஏற்று சாட் ஜிபிடி இணையத்தில் இருக்கும் தற்போதைய தகவல்களை ஆக்செஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யூசர்களால் சாட் ஜிபிடி மூலமாகவே இணையத்தை ஆக்செஸ் செய்ய முடியும். சாட் ஜிபிடியிடன் கட்டண சேவை பிரிவில் மட்டுமே இப்போது இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் விரைவில் இவை முழுமையாக அனைத்து யூசர்களுக்கும் கொண்டு வரப்படும் என்றும் சாட் ஜிபிடி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒரு இணையதளத்தில் இருந்து எந்த தகவல்களை சாட்ஜிபிடியால் எடுக்க முடியும் என்பதை கண்டிரோல் செய்யும் வசதியும் விரைவில் இணையதளங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. அதாவது குறிப்பிட்ட இணையத்தில் இருந்து சாட்ஜிபிடி மூலம் உங்களால் எல்லா தகவல்களையும் எடுக்க முடியாது. அவர்கள் அனுமதிக்கும் தகவல்களை மட்டுமே எடுக்க முடியும்.
வாய்ஸ் போதும்: முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில் சாட் ஜிபிடிக்கு மற்றொரு அப்டேட் வழங்கப்பட்டது. அதாவது இனி டைப் செய்வதற்குப் பதிலாகச் சாதாரண நபர்களுடன் பேசுவதை போலவே சாட்ஜிபிடியுடன் உரையாடலாம் என அறிவிக்கப்பட்டது. அதாவது ஒரு கேள்வியைக் கேட்க நீங்கள் டைப் செய்யத் தேவையில்லை. நீங்கள் ஒரு மனிதரிடம் பேசுவதைப் போலச் சாதாரணமாகவே பேசலாம். அதைக் கேட்டு அதற்கான பதிலையும் குரல் மூலமாகவே அளிக்கும்.
இந்த இரண்டு அப்டேட்களும் சாட் ஜிபிடியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. இதன் மூலம் சாட்ஜிபியியின் பயன்பாடு மேலும் விரிவடைகிறது. இது நிச்சயம் பேரூததியாக இருக்கும் அதேநேரத்தில் வேலையிழப்பு குறித்த அச்சங்களும் அதிகரித்தே இருக்கிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications