காஸ்ட்லி மொபைல் வச்சிருக்க கஸ்டமர்களுக்கு அதிக கட்டணம்? ஜெப்டோ மீது பரபர புகார்.. பின்னணி என்ன?
டெல்லி: பிரபல இன்ஸ்டன்ட் டெலிவரி செயலியான ஜெப்டோ தனது யூசர்கள் என்ன செல்போன் வைத்து இருக்கிரார்கள் என்பதை பொறுத்து அவர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் என்று சிலர் ரெட்டிட் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் வசூலிக்க பல டார்க் பேட்டர்ன்கள் பின்பற்றப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்த காலத்தில் எல்லாமே இணைய வசம் ஆகிவிட்டது. குறிப்பாக ஆன்லைன் ஆர்டர் வசதி வந்த பிறகு பலரும் அதையே பயன்படுத்தியே வருகிறார்கள்.

இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள்: குறிப்பாக இப்போது இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் மூலம் நாம் எதை ஆர்டர் செய்தாலும் நிமிடங்களில் நமது வீட்டு வாசலுக்கே வந்துவிடுகிறது. பால் பாக்கெட் முதல் டிவி, செல்போன் என எதையும் இந்த செயலிகளில் ஆர்டர் செய்யலாம். சமீபத்தில் தங்கத்தை கூட இதுபோல டெலிவரி செய்யும் வசதியை அறிமுகப்படுத்தினார்கள்.
இந்த இன்ஸ்டன்ட் டெலிவரி சேவையில் இப்போது பல நிறுவனங்கள் களத்தில் உள்ளன. குறிப்பாக அதில் பல முக்கிய சிட்டிகளில் முன்னணியில் இருப்பது என்றால் அது ஜெப்டோ தான். இந்த செயலியில் என்ன ஆர்டர் செய்தாலும் அதிகபட்சம் 20 நிமிடத்தில் வீட்டுக்கு வந்துவிடுவதால் பலரும் இதை ஆர்வமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கிடையே இந்த ஜெப்டோ மீது அதன் ஊழியர் என்று சொல்லி ஒருவர் சில பரபர புகார்களை முன்வைத்துள்ளனர்.
ரெட்டிட் தளம்: பிரபல சமூக ஊடக வலைத்தளமான ரெடிட் தளத்தில் கடந்த டிச.3ம் தேதி இதை அவர் பதிவிட்டு இருக்கிறார். அதில் ரூ.30,000க்கும் அதிக மதிப்புள்ள செல்போன்களை வைத்து இருக்கும் யூசர்களிடம் இருந்து ஜெப்டோ அதிக பணத்தை வசூலிப்தாக அந்த நிறுவனத்தில் ஊழியர்கள் ரெடிட் தளத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக பணம் வசூலிக்க பல டார்க் பேட்டர்ன்கள் பின்பற்றப்படுவதாகவும் அந்த ஊழியர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
ரூ.30,000க்கு மேல் செல்போன்: இது தொடர்பாக அந்த நபர் மேலும் கூறுகையில், "வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக பணத்தை வசூலிக்க பல டார்க் பேட்டர்ன்களை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ரூ.30,000க்கு மேல் செல்போன்களை வைத்திருக்கும் யூசர்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது உட்பட பல வழிகளை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
வாடிக்கையாளர்களின் டேட்டா எல்லாம் ப்ரொபைல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. டேட்டா செக்யூரிட்டி மிக மோசமாக இருக்கிறது. டேட்டா பல முறை லீக் ஆகிய போதிலும், வளர்ச்சியை காட்ட வேண்டும் என்ற முதலீட்டாளர்களின் அழுத்தம் இருப்பதால் இந்த சிக்கல்கள் இன்னும் சரி செய்யப்படவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
ஒர்க் லைஃப் பேலன்ஸ் இல்லை: அந்த நபரின் இந்த போஸ்ட் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. அது எப்படி ஒருவர் என்ன செல்போனை பயன்படுத்துகிறார் என்பதை வைத்து அவரிடம் அதிக பணம் வசூலிக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதேபோல மீட்டிங் எல்லாம் பெரும்பாலும் நள்ளிரவில் தான் நடைபெறுவதாகவும் ஒர்க் லைஃப் பேலன்ஸ் எதுவும் இருப்பதில்லை என்பது போலவும் கூறியிருந்தார். அவரது போட்ஸ்ட் தான் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications