1000 கிலோ தங்கம், ரூ.300 கோடி வீடு.. 177 அப்பார்ட்மென்ட்டில் நடிகை? அந்த தயாரிப்பாளர் பற்றி பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாக்கத்துறை ரெய்டுகள் தொடர்பாக பல்வேறு அரசியல் நிபுணர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.. அந்தவகையில், பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியனும் பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில், ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ், விக்ரம் ஜூஜூ, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் போன்றோர்களை பற்றி கூறியிருக்கிறார்.. இதன் உண்மைத்தன்மை என்னவென்று உறுதியாக தெரியாத நிலையில், சில மூத்த பத்திரிகையாளர்கள் கூறும் அவர்களின் சொந்த கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில இந்த பேட்டியும் கவனம் பெற்று வருகிறது.

aagayam cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பாண்டியன், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவர் குட் பேட் அக்லி, கோட் படங்களின் விநியோகஸ்தர் ஆவார்.

Television 1000 kilo Gold Actress 1000

துணை முதல்வரின் ரெட் ஜெயண்ட் நிறுவனம், சமீபகாலமாக பிரம்மாண்டமான படங்களை தயாரிப்பதை, தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. எனவே உறவினர்கள் ஆகாஷ் பாஸ்கரன், ராகுல் போன்றோர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

திருப்பூர் சுப்பிரமணியன்

அந்தவகையில், இவர்கள் இருவருமே திரைப்படத்துறையையே தங்களது கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள்.. விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் சத்தத்தையே காணோம்.. கோடிகளை கொட்டி படம் எடுக்கும் இளைஞர்களும் அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறார்களே என்று அவர்களின் பின்னணியை ஆராய்ந்தால், மேற்கண்ட நேராக போய் நிற்குமிடம் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸாக உள்ளது.

30 வயதுகூட நிரம்பாத ரத்தீஷ், 300 கோடியில் வீடு கட்டுகிறார்.. எல்லாமே உதயநிதியையே சுற்றி சுற்றி வருகிறது. சினிமா என்பதே கள்ளச்சந்தை பணத்தை முதலீடு செய்யக்கூடிய ஒரு மார்க்கெட்டாக மாறிவிட்டது.

1 டன் தங்கம்

ஆகாஷ் பாஸ்கரனின் அப்பா நகை கடை வைத்திருக்கிறார். சமீப காலமாக 1 டன் தங்கத்தை அதாவது 1000 கிலோ தங்கம் கொள்முதல் செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.. 1000 கோடி தங்கம் வாங்குகிறார்கள் எத்தனை கோடி ரூபாய் இருந்தால் சாத்தியம்?

இதில் ராகுல், விஜய்யின் ஜனநாயகம் படத்தை 500 கோடி ரூபாய்க்கு விலை பேசுகிறார்.. இவர்களை பகைத்து கொண்டால், சினிமா படம் எடுக்கவும், விநியோகம் செய்யவும் ஆளில்லை என்ற நிலைமை வந்துவிடும் என்பதால், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், வளருகிற அத்தனை நடிகர்களுமே நினைக்கிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள் திரைப்பட துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள, மேலும் பல பினாமி நிறுவனங்களை உருவாக்குவார்கள்.


ரெட் ஜெயண்ட்

ரெட்ஜெயன்ட் மீது விமர்சனம் வரும்போது, ரோமியோ பிக்சர்ஸ் வருகிறது. அதற்கு இணையாக ஆகாஷ் பாஸ்கரின் டான் பிக்சர்ஸ் வருகிறது. ஒரு படம் பல கிளைகளாக மாறுகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எதுவாக இருந்தாலும், திரைப்பட துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றன இந்த பினாமி நிறுவனங்கள்.

திரைப்பட துறையை கட்டுக்குள் வைத்திருக்க யார் நினைக்கிறார்களோ, அவர்களே நடிகைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பார்ப்பார்கள். சென்னை எம்ஆர்சி நகரில் 177 என்று ஒரு அப்பார்ட்மென்ட் உள்ளது.. அதில் ஒரு பிளாட் 15 கோடி ரூபாய்.. இதுபோன்ற அபார்ட்மென்ட்களில் பெரிய நடிகைகள்தான் இருக்க முடியும். அரசு நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளை நடத்துவதே ஒரு நடிகையின் கணவர்தான்.. இதுதொடர்பான பேச்சுக்கள் 177 அப்பார்ட்மென்ட்டில் முடிவு செய்யப்படுகிறது.

காரணம் அரசை இயக்குவதே சில இளைஞர்கள்தான். இவர்கள்தான் விநியோகஸ்தர்கள், நடிகைகள், தியேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+