ஆயிரம் சவரன் நகைகளை விடுங்க.. ரூ.1200 கோடியில் 10 படங்கள் ஹேப்பி நியூஸ்.. ஐசரி கணேஷ் வரிசையாக அதிரடி
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ், 2025 முதல் 2027 வரை 10 படங்களைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படங்களை இயக்க போக்கும் டைரக்டர்களும் யார் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.. அத்துடன், ஐசரி கணேஷின் நல்லுள்ளம் பற்றியும், தயாள குணம் பற்றியும் விரிவாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ், 2025 முதல் 2027 வரை 10 படங்களைத் தயாரிக்க போகிறது.. இந்த படங்களை இயக்கவிருக்கும் டைரக்டர்கள் குறித்த 5 நிமிட வீடியோவும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் சுந்தர். சி, கௌதம் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் அந்தோணி, அருண் ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, என். செல்லா அய்யாவு, மற்றும் கணேஷ் பாபு போன்றோர் இந்த படங்களை இயக்க போகிறார்களாம்.. இவர்கள் எல்லாருமே திறமையான + ஹிட் படங்களை தந்தவர்கள் என்பதாலும், 1200 கோடியில் இந்த 10 படங்கள் உருவாக உள்ளதாக கூறப்படுவதாலும் இதற்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிறி வருகிறது.
யாரிந்த ஐசரி கணேஷ்
இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "சமீபத்தில் பல்லாயிரம் கோடியில் மகளின் திருமணத்தை சமீபத்தில் நடத்தி முடித்திருந்தார் ஐசரி கணேஷ்..
எம்ஜிஆர் காலகட்ட காமெடி நடிகர்களில் முக்கியமானவர் ஐசரி வேலன்.. இவரது மகன்தான் ஐசரி கணேஷ்.. ஐசரி வேலன் எம்ஜிஆரிடம் நெருக்கமாக இருந்தார்.. எம்எல்சி என்று மேல்சபை பதவி அப்போது இருந்தது.. எம்எல்ஏக்கள் எல்லாம் சேர்ந்து தேடுந்தெடுப்பார்கள்.. அப்படி ஐசரி வேலனும் மேலவை உறுப்பினராக இருந்தவர்..
மேலவை உறுப்பினர்
ஐசரி வேலன் மறைவுக்கு பிறகு, ஐசரி கணேஷ் நன்றாக படித்தார்.. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், அதிமுக அணியில் மாணவர் அணிச்செயலாளராக இருந்தார்.. கட்சியில் வாரிய தலைவராகவும் இருந்தார்..
பிறகு தன்னுடைய அப்பாவின் பெயரில் வேல்டெக் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.. இதுவே படிப்படியாக வளர்ச்சியடைந்து, இன்று அவரிடம் இல்லாத கோர்ஸ்களே இல்லை.. சட்டம், விவசாயம், மருத்துவம் முதல் அனைத்தையும் கல்வியில் வைத்துள்ளார்..
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும், சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட நான்கைந்து நாடுகளிலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அத்தனை பல்கலைகழகத்துக்கும் ஐசரி கணேஷ்தான் வேந்தராக உள்ளார்..
நடிகர், நடிகைகள் பிள்ளைகளுக்கு கல்வி
சினிமாக்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.. எனினும் சினிமா எடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர். இதற்கு காரணம், தன்னுடைய அப்பாவின் தொழில் சினிமாவாகும்.. அந்த சினிமாவில் நடித்துதான் தங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினார்.. எனவே அந்த தொழிலை நாம் விடக்கூடாது, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்..
அதனால்தான், சினிமாவில் நலிந்த கலைஞர்கள் ஏராளமானோருக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.. குறிப்பாக, நடிகர், நடிகைகளின் பிள்ளைகளுக்கு கட்டணமின்றி இலவச படிப்பு தந்து வருகிறார்..
பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல், கல்விக்கட்டணம் கட்ட முடியாமல் வறுமையில் வாடும் இயக்குனர்கள் உள்ளிட்ட திரைக்கலைஞர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி பயில உதவி செய்து கொண்டிருக்கிறார்.. இதற்கெல்லாம காரணம், தன்னுடைய அப்பா இருந்த சினிமா தொழிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான்.
2 ஆண்டுகள் - 10 படங்கள்
வேல்ஸ் பிலிம் பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்று பெயர்.. பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்றாலே ஷேர் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.. இதனால் பலரது பங்குகளும் உள்ளே வந்துவிடும்.. இதிலுள்ள வரவு செலவுகள் அனைத்தும் வெளிப்படையாகவே இருக்கும்.. இதில் வரும் லாபத்தை பங்குதாரர்கள் தங்களுககுள் பிரித்து எடுத்துக்கொள்வார்கள்..
அந்தவகையில், பங்குதாரரின் பணம்தான் இவையெல்லாம்.. தன்னுடைய கையிலிருந்து அவர் பணத்தை தந்து, 10 படங்களை ஆரம்பிக்கவில்லை.. பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படி ஏற்கனவே 10 படங்களை எடுத்து, நஷ்டமடைந்து தூக்கத்தை தொலைத்திருக்கிறாரகள்..
திறமையான டைரக்டர்கள்
ஆனால், சினிமா மீதான ஆர்வம் காரணமாகவும், சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தற்போது இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இந்த 10 படத்துக்கு தேர்வாகியிருக்கும் டைரக்டர்கள் அத்தனை பேருமே திறமையானவர்கள்.. பிரபலமான டைரக்டர்கள் மட்டுமல்லாமல் வளரக்கூடிய இயக்குனர்களும் இந்த லிஸ்ட்டில் உள்ளனர்..
தான் சினிமாவின் பின்புலத்திலேயே இருந்து, அதிலுள்ள நுணுக்கங்களையும், சிக்கல்களையும் அறிந்ததாலும், ஐசரி கணேஷூக்கு அத்தனை இயக்குனர்களும் உடனிருந்து துணைபுரிவார்கள் என்று நம்பப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications