16 வயதினிலே பட டாக்டரை ஞாபகம் இருக்கா? குழந்தைகள் இவங்க தானா? 42 வருட கனவு நினைவானது! உருக்கம்
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்தில் டாக்டராக நடித்து பிரபலமான நடிகர் சத்யஜித் குடும்ப புகைப்படங்கள் பல வருடங்கள் கழித்து இணையத்தில் வெளியாகி இருக்கிறது.16 வயதினிலே திரைப்படத்தில் நடித்து பிறகு ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்த சத்யஜித் சமீபத்தில் தமிழில் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் பிரபல சேனலில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்கத்தின் இமயமாக இருந்தவர்தான் பாரதிராஜா. இவர் பல திரைப்படங்கள் இயக்கியிருந்தாலும் அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் பலராலும் மறக்க முடியாது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி, கமல், ஸ்ரீதேவி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி பரட்டை என்ற கதாபாத்திரத்திலும், கமல் சப்பானி என்ற கேரக்டரிலும் நடித்திருப்பார்.

அதுபோல ஸ்ரீதேவி மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் மயில் டீச்சராக இருக்கும் நிலையில் அவர் நான் படித்தவரை தான் திருமணம் செய்து கொள்ளவேன் என்று ஆசைப்படுவார். அப்போது மயிலை சப்பானி விரும்புவார். ஆனால் மயில் தன்னுடைய அழகுக்கு தகுந்தவர் என்று அந்த ஊருக்கு புதிதாக வந்த டாக்டரை விரும்புவார். ஆனால் டாக்டர் மயிலை ஏமாற்றிவிட்டு போய்விடுவார். பிறகு பரட்டை மயிலை அடைய நினைக்கும் போது சப்பானி பரட்டையை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விடுவார்.
அப்போது ரயில்வே ஸ்டேஷனில் மயில் சப்பானி வரும் வரை வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன் என்று சொல்வார். இப்படித்தான் அந்த திரைப்படத்தின் கதை இருக்கும். இந்த நிலையில் இதில் நடித்த நடிகர்கள் கேரக்டர்களாக நடித்தார்கள் என்று சொல்வதை விடவும் அதில் வாழ்ந்து இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் பெயர் நடிகர் சத்யஜித்.

இவர் கர்நாடகாவை சார்ந்தவர் அதுபோல இவர் திரைப்படக் கல்லூரியில் தங்க பதக்கமும் வென்று இருக்கிறார். அது பற்றி ஒருமுறை செய்தித்தாள்களில் செய்தி வரும் போது அதை பாரதிராஜா பார்த்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் அவருக்கு 16 வயதினிலே திரைப்படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த திரைப்படத்தில் டாக்டராக சத்யஜித் பேசும் இங்கிலீஷ் அத்த நேரத்தில் அதிகமானவர்களை கவர்ந்திருந்தது
இப்படியான நிலையில் இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் கலக்குவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இவருக்கு ஒரு சில திரைப்படங்கள் வாய்ப்பு கிடைத்தாலும் அதன் மூலம் பெரிய அளவில் பிரபலம் கிடைக்கவில்லை. அதற்கு பிறகு இவர் ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு இவர் அதிகமாக காணப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.

அதில் தன்னுடைய குடும்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதில் தனக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள் என்றும் தன்னுடைய மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. தன்னுடைய மகனுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அதில் பேசியிருக்கிறார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது.. ஆனால் நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே இயக்குனராக வேண்டும் என்ற கனவில் தான் இருந்தேன்.
அந்தக் கனவு எனக்கு இப்போது 48 வருடங்களுக்கு பிறகு நனவாகி இருக்கிறது. ஆமாம் நான் இப்போது ஒரு கன்னட திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த திரைப்படம் விரைவில் தமிழிலும் வெளியாகும் என்று அந்த பேட்டியில் சத்யஜித் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications