நடிகர் சரத்குமார் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் 19 வயது மகன் கொலை.. நண்பர்களின் கொடூரம்
சென்னை: நடிகர் சரத்குமார் வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் பிரசாந்த் என்ற 19 வயது மகன் கொலை செய்யப்பட்டு பொன்னேரி கடற்கரையில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். ஏற்கனவே தினமும் கொலை அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் இப்போது 19 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டு கடற்கரையில் புதைக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற செய்திகள் அதிகமாகவே வந்து கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் இன்று பண்ருட்டி அருகே நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகாவிற்கு சொந்தமான வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகனை சென்னை பொன்னேரி கடற்கரையில் நண்பர்கள் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு எழில் செல்வி என்ற மனைவி இருக்கிறார். அவர்தான் நடிகர் சரத்குமாரின் சென்னையில் உள்ள வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரசாந்த் என்ற 19 வயது மகன் இருந்திருக்கிறார்.

இளைஞர் கொலை
பிரசாந்த் டைல்ஸ் பதிக்கும் கூலி வேலை செய்து வந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த அவருடைய மாமா ரமேஷ் என்பவரிடம் டைல்ஸ் பதிக்கும் வேலைக்கு பார்த்துக் கொண்டிருந்தாராம். ஆனால் கடந்த 27 ஆம் தேதி அம்மாவை பாத்துட்டு வரேன் என்று சொல்லி வீட்டில் இருந்து சென்னைக்கு கிளம்பி சென்று இருக்கிறார். ஆனால் போனவர் திரும்பி வரவே இல்லையாம். இதனால் ரமேஷ் அவருடைய அம்மாவிடம் விசாரித்திருக்கிறார். பிறகு அவரைப் பற்றி அக்கம் பக்கத்திலும் விசாரித்திருக்கிறார்.
போனில் தொடர்பு கொண்ட போதும் கிடைக்காததால் இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.
போலீசார் விசாரணை
அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பிரசாந்தை தேடி வந்திருக்கின்றனர். அப்போது அவருடைய செல்போன் டவர் லொகேஷனை வைத்து விசாரணை நடத்தி வந்ததில் சிறுவத்துறை சார்ந்த தினேஷ் (23), தேவராசு (18) என்ற இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்திருக்கிறார்கள். விசாரணையில் அதிர்ச்சிகரமான விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள்.
நண்பர்களின் வெறிச்செயல்
அதாவது தினேஷ், தேவராசு மற்றும் பிரசாந்த் மூன்று பேருமே நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் தேவராசும், தினேஷும் பொன்னேரி கடற்கரை பகுதிக்கு பிரசாந்தை வரவழைத்து அவரை அங்கே அடித்து புதைத்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை எதற்காக நடந்தது? நண்பர்களுக்கும் என்ன பிரச்சனை? என்று இன்னும் எந்த தகவலையும் சொல்லவில்லையாம். இது குறித்து காவல்துறையினர் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
