2018 புத்தாண்டு ஸ்பெஷல்: சிங்கம் 3, டோரா, மகளிர் மட்டும்

2018 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக சிங்கம் 3, மகளிர் மட்டும், டோரா, பாகுபலி 2 உள்ளிட்ட புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சி சேனல்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

சிங்கம் 3, டோரா உள்ளிட்ட புத்தம் புதிய திரைப்படங்களும், பட்டிமன்றம், நடிகர், நடிகைகளின் பேட்டி, நட்சத்திர கொண்டாட்டம் என களை கட்டப்போகிறது.

தொலைக்காட்சி சேனல்களில் நாளை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் களைகட்டுகின்றன. விஜய், அஜீத், நயன்தாரா ரசிகர்கள் உற்சாக விசிலடிக்கப் போகிறார்கள்.

நியூஸ் 7 டிவி

நியூஸ் 7 டிவி

வரும் புத்தாண்டை முன்னிட்டு நியூஸ்7 தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக சேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆரோக்கியமானதா..? ஆபத்தானதா என்கிற பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.

டிசம்பர் 31 காலை 11.00 மணிக்கும் இரவு 10 மணிக்கும், அதேபோல புத்தாண்டு தினத்தில் காலை 10.௦௦ மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் நடுவராக பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார்.

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை

ஆபத்தானது என்கிற தலைப்பில் முதல் நபராக சொல்வதெல்லாம் உண்மை புகழ் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், அவரை தொடர்ந்து மிர்ச்சி விஜய் விஜய் டிவி நகைச்சுவை பேச்சாளர் மோகனசுந்தரம் ஆகியோர் தங்கள் வாதங்களை முன் வைக்கின்றனர்.

ஸ்மைல் சேட்டை விக்னேஷ்

ஸ்மைல் சேட்டை விக்னேஷ்

ஆரோக்கியமானது என்கிற தலைப்பில் சியாமளா, விஜய் டிவி பேச்சாளர் மணிகண்டன் மற்றும் ஸ்மைல் சேட்டை விக்னேஷ் ஆகியோர் பேசுகிறார்கள். 1993க்குப்பின் தான் சாட்டிலைட் சேனல்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொடுத்து வருகின்றன. அவற்றில் இருந்து தற்போதுவரை அந்த நிகழ்ச்சிகள் எப்படி மாற்றம் அடைந்துள்ளன என பொழுதுபோக்கு சேனல்களையும் செய்தி சேனல்களையும் பல்வேறு விதமான கோணங்களில் இந்த பட்டிமன்றம் அணுகியிருக்கிறது.

விஜய், சூர்யா

விஜய், சூர்யா

சன்டிவியில் நாளை முதலே பல ஹிட் படங்களை ஒளிபரப்புகின்றனர். சண்டைக்கோழி, அழகிய தமிழ் மகன், அந்நியன் போன்ற திரைப்படங்களும், புத்தாண்டு தினமான திங்கள் மாலை 6 மணிக்கு சூர்யா அனுஷ்கா நடித்த சிங்கம் 3 திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

ஜீ தமிழில் ஜோதிகா

ஜீ தமிழில் ஜோதிகா

ஜீ தமிழ் டிவியில் ஜோதிகா நடித்த மகளிர் மட்டும், நயன்தாரா நடித்த டோரா திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது. சூர்யா டிவியில் ஜில்லா ஒளிபரப்பாகிறது. விஜய் டிவியில் பாகுபலி 2 திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+