2022ல் இணையத்தில் அதிக ரசிகர்களை கொண்ட தொகுப்பாளர்கள்.. முதல் இடத்தில் இந்த தொகுப்பாளரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து அதிகமான ரசிகர்களை கொண்ட தொகுப்பாளர்களின் விவரங்கள் இதில் அடங்கி இருக்கிறது.

சன் டிவி, விஜய் டிவி ஜீ தமிழ் ஏன பாப்புலரான டிவி சேனல்களில் தொகுப்பாளராக இருக்கும் நடிகைகளில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து அதிகமான ரசிகர்களால் பாலோ செய்யப்படும் தொகுப்பாளர்கள் பெயர் அடங்கி இருக்கிறது.

ஒரு நடிகையாக இருந்தாலும் சரி தொகுப்பாளராக இருந்தாலும் சரி அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களின் அளவை பொறுத்துதான் அவர்கள் பாப்புலர் ஆனவர்களா என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கீழே வரும் தொகுப்பாளர்கள் இடம்பிடித்து இருக்கின்றனர்.

சிவாங்கி

சிவாங்கி

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக மாறி கலக்கிக் கொண்டிருக்கும் சிவாங்கி சின்னத்திரை வெள்ளித்திரை என மாறி மாறி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தன்னுடைய பாட்டு மூலமாகவும் காமெடி மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வரும் சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5.1 மில்லியன் பாலோவர்ஸ் வைத்திருக்கிறார். இந்த வகையில் தொகுப்பாளர்களில் அதிகமான ரசிகர்களை பாலோவஸ்சாக கொண்டவர் இவராகத்தான் இருக்க முடியும்.

மணிமேகலை

மணிமேகலை

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இருந்து வரும் மணிமேகலை சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். தன்னுடைய கணவரோடு ஊருக்கு செல்லும் போட்டோக்கள் வீடியோக்கள் என ஒன்று விடாமல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இவர் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார். இவருக்கு 3.4மில்லியன் பாலோவர்ஸ் இருந்து வருகின்றனர்.

பிரியங்கா தேஷ் பாண்டே

பிரியங்கா தேஷ் பாண்டே

விஜய் டிவி நிகழ்ச்சிகள் என்றாலே அதில் தவறாகாமல் இடம் பிடிக்கும் ஒரு தொகுப்பாளராக பிரியங்கா இருந்து வருகிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அதில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்ற பிரியங்கா சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் ரசிகர்களால் தான் அதிகமாக காப்பாற்ற பட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது இவர் 2.9மில்லியன் பாலோவர்ஸ் வைத்திருக்கிறார். இதனால் பிரியங்கா மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

டிடி என்ற திவ்ய தர்ஷினி

டிடி என்ற திவ்ய தர்ஷினி

விஜய் டிவிக்கு பல வருடங்களாக தொகுப்பாளராக இருக்கும் திவ்யதர்ஷினி சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். பல பொது நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருக்கும் இவர் ரசிகர்களின் மனதை கவர்ந்து நாலாவது இடத்தில் இருந்து வருகிறார். இவர் 2.5 மில்லியன் ஃபாலோவரஸ்களை பெற்றிருக்கிறார்.

நக்ஷ்த்ரா நாகேஷ்

நக்ஷ்த்ரா நாகேஷ்

தொகுப்பாளராகவும் சீரியல் நடிகையாகவும் இருக்கும் இவர் ஐந்தாவது இடத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு 2.4மில்லியன் ரசிகர்கள் பாலோவர்ஸாக இருக்கின்றனர்.

அஞ்சனா

அஞ்சனா

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் அஞ்சனா சமூக வலைத்தளத்தில் 2கே கிட்ஸ்களையும் விடாமல் அதிகமாக கவர்ந்து வருகிறார். இவர் தொகுப்பாளராகவும், போட்டோ ஷூட் மூலமும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் ஆறாவது இடத்தில் ரசிகர்களை கவர்ந்த தொகுப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு 1.4 மில்லியன் ரசிகர்கள் பாலோவர்ஸாக இருக்கின்றனர்.

அர்ச்சனா

அர்ச்சனா

தொகுப்பாளர்களாக பல வருடங்களாக ரசிகர்களின் மனதில் நிலை கொண்டிருக்கும் அர்ச்சனா ஏழாவது இடத்தை பெற்றிருக்கிறார். இவர் அதிகமாக ஜீ தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் திடீரென பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சில மாதங்களாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் தற்போது மீண்டும் ஜீ தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவரை 1.3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

ரம்யா

ரம்யா

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் விஜே ரம்யா தற்போது உடற்பயிற்சி செய்து பலருக்கும் மோட்டிவேஷன் கொடுத்து வருகிறார். எளிமையாக உடல் நலத்தை எப்படி பாதுகாப்பது என்பதை இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டு வரும் நிலையில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அந்த வகையில் இவர் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இவரை 1.2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

 கிகி என்ற கீர்த்தி விஜய்

கிகி என்ற கீர்த்தி விஜய்

கீர்த்தி விஜய் தொகுப்பாளராக பலருக்கும் தெரிந்திருந்தாலும் இவரை ரசிகர்கள் கிகி என்றுதான் செல்லமாக அழைத்து வருகின்றனர். இவர் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் தொகுப்பாளராக தனது வேலையை செய்து வரும் கி கி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் போட்டோஷூட் மற்றும் தன்னுடைய கணவரோடு எடுக்கும் புகைப்படங்கள் என சமூக வலைத்தளத்தை எப்போதுமே பிசியாக பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் இவரை 1.2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+