2 எழுத்து நடிகைக்காக மல்லுக்கட்டிய நடிகர்கள்.. பண்ணை வீட்டில் 3 நடிகைகள்.. கடுப்பான ஹீரோ: பிரபலம்
சென்னை: சினிமா உலகில் 1980, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களுக்குள் நடைபெற்ற தொழில் போட்டிகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் விரிவாக கூறியிருக்கிறார்.. குறிப்பாக தெலுங்கு பட உலகில், அன்றைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "80-90களில் தொழில் போட்டிகளையும் தாண்டி, பல வகைகளில் நடிகர்களுக்குள் போட்டி இருந்தது..

சிலசமயம் தங்களது படங்களில் நடிகைகளை தேர்ந்தெடுப்பதில்கூட போட்டிகள் நடந்ததுண்டு.. பிறகு சில குறிப்பிட்ட நடிகைகளை தங்கள் வசம் கொண்டுவர வேண்டும் என்று, மற்றொரு போட்டியும் நடக்கும்..
சண்டை காட்சிகள்
அதேபோல, சண்டை காட்சிகளிலும் நிஜமாகவே முரட்டுத்தனங்களை காட்டக்கூடிய நடிகர்களும் இருந்தனர். .உதாரணத்துக்கு என்.டி.ராமராவ் எடுத்துக்கொண்டால், ஜாலியாக இருக்கக்கூடியவர்.. காலையில் எழுந்ததுமே, பெரிய கோழியை சாப்பிடுபவர்.. தென்னங்கள்ளு குடிப்பார்.. உடம்பை வலுவாக வைத்திருப்பார்..
நம்பியார் கதறினார்
யாரையாவது அடிப்பது போல சீன் என்றால்,, நிஜமாகவே அடித்துவிடுவார்.. இங்கு எம்ஜிஆர் நடித்த பல்லாண்டு வாழ்க படத்தை, தெலுங்கில் எடுத்தபோது, அதில் என்டிஆர் நடித்திருந்தார் ...
அதில், ஒரு கம்பால் நம்பியாரை அடிக்கும் காட்சியில், நிஜமாகவே விளாசிவிட்டாராம் என்டிஆர்.. வலி பொறுக்க முடியாமல் நம்பியார் கதறியபிறகுதான் விட்டாராம்.. அதேபோல ஜெயலலிதாவை கட்டிப்பிடிப்பது போல பாடல் காட்சி எடுக்கப்பட்டது.. அப்போது அழுத்தி கட்டிப்பிடித்ததால், ஏற்கனவே ஜெயலலிதா காலில் குத்தியிருந்த முள், அப்படியே காலிலிருந்த முள்ளே வெளியே வந்துவிட்டதாம்..
என்டிஆர் டாப் ஸ்டாராகவே கடைசிவரை இருந்தார்.. அவர் யாரை காட்டினாலும், அவர்தான் ஹீரோயினாக இருப்பார்.. அந்த அளவுக்கு செல்வாக்கான நபர்..
சக்சஸ் தருவதிலும் தெலுங்கில் நிறைய போட்டிகள் இருந்தன.. அதிலும் தான் மட்டுமே சக்சஸ் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் பாலையா.. நான்தான் முதல் ஆள் என்று இப்போதுவரை சொல்வார்..
காதல் சேட்டைகள்
ஆனால், ரவிதேஜா, பாலையா இருவரின் காதல் காட்சிகளுமே ஏடாகூடமாக இருக்கும்... ஆனால், சிரஞ்சீவிக்கும், பாலையாவுக்கும் நிறைய போட்டிகள் இருந்தன.. சிரஞ்சீவிக்கு பெரிய மார்க்கெட் அப்போது இருந்தது. சாதாரண சிகரெட் அட்டையில், படம் செய்து தருகிறேன் என்று எழுதி தந்தாலே, உடனே பைனான்ஸ் செய்ய பலரும் தயாராக இருப்பார்கள்.. இன்றும்கூட, சிரஞ்சீவிக்கான செல்வாக்கு இருக்கிறது.
தொடர்ந்து சிரஞ்சீவியும், ராதாவும் 13 படங்கள் ஜோடியாக நடித்தார்கள்.. 13 படங்களுமே பிளாக்-பஸ்டர் படங்கள்தான்.. இது பாலையாவுக்கு அப்போது கடுப்பை தந்தது.. ஏற்கனவே சிரஞ்சீவியுடன் தொழில் போட்டியில் இருந்ததால், ராதாவின் ஜோடிதான், சிரஞ்சீவிக்கு ஹிட் தருகிறது என்பதை அறிந்த, ராதாவை தன்னுடைய படங்களில் நடிக்க வைக்க முயன்றார்.. ஆனால் அதை பலரும் ஏற்கவில்லை..
சிரஞ்சீவி - ராதா
சிரஞ்சீவி-ராதா சக்சஸ்புல் ஜோடியாக இருக்கும்போது, திடீரென உங்களுடன் ராதா நடித்தால் அதை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று பாலையாவிடம் சொன்னார்கள்.. ஆனால் பாலையா, ராதாவை தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பதிலேயே பிடிவாதமாக இருந்தார்.
இப்படி 13 படங்களிலுமே முயன்று பாலையாவால் ராதாவை தன்னுடன் நடிக்க வைக்க முடியவில்லை.. இறுதியில் அம்பிகாவை ஜோடியாக போட்டு நடிக்க ஆரம்பித்தார்.. ஆனால், சிரஞ்சீவி-ராதா அளவுக்கு கெமிஸ்ட்ரி பாலையா-அம்பிகாவுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை..
பிறகு மறுபடியும் ராதாவையே நடிக்க வைக்க முயன்று, 3 மடங்கு சம்பளம் தருகிறேன் என்றெல்லாம் சொல்லி, ராதாவை தன்னுடைய படத்தில் புக் செய்தார்.. 13 படங்கள் சிரஞ்சீவியுடன் நடித்து முடித்த பிறகு, ராதாவை தன்னுடன் நடிக்கவைப்பது என்பது மிகப்பெரிய போட்டியாக தெலுங்கு பட உலகில் அன்று இருந்தது.
ஒருமுறை , அந்த பிரபல நடிகர் 2 நடிகைகளுடன் பண்ணை வீட்டுக்கு சென்றுவிட்டார்.. உடனே அவருக்கு எதிராக இருந்த டாப் ஸ்டார் நடிகர், 3 நடிகைகளுடன் பண்ணை
வீட்டுக்கு சென்றுவிட்டார்.. இப்படி நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் விஷயத்திலும், போட்டிகள் இருந்தன" என்று தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications