சூர்யவம்சம் தேவயானி, சரத்குமார்.. பாலுமகேந்திரா வீடு படத்துடன் 3BHK ஐ கம்பேர் பண்ணாதீங்க: பிரபலம்
சென்னை: சரத்குமார், தேவயானி வரும் சீனில் தியேட்டரில் கை தட்டுகிறார்கள்.. அப்போதுதான், சூரிய வம்சம் படத்தை ரீமேக் செய்திருக்கலாம் என்றே தோன்றியது என்றும், ஆனால், தயவுசெய்து, பாலுமகேந்திரா வடத்துடன் 3BHK படத்தினை ஒப்பிட வேண்டாம் என்றும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ் 8 தோட்டாக்கள், குருதியாட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.. தற்போது இந்த 3BHK படத்தை இயக்கியிருக்கிறார்..

சூரிய வம்சம் ஜோடி
மிடில் கிளாஸ் சேர்ந்தவர்களுக்கு வீடு வாங்கும் கனவு குறித்து எடுக்கப்பட்டுள்ளதாலும், மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் வீடு படம் எந்த அளவுக்கு தாக்கத்தை உண்டுபண்ணியதோ, அதுபோன்ற தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தும் என்று சமீபத்தில் ஜெயம் ரவி கூறியிருந்ததாலும், இந்த படத்தை பார்க்கும் எண்ணம் அதிகரித்தது..சூரிய வம்ச ஜோடி இதில் இணைந்ததாலும், வீடு படத்துடனேயே ஒப்பிட்டதாலும், இந்த 3BHK படத்தை பார்க்கும் ஆர்வம் மேலும் அதிகரித்தது..
ஒரு மிடில் கிளாஸின் சொந்த வீட்டு கனவுக்காக குடும்ப தலைவர் சரத்குமார் எப்படி போராடுகிறார்? அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் எப்படி ஒத்துழைக்கிறார்கள்? என்பதுதான் இந்த 3BHK படத்தின் முக்கிய சாராம்சம்..
பாலுமகேந்திராவின் வீடு
பாலுமகேந்திராவின் வீடு படத்தை போல இன்றுவரை யாராலுமே இன்னொரு படத்தை எடுக்க முடியாது.. அந்த காலகட்டத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட படம்.. 2 தேசிய விருதுகளை பெற்றது வீடு படம். அந்த வீட்டை கட்டும்போது, எந்தெந்த மாதிரியான பிரச்சனையை அந்த பெண் எதிர்நோக்குகிறாள், அந்த வீட்டை காண்ட்ராடக்டர் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்பதை ஒவ்வொரு செங்கல் செங்கல்லாக அடுக்கியிருப்பார் பாலுமகேந்திரா. படம் மெதுவாக நகர்ந்தாலும், அற்புதமான படைப்பாகும்..
இந்த 3BHK படத்தில் கிளைக்கதைகள் எதுவுமே இல்லை.. எல்லாரும் ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள்.. சரத்குமார், தேவயானி, சித்தார்த் என எல்லாருமே ஓவர் ஆக்டிங்.. இந்தியன் 2-படத்தின்போது, சித்தார்த் பேசாத பேச்சா? அதையெல்லாம் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.. ஆனால், மகளாக நடித்திருப்பவர் மட்டும் சிறப்பாக நடித்திருக்கிறார்..
மேக்கப்பில் கவனம் இல்லை
3BHK படத்தில் பெரும்பாலான இடங்களில் அழற்சியும் தொய்வும் ஏற்படுகிறது.. முதல் பாகம் நன்றாக இருந்தது.. 2வது பாகம், பிரேக் டவுன் ஆன வண்டியை தள்ளுவது போல இருந்த்து.. சிலர் தியேட்டரிலிருந்து நகர்ந்து செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.. சிலர் ரசித்து பார்த்தார்கள்,. 8 தோட்டாக்கள் எடுத்த டைரக்டரா இந்த 3BHK படத்தை எடுத்துள்ளார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது..
வீடு பற்றின கனவுகளை வைத்து படம் எடுக்கும்போது நிறைய டீடெயில் இருந்திருக்கணும்.. போகிற போக்கில் படம் போகிறது. சரத்குமார், தேவயானி மேக்கப் கூட நன்றாக இல்லை.. மேக்கப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்த படம் யாரை கவனம் செலுத்தி எடுக்கப்பட்டுள்ளது? மிடில் கிளாஸுக்கா? அப்பர் மிடில்? நடுத்தர மக்களுக்கா? என தெரியவில்லை.
வீடு படத்துடன் ஒப்பிடாதீங்க
சரத்குமார், தேவயானி வரும் சீனில் தியேட்டரில் கை தட்டுகிறார்கள்.. அப்போதுதான், இதுக்கு பேசாமல் சூரிய வம்சம் படத்தை ரீமேக் செய்திருக்கலாம் என்றே தோன்றியது.. திருப்புமுனை காட்சிகளும் இதில் இல்லை. ஆனால், தயவுசெய்து, பாலுமகேந்திரா வீடு படத்துடன் 3BHK படத்தினை ஒப்பிட வேண்டாம்.வீடு கட்ட முடியாதவர்கள், வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்கள், வீடு கட்ட முடியாத ஆதங்கத்தில் உள்ளவர்கள் 3BHK படத்தை போய் பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications