வளையத்தில் "காலனி" பட நடிகை? மீன்கள் பாட்டு ஹீரோயின்? பவுடரை தொட்ட பிரபலம் இவர்களா? லிஸ்ட் நீளுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: 7வது நபராக, கொக்கைன் போதை மருந்து சப்ளையர் ஃபயஸ் என்பவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.. எனவே, இன்னும் நிறைய ஜிம் மாஸ்டர்கள் இதில் சிக்கலாம்.. அதேசமயம், தமிழ்சினிமாவிலும், போதை நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.. சம்பந்தப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனையில், உறுதியாக தெரியாவிட்டாலும், வாட்ஸ்அப் மெசேஜ்களை வைத்து போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று பத்திரிகையாளர் பிரகாஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.. அத்துடன், சில நடிகைகளின் பெயர்கள் இந்த விவகாரத்தில் அடிபடுவதாகவும் கூறியிருக்கிறார்.

போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்தில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் ஜாமீன் தரக்கூடாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று இதுகுறித்த தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று ஹைகோர்ட் நீதிபதி தெரிவித்திருந்தார்.

Television colony film heroin fish actress

இன்று நிபந்தனை ஜாமீன்

இந்நிலையில், கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் இருவருக்குமே நிபந்தனை ஜாமீன் வழங்கி இன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், News Time TN என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ், "பிரசாத், பிரதீப், பிரவீன், ஜான், கெனின் ஆகிய 4 பேரில், இன்டர்நேஷனல் அளவில் போதைப்பொருளில் தொடர்புடையது கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவருக்குதான்..

5 நாள் நடந்த விறுவிறு விசாரணை

இவர்தான் பிரசாத் மூலம் டீலிங் வைத்திருந்துள்ளார்.. இவர்கள் அனைவருக்குமே 6 நாள் விசாரணை ஆரம்பமானது.. ஆனால், 5 நாளில் விசாரணை நடந்து முடிந்துள்ளது.. இந்த விசாரணையில்தான், போதைப்பொருளை பயன்படுத்தியதாக குண்டு நடிகை, ஒல்லி நடிகை, "காலனி" பட நடிகை, மீன் பாடலில் பிரபலமான நடிகை என மொத்தம் 4 பெண் பிரபலங்கள் பெயர்கள் அடிபட்டுள்ளது.

பிரசாத்தை பொறுத்தவரை, அடிக்கடி காஸ்ட்லி பார்ட்டிகளை நடத்தக்கூடியவர்.. இதற்கு எப்போதுமே நிறைய செலவாகும்.. இந்த பார்ட்டிகள் அனைத்தும் பீச் ரிசார்ட்களில் நடக்கும்.. இந்த பார்ட்டிகளில் ஆண், பெண் விஐபிகள் பங்கேற்றால், அதில் ஒருசிலருக்கு கொக்கைனையும் அறிமுகப்படுத்தி பழக்கப்படுத்திவிடுவார்கள்.. ஒருகட்டத்தில் கொகைனுக்கு அடிமையாகும் பட்சத்தில், அவர்களது வீடு தேடியே சப்ளை செய்யும் இந்த கும்பல்.

மிகப்பெரிய நெட்வொர்க்

கைதானவர்கள் மீது கொக்கைன் விற்பனை கேஸ் போடப்பட்டுள்ளது.. இவர்கள் மிகப் பெரிய நெட்வொர்க்காகவே, வாரமொருமுறை ஷெட்யூல் போட்டு இதை செய்து வந்துள்ளனர்.. கைதானவர்களின் வாட்ஸ்அப் குரூப்களிலும் சிலரது பெயர்கள் சிக்கியிருக்கின்றன..

உடல் பிட்னஸ்-க்காக பெரிய பெரிய தொழிலதிபர்களின் மனைவிகள், அவர்களது பிள்ளைகள், வசதிபடைத்தவர்களின் பிள்ளைகள் என பலரும் இதை உபயோகித்திருக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். சில ஜிம்களிலும் கொக்கைன் சப்ளை செய்யப்பட்டுள்ளது. ஈசிஆர் உள்ளிட்ட இடங்களிலுள்ள மிகப்பெரிய ஜிம்களுக்கு, பல விஐபிகள் வந்து செல்வதால், அங்கு போதைப்பொருள் சப்ளை நடந்திருக்க வாய்ப்புள்ளது..

தற்போது, 7வது நபராக, போதை மருந்து சப்ளையர் ஃபயஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. எனவே, இன்னும் நிறைய ஜிம் மாஸ்டர்கள் இதில் சிக்கலாம்.. எனினும் தமிழ்சினிமாவில் அதிக புழக்கம் உள்ளது.. போதைப்பொருளை உட்கொண்டது சம்பந்தப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனையில், உறுதியாக தெரியாவிட்டாலும், வாட்ஸ்அப் மெசேஜ்களை வைத்து போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+