நாலு எழுத்து "மி" நடிகைக்கு அரசியல்வாதி தந்த பங்களா.. இந்த ஹீரோயினா? அனைத்தும் இங்கு பணமே: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் சில நடிகைகள் நட்பாக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் மூலம் சில ஆதாயங்களை நடிகைகளை பெறக்கூடும்.. இதனால் சமூக அந்தஸ்தும் கிடைக்கும்.. சில காரியங்களை இவர்களை வைத்து சாதித்தும் கொள்ளலாம் என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் இரண்டாம் கட்ட ஹீரோயின்கள் பற்றியும் விரிவாகவே பேசியிருக்கிறார்.

4 நாட்களுக்கு முன்பு realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த சபிதா ஜோசப், "சில அரசியல்வாதிகளுக்கு நடிகைகளுக்கு தொடர்பு இருக்கத்தான் செய்யும். சிலசமயம் நடிகைகளே, தங்களுக்கான ஆதரவு, அடைக்கலம் கேட்டு அரசியல்வாதிகளிடம் செல்வதுமுண்டு..

Television 4 letters Actress second heroin

சிரிப்பு நடிகை சிக்கினார்

தமிழகத்தில் மத்திய அமைச்சரின் அரசியல்வாதியின் மகன், "சிரிப்பு"க்கு பெயர்போன, குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கும் அந்த நடிகையுடன் ஸ்டார் ஓட்டலுக்கு சென்றார்.. அங்கே இருவரும் போலீஸ் ரெய்டில் சிக்கிவிட்டனர்.

அப்போதைய முதல்வரிடம் இந்த விஷயம் சென்றது. மன்னித்து அனுப்பி விடுங்கள் என்று உத்தரவிடப்பட்டதையடுத்து, இருவருமே விடுவிக்கப்பட்டனர். சிலநேரத்தில் அதிகாரிகளால்கூட, நடிகைகளுக்கும் தொந்தரவு வந்திருக்கிறது.. அட்ஜெஸ்ட்மென்ட்களுக்கு மறுக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட நடிகைகள் அதிகாரிகளால் மிரட்டப்பட்டுள்ளனர்" என அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

விஐபி பிரமுகர்கள்

இந்நிலையில், Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், தொழிலதிபர்களுடன் சில நடிகைகள் நட்பாக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் மூலம் சில ஆதாயங்களை நடிகைகளை பெறக்கூடும்... உதாரணத்துக்கு உறவினர்கள், நண்பர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரலாம், விஐபி பிரமுகர்களுடன் பழகும்போது, சமூக அந்தஸ்தும் கிடைக்கும்.. சில காரியங்களை இதுபோன்ற தொழிலதிபர்களை வைத்து சாதித்தும் கொள்ளலாம்..

அரசியல்வாதிகள் நடிகைகளுடன் தொடர்பு வைத்து கொள்வது கென்னடி - மர்லின் மன்றோ காலத்திலிருந்தே இருக்கிறது.. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதிக்கும்கூட நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகத்தான் விமர்சனங்கள் வலம்வந்தன..

சலுகைகள், சிக்கல்கள்

அரசியல் தலைவர்களுடன் நடிகைகள் நெருக்கமாக இருந்தால்., சில சிக்கல்களிலிருந்து எளிதாக தப்பிக்கலாம், அல்லது சில சலுகைகளையும் அரசியல் பிரமுகர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.. தங்களுக்கு ஒரு பட்டா கிடைக்காவிட்டாலும்கூட, அந்த பணி எளிதாக நடந்து முடிந்துவிடும்.

அதேபோல தங்களது சொத்துக்களுக்கு, தங்களிடம் நட்பாக பழகும் நம்பிக்கைக்குரிய நடிகைகளை பினாமியாகவும் அரசியல்வாதிகள் சிலர் நியமிக்கலாம்.. எனினும், இதெல்லாம் நட்பின் ஆழத்தை பொறுத்தவரை.. இரு தரப்பிலுமே ஒருவரையொருவர் புரிதலின் அடிப்படையில் பயன் அடைந்து கொள்வார்கள்..

ஜான் கென்னடி - மர்லின் மன்றோ

அரசியல்வாதிகள் - நடிகைகள் உறவு என்பது ஜான் கென்னடி காலத்திலிருந்தே இருந்து வருகிறது.. தமிழ்நாட்டிலும் அப்படியானவர்கள் சிலர் இருக்கிறார்கள்.. ஆனால், அதை வெளியில் காட்டிக் கொள்வதில்லை. . அனைத்தையும் தீர்மானிப்பது இன்று பணமாகவே உள்ளது..

இங்கு ஒரு தமிழக அரசியல்வாதியை பற்றி சொல்லியாக வேண்டும்.. அவர் ஒரு பெரிய அரசியல்வாதி.. அதிமுகவில் இருந்தார்.. பிறகு காங்கிரஸில் இருந்தார்.. பிஜேபியில் இருந்தார்.. மறுபடியும் காங்கிரஸில் இப்போது இருக்கிறார்.. நான்கெழுத்தில் "மி" நடிகைக்கு அண்ணாநகரில் வீடு வாங்கி தந்தார்.. 15 நாள் அந்த பங்களாவில் நடிகையுடன் தங்கியிருந்தார்.. அதற்கு பிறகு அந்த வீட்டை நடிகையிடம் ஒப்படைத்துவிட்டு, வெளியேறிவிட்டார்..

இரண்டாம் கட்ட நடிகைகள்

இப்படி பெரிய நடிகைகள் என்றில்லை, இரண்டாம் கட்ட நடிகைகளும் இந்த லிஸ்ட்டில் உண்டு.. எனக்கு தெரிந்து 2 படத்தில் மட்டும், இரண்டாம் நாயகியாக அந்த நடிகை நடித்திருந்தார்.. உடனே சொந்த வீடு, பங்களா, என வாங்கிவிட்டார்.. மாதம் ஒருமுறை வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு, ஒரு வாரம் கழித்து ஊர் திரும்புவார்.

பெரிய நடிகைகளுக்கு இந்த வாய்ப்புகள் குறைவு.. காரணம், பிஸியாக அவர்கள் படங்களில் நடித்து கொண்டேயிருப்பார்கள்.. இதையும் தாண்டி, அரசியல்வாதி, தொழிலதிபர்களுடன் நட்பு இருந்தாலும், அது ரகசியமாகவே இருக்கும்.. மற்றபடி வெளிநாடுகளில் ஒருவாரம் சுற்றிவிட்டு வரவேண்டிய என்ற அவசியம் பெரிய நடிகைகளுக்கு கிடையாது.. படத்திலேயே நிறைய சம்பாதித்துவிடுவார்கள்..

பலன்கள், ஆதாயங்கள் என்னென்ன

அரசியல்வாதிகளுடன் நடிகைகளுக்கு நட்பு வலுவாக இருக்கும்பட்சத்தில், சொந்த படத்தை அரசியல்வாதியை தயாரிக்க வைத்து அதில் நடிகைகள் நடிக்கலாம், அல்லது அரசியல்வாதிகளுக்கு தெரிந்தவர்கள் எடுக்கும் படங்களில் ஹீரோயின் வாய்ப்பை பெறலாம்.. அல்லது மார்கெட் இழந்த நடிகையாக இருந்தால், சின்னத்திரைகளில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு பெறுவார்கள்.

காசு இல்லாதவன்

"காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்தடி" என்று பாட்டி காலத்திலிருந்தே ஒரு பழமொழி உண்டு.. இன்றைக்கு எல்லாமே பணமாகிவிட்டது.. பணம்தான் பேசுகிறது..

இந்தியாவின் வர்த்தகம் உட்பட அமெரிக்காவின் பணம்தான் தீர்மானிக்கிறது.. அதுபோலவே சினிமா, அரசியல் இரண்டிலுமே பணம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+