ஜிடி நாயுடு படத்தை இயக்கியவர் யார் தெரியுமா? சிம்பு பட காமெடி நடிகர்! இத்தனை வருடம் கழித்து செம கம்பேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று திரையரங்குகளில் வெளியான ஜிடி நாயுடு திரைப்படம் மாதவன் நடிப்புக்காக மட்டுமல்லாமல் அதன் பின்னால் இருக்கும் இயக்குனருக்காகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை இயக்கி இருப்பவர் வேறு யாரும் இல்லை, நடிகர் கிருஷ்ணகுமார் ராம்குமார் தான். இவரை ரசிகர்கள் 5 ஸ்டார் கிருஷ்ணா என்று அழைப்பார்கள்.

5 ஸ்டார் கிருஷ்ணா படங்கள்

பலருக்கும் அவர் ஒரு இயக்குனர் என்பதை விட முதலில் நினைவுக்கு வருவது நடிகராகத்தான். 5 ஸ்டார், அறிந்தும் அறியாமலும், ஆட்டோகிராப், ஆயுத எழுத்து, சர்வம், ஆரண்ய காண்டம் உள்ளன பல படங்களில் நகைச்சுவை குணச்சித்திரமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார். பெரிய ஹீரோவாக வரவில்லை என்றாலும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

Madhavan 5 Star Krishna Krishna Kumar

நடிகர் கிருஷ்ணகுமார் ராம்குமார் ஆரம்பகாலம்

நடிப்புடன் சேர்ந்து விளம்பர படங்கள், ஷார்ட் பிலிம், வெப் சீரிஸ் ஆகியவற்றிலும் பல வருஷங்களாக கலக்கி கொண்டு இருந்திருக்கிறார். அதன் அனுபவத்தை வைத்துதான் இயக்குனராக வேண்டும் என்று ஆசையும் அவருக்குள் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டார். அந்த பயணத்தின் முதல் பெரிய அடையாளமாக அமைந்தது ஓஹோ எந்தன் பேபி தான்.

விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவருடைய சகோதரர் ருத்ராவை ஹீரோவாக அறிமுகப்படுத்தி, அந்த படம் மூலம் இயக்குனராக கிருஷ்ணா அறிமுகமானார். அதற்கு முன்பே மாடர்ன் லவ் சென்னை சீரிஸில் ஒரு எபிசோடை இயக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஓஹோ எந்தன் பேபி படத்தின் மூலம் இயக்குனர் ஆனாலும் 2வது படத்திலேயே சாதாரண படத்தை தேர்வு செய்யாமல் ஜிடி நாயுடு போன்ற வரலாற்று நாயகனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.

ஜிடி நாயுடு திரைப்பட இயக்குனர்

ஜிடிஎன் திரைப்படத்தில் மாதவன் ஜிடி நாயுடுவாக நடித்திருக்கிறார். அவருடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், யோகி பாபு, வினய் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். ராக்கெட்டரி படத்திற்கு பிறகு மாதவன் மீண்டும் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருப்பதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்தது.

இந்த படம் வெளியான பிறகு அதிகமான ரசிகர்கள் காமெடி நடிகராக தெரிந்த கிருஷ்ணா இவ்வளவு பெரிய பயோபிக்கை இவ்வளவு நேர்த்தியாக எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்பதையே பலரும் சொல்லி வருகின்றனர். ஒரு காலத்தில் சினிமாவில் காமெடி கேரக்டரில் ரசிகர்களை சிரிக்க வைத்த இவர் இன்று தமிழ் சினிமாவில் முக்கியமான வரலாற்று படத்தை இயக்கிய இயக்குனராக பேசப்படுகிறார்.

அதுபோல விமர்சகர்களும், சினிமா ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். ஜிடிஎன் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை தாண்டி பைவ் ஸ்டார் கிருஷ்ணாவில் இந்த மாற்றமே தற்போது கோலிவுட்டில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+