புது காரு.. கலக்குறீங்க ஷிவானி.. ஆனா அது கிழிஞ்சு இருக்கே.. பார்க்கலையா!
சென்னை : புதுசாக பிஎம்டபிள்யூ கார் வாங்கின ஷிவானிக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிக்கின்றனர். காரை விட நீங்கதான் செம க்யூட் என்று கமெண்ட் போடவும் ரசிகர்கள் தவறவில்லை.
அதேசமயம், கார் வாங்க காசு இருக்கும் ஷிவானி இப்படி கிழிஞ்ச பேண்டோடு அது முன்னாடி நிற்கலாமா என்று நெட்டிசன்கள் கலாய்க்கவும் தவறவில்லை.
அழகில் மட்டும் தான் வெள்ளித்திரை நடிகைகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்துகொண்டு இருந்த ரசிகர்களுக்கு நான் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்த வயதிலேயே நிரூபித்திருக்கிறார் ஷிவானி.

கலக்குறாரு ஷிவானி
சின்னதா ஒரு ட்ரெஸ் வாங்கினாலே அதை இன்ஸ்டாகிராமில் போடும் நடிகைகளின் மத்தியில் நானும் புதுசா கார் வாங்கி இருக்கிறேன் என்று ஷிவானி இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அவர் போஸ்ட் போட்டு 5 நிமிடங்களுக்குள் சுமார் 500 கமெண்டுகளை தாண்டிவிட்டது. அத்தனையும் இவருக்கு வாழ்த்துக்கள் ஆக இருந்தாலும், ஒரு சிலவற்றில் இவருடைய உடையைப் பற்றியும் சிலர் கலாய்த்து இருக்கின்றனர். சும்மாவே நெட்டிசன்கள் கலாய்த்தால் கண்டுகொள்ளாத ஷிவானி இப்போ சந்தோஷமான நேரத்திலும் இப்படியெல்லாம் பேசினால் அதைப் பற்றி அவர் கண்டு கொள்வாரா நோவெ...என்று இந்த மாதிரி நெகட்டிவ் கமெண்டுகளை திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

சீரியலில் தேவதைதான்
ஷிவானியை பலருக்கும் பகல் நிலவு சீரியல் மூலமாகத்தான் தெரியும். சீரியல் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு ஒரு பெரிய வரவேற்பை கொடுத்தது இந்த சீரியல்தான். இந்த சீரியலில் பாவாடை தாவணியில் அப்படியே பார்ப்பவர்களின் கண்முன்பு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதல் சீரியலில் நடிக்கிறார் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது, அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பை கண்களாலே வெளிகாட்டி கொண்டிருந்தவர். பாவத்தின் மறு உருவமாக படாதபாடு அந்த சீரியலில் பட்டுக் கொண்டிருந்தார். அதனாலேயே ரசிகர்கள் இவரை ரசித்து வந்தனர்.

தொடர்ந்துவந்த சீரியல் வாய்ப்புகள்
பகல் நிலவு சீரியலுக்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். ஒரு சீரியல் முடிந்தாலும் தொடர்ந்து இவருக்கு சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. அதுவும் இரட்டை ரோஜா சீரியலில் இவர் இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார். சீரியல் நன்றாக சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் தான் இவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சீரியலில் இருந்து திடீரென்று விலகிவிட்டார். இவர் இந்த சீரியலில் விலகி விட்டார் என்பதை இவருடைய ரசிகர்களால் நம்ப முடியாமல இருந்திருக்கின்றது. இவருக்கு பதிலாக இந்த சீரியலில் சாந்தினி அறிமுகமான பிறகு தான் நம்பி இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட்
சீரியலுக்கு டாட்டா காண்பித்து இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் இவர் ரெக்கை கட்டி பறந்து கொண்டுதான் இருந்தார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதும் சரி சீரியலை விட்டு வெளியே வந்த போதும் சரி, இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போடுவதற்கு மட்டும் குறை வைக்கவில்லை. இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே இன்ஸ்டாகிராமினால் தான் அதனால் அந்த இடத்தை இவர் மறந்துவிடவில்லை. ஆனாலும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் வாழ்க்கையின் முன்னேற்றம் வேண்டுமே என்றுதான் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வெறி கொண்ட உடற்பயிற்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு இருக்கும் போது இவரைப் பற்றி அதிகமான வதந்திகளும் இவருடைய உடல் அமைப்பை பற்றி பாடி ஸேமிங்க்கும் வந்து கொண்டே இருந்தது. அதனால் தான் இவர் இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு வீட்டிற்கு வந்து வெறித்தனமான உடற்பயிற்சிகளை செய்து இப்போது சிக்கென்று மாறிவிட்டார். ஆனாலும் முன்ன மாதிரி அதிகமான போஸ்ட்களை எல்லாம் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதில்லை. எப்பவாவது தான் போஸ்ட் போட்டு வருகிறார். இது இவருடைய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக தான் இருந்து வருகிறது. அதனாலேயே பலர் தினமும் போஸ்ட் போடுங்கள் என்று கேட்டு வருகின்றனர்.

அதை கொஞ்சம் கவனிக்க கூடாதா
இந்த நிலையில் இன்று இவர் தான் புதியதாக வாங்கி இருக்கும் பிளாக் கலர் பி எம் டபிள்யூ காரோடு இவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோவை பார்த்து தான் சிலர் கலாய்த்து வருகின்றனர். கார் தான் புதுசா இருக்கிறது, ஆனால் இவர் போட்டிருக்கும் பேண்ட் தான் அங்கே இங்கே கிழிந்து இருக்கிறது. கலாய்ப்பதற்கு ஏதாவது காரணம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் தானே கண்ணில் தெளிவாகபடும். அதனாலே கார் வாங்க காசு இருக்கிற ஷிவானிக்கு பேண்ட் வாங்க காசு இல்லையே??என்று நக்கல் கலந்து கமெண்டுகளை அனுப்பி இருக்கின்றனர். ஃபேஷன்னுக்கு வித்தியாசம் தெரியவில்லையா என்று அவருடைய ரசிகர்கள் ஷிவானிக்கு ஆதரவுகளையும் பறக்க விடுகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications