டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள்.. முன்னேறிய எதிர்நீச்சல்.. பின்னடைவை சந்தித்த முக்கிய சீரியல்
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் இந்த வருடத்தின் ஆறாவது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்துள்ள சீரியல்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரத்தில் முன்னணியில் இருந்த பல சீரியல்கள் இந்த வாரம் பின் தங்கி இருக்கிறது.
கடந்த வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்த கண்ணான கண்ணே சீரியல் இந்த வாரம் ஆறாவது இடத்திற்கு சென்று இருக்கிறது.

1, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரம் போல அதே முதலிடத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. இந்த வாரம் 10.39 பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.

2, வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரம் போல இந்த வாரம் 10.15 அளவைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3,சுந்தரி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் எப்போதும் போல மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 9.00 அளவை பெற்றிருக்கிறது.

4, எதிர்நீச்சல் சீரியல்
கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் இந்த வரம் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக 8.96 பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

5, இனியா சீரியல்
கடந்த வாரத்தில் ஆறாவது இடத்தில் இருந்த இனியா சீரியல் இந்த வாரத்தில் 8.90 பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

6, கண்ணான கண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.87 பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

7, ஆனந்த ராகம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலும் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 6.49 அளவை பெற்றிருக்கிறது.

8,பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரம் ஒன்பதாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.82 பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

9, பாண்டியன் ஸ்டோர் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து 10வது இடத்தை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த முறை 6.51 பெற்று ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது.

10, பாரதி கண்ணம்மா 2 சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 கடந்த வாரத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில் 6.14 பெற்று இந்த சீரியல் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications