7 ஹீரோயின்களுக்கு வலை? அப்ப கோடி கோடியாய் கொட்டி படம் எடுத்த புரொடியூசர் நிலைமை அவ்ளோதானா: பிரபலம்
சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து, மேலும் பல பிரபலங்கள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கக்கூடும் என்கிறார்கள்.. அந்தவகையில் இந்த கைது நடவடிக்கைகள் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணியிருக்கிறது. இதுபோலவே கேரள திரையுலகிலும் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அங்கேயும் ஒருவித கலக்கம் சூழ்ந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள திண்டுக்கல் வெங்கடேசன், "சினிமா துறை என்றில்லை, அனைத்து துறையிலுமே போதை கலாச்சாரம் உள்ளது.. அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் போதை புகுந்துவிட்டது.. கானா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருவதாக சொல்கிறார்கள்.. அப்படியானால் கப்பல் மூலம் வருகிறதா? விமானம் மூலம் வருகிறதா? அங்கிருக்கும் அதிகாரிகளை தாண்டி இங்கே எப்படி வருகிறது என்று தெரியவில்லை

ஸ்ரீகாந்த் விஷயமும், நீண்ட காலமாகவே நடந்து வருகிற விஷயமாகும்.. இப்போது நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் நடந்த தகராறு காரணமாகவே, இந்த போதை பொருள் விவகாரம் வெளியே வந்தது.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, அதற்கு பிறகு சில பிரபலங்கள் கைதாகலாம் என்கிறார்கள்..
கோடிகளை கொட்டும் தயாரிப்பாளர்கள்
போதை எந்த வடிவத்திலும் தவறுதான்.. போதையை உட்கொள்வதைவிட, அதனை விற்பனை செய்வது அதைவிட பயங்கரமான குற்றம்.. ஒரு ஹீரோவை நம்பி எத்தனையோ தயாரிப்பாளர்கள் கோடிகளை கொட்டியிருக்கிறார்கள்.. அப்படி இருக்கும்போது, ஹீரோக்கள்தான் கவனமாக இருக்கணும்.
3 எழுத்து நடிகர்கள் 2 பேர், 3 எழுத்து நடிகைகள் 2 பேர், 4 எழுத்து இசையமைப்பாளர் என்று பலரது பெயர்கள் தொடர்ந்து அடிபட்டவாறே உள்ளது.. அப்படியிருக்கும்போது பெரிய நடிகர்களை வைத்து தயாரிப்பார்கள் எப்படி படம் எடுப்பார்கள்? இப்போது 2 நடிகர்கள் கைதுக்கு பிறகு, தயாரிப்பாளர்களுக்கே ஒருவித பயம் சூழ்ந்து கொண்டுவிட்டது..
ஹீரோ புக்கிங்
இனிமேல் சினிமாவில் நிலைமை எப்படியாகும் தெரியுமா? எந்த ஒரு ஹீரோவையும் படத்தில் புக் செய்வதாக இருந்தால் அதற்கு முன்பு, "எனக்கு எந்த போதை பழக்கமும் இல்லை, என்மீது எந்த போலீஸ் கேஸும் இல்லை, இந்த படத்தை முழுமையாக நடித்து முடித்து தருகிறேன்" என்று ஒப்பந்தம் போட்டு, அந்த ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய நேரிடும் நிலைமை வந்துவிடும் போல.
யாருமே தங்களது பாக்கெட்டில் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு படம் தயாரிப்பதில்லை.. வட்டிக்கு வாங்கிதான் தயாரிக்கிறார்கள்.. எனவே, நடிகர்கள், நடிகைகள், தங்கள் சேஃப்டியையும், தங்களை நம்பும் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பையும் உணர வேண்டும்.
மிகப்பெரிய பிரபலம்
ஒரு மிகப்பெரிய பிரபலம், தன்னால் பொதுவெளியில் இயல்பாக நடமாட முடியவில்லை, ரசிகர்கள் தன்னிடம் செல்பி எடுத்து கொள்வதற்காக குவிந்துவிடுவதால், தன்னுடைய பிரைவசி கெட்டு, மனநிம்மதியும் போவதால்தான் போதையை எடுத்து கொள்வதாக சொல்கிறார்.. இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? போதையை உட்கொள்ள எதை வேண்டுமானாலும் சாக்காக சொல்வதா?
பொழுதை பொதுவெளியில் பிரபலங்கள் கழிக்க வேண்டுமானால், எத்தனையோ ஆதரவற்றோர் விடுதிகள் உள்ளன, முதியோர் காப்பகங்கள் உள்ளன, அங்கெல்லாம் சென்று சாப்பாடு, துணிமணி எடுத்து தந்து பொழுதை போக்கலாமே? எத்தனையோ அரசு மருத்துவமனைகளில் யாருமற்ற நோயாளிகளுககு உதவலாமே? அவ்வளவு ஏன்? உங்களது ஏழை ரசிகர்களின் வீடுகளுக்கே சென்று உங்களால் ஆன உதவிகளை செய்யலாமே?
இப்படி எதுவுமே செய்யாமல், ரசிகர்களின் தொல்லையால் பிரைவசி போகிறது என்ற சாக்கு சொல்லி போதையை உட்கொள்வதை ஏற்க முடியாது..
4 எழுத்து நடிகை
அதேபோல, இந்த போதை வழக்கில் காவல்துறை தீவிரமாக உள்ளது.. பிடிபட்டவர்களிடம் போலீஸ் விசாரணை நடக்கிறது.. அவர்கள் தரும் வாக்குமூலத்தை வைத்து அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பாரபட்சமே இருக்காது.
3 எழுத்து நடிகர் யார், 4 எழுத்து நடிகை யார் என்று என்றெல்லாம் யூகத்தில் நாம பேச முடியாது. அப்படி சொன்னால் அது தவறானதாகிவிடும்.. கைதானவர்கள் மட்டுமே அந்த நடிகர், நடிகைகளின் பெயரை சொல்ல முடியும்.
இப்போது தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் இந்த போதைப்பொருள் விவகாரம் நிலைகுலைய வைத்துள்ளது.. அங்குள்ள பிரபலங்களும் போதைக்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, இங்கிருந்து தமிழ் நட்சத்திரங்கள் சிலர், கேரளாவுக்கு சென்று, போதையை உட்கொண்டதாகவும் ஏற்கனவே தகவல்கள் வந்துள்ளன.. அந்தவகையில், கேரளாவிலும் இந்த போதைப்பொருள் புழக்கத்தில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications