இந்த வார டாப் 10 சீரியல்கள்.. எகிரி அடித்த எதிர்நீச்சல், கீழே இறங்கிய சுந்தரி.. பல மாற்றங்கள்
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சீரியல்களின் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் ஏழாவது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரத்தில் முன்னணியில் இருந்த பல சீரியல்கள் இந்த வாரம் பின்தங்கி இருக்கிறது. குறிப்பாக சுந்தரி சீரியல் எதிர்பார்க்காத வகையில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
அதே நேரத்தில் எதிர்நீச்சல், இனியா போன்ற சீரியல்கள் முன்னேறி இருக்கிறது.

1, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரம் போல அதே முதல் இடத்தை மீண்டும் பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 10. 53 பெற்று இருக்கிறது.

2, வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே இரண்டாவது இடத்தை இந்த வாரமும் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி அளவில் 10.34 பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3, எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்தது அதற்கு முந்தைய வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. தற்போது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 9. 14 அளவை பெற்றிருக்கிறது.

4, இனியா சீரியல்
சன் டிவியில் ஆலியா மானசா நடிக்கும் இனியா சீரியல் கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்தது. இந்த வாரத்தில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரம் 9.13 அளவை பெற்றிருக்கிறது.

5, கண்ணான கண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இந்த வாராம் இந்த சீரியல் 9.12 பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

6, சுந்தரி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இதுவரைக்கும் மூன்றாவது இடத்தில் பல வாரங்கள் தொடர்ந்து வந்த நிலையில் இந்த வாரம் 9.10 பெற்று ஆறாவது இடத்திற்கு வந்துள்ளது.

7, பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது இந்த வாரத்தில் இந்த சீரியல் 8.26 பெற்றிருக்கிறது.

8, ஆனந்த ராகம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த முறை ஏழாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 6.71 பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது

9, பாண்டியன் ஸ்டோர் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த முறை ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 6.31 பெற்றிருக்கிறது.

10, கார்த்திகை தீபம் சீரியல்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் முதல் முறையாக டாப் 10 இடத்திற்குள்ளே வந்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 6.29 பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications