9 மணி சீரியலில் டி.ஆர்.பியில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் இதுதானா? போட்டி பலமாக இருக்கிறதே!
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதலிடத்தை பிடித்திருக்கும் சீரியல் விபரம் வெளியாகி இருக்கிறது.
சென்னை: 2023 வது வருடத்திற்கான ஆறாவது வாரத்தில் முன்னணி சேனல்களில் 9 மணி சீரியல்களில் முதல் இடத்தை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் 9 மணி சீரியல் களுக்கு கிடைத்த trp அடிப்படையில் இந்த விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
சன் டிவியில் இனியா சீரியல், விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா 2,ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாகி இருக்கிறது.

1, இனியா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி ஒரு சில மாதங்கள் ஆகி இருக்கும் நிலையில், இந்த சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். ஏற்கனவே விஜய் டிவியில் இவர் ராஜா ராணி சீரியலில் நடித்து பலருக்கும் பரீட்சைமானவர் தான். இவருக்கு ஜோடியாக ரிஷி பல வருடங்கள் கழித்து இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 8.90 அளவை கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் பெற்றிருக்கிறது.

2, பாரதிகண்ணம்மா 2 சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 கடந்த வார திங்கட்கிழமையிலிருந்து தான் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்து ஒளிபரப்பாகி வந்த முதல் பாகம் அதற்கு முந்தைய வாரத்தோடு முடிவடைந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த சீரியல் ஒளிபரப்ப தொடங்கினாலும், கதை இரண்டு சீரியலுக்கும் மாறுபட்டு இருந்து வரும் நிலையில், பெயர்கள் மட்டும் இரண்டாவது பாகத்தில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது . முதல் வாரத்திலேயே இந்த சீரியல் 6.14 அளவைப் பற்றி டிஆர்பி யில் முன்னேற்ற பாதையில் இருக்கிறது.

3, கார்த்திகை தீபம் சீரியல்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரத்தில் டி ஆர் பி யில் முன்னேற்றம் அடைய தொடங்கி இருக்கிறது. கார்த்திகை தீபம் சீரியலில் செம்பருத்தி சீரியல் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்காகவே இவருடைய ரசிகர்கள் இந்த சீரியலை பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். தற்போது சீரியலின் கதையும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் 5.75 பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

மாற்றம் மாறக்கூடும்
இனியா சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்த டிஆர்பி அளவு சில வாரங்களாகவே குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கார்த்திகை தீபம் சீரியலுக்கு தற்போது டிஆர்பி அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியல் இதுவரைக்கும் இரண்டாவது மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை ஜீ தமிழில் மொத்த சீரியல்களின் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்திருந்தாலும், 9 மணி சீரியல்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. அடுத்த வாரம் எந்த சீரியல் எந்த இடத்தை பிடித்திருக்கிறது இனி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications