இந்த வார டாப் 10 சீரியல்கள்... நூலிழையில் முன்னேறிய இனியா... எதிர் நீச்சலுக்கு இந்த இடமா..!?
இந்த வருடத்தின் ஒன்பதாவது வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் விவரங்கள் வெளியாகி இருக்கிறது
சென்னை: முன்னணி சேனல்களின் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் ஒன்பதாவது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் இனியா சீரியல் முன்னேறி இருக்கிறது.
நூல்இழையில் எதிர்நீச்சல் சீரியலின் இடத்தை இனியா சீரியல் பிடித்திருக்கிறது..

1, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரம் போல அதே முதல் இடத்தை மீண்டும் பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 10. 49 பெற்று இருக்கிறது.

2, வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே இரண்டாவது இடத்தை இந்த வாரமும் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி அளவில் 10.22 பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3, கண்ணான கண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவுக்கு வந்த கண்ணான கண்ணே சீரியல் 9. 80 பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் மூன்றாவது இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

4, இனியா சீரியல்
சன் டிவியில் நடிகை ஆலியா மானசா நடித்து வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரத்திலும் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் டிஆர்பி அளவில் அதிகரித்து இருக்கிறது. இந்த வாரம் 9.67 பெற்றிருக்கிறது.

5, எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 9.66 பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

6, சுந்தரி சீரியல்
சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு தற்போது அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டு இருந்தாலும் இந்த சீரியல் 9.52 பெற்று கடந்த வாரத்தை போலவே ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

7, பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரத்தில் பாக்கியாவிற்கு புது கேட்டரிங் ஆர்டர் கிடைத்த பரபரப்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த வாரமும் போன வாரத்தை போலவே 8.07 பெற்று ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.

8, ஆனந்த ராகம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் 6.56 பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

9, பாண்டியன் ஸ்டோர் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 6.34 பெற்றிருக்கிறது.

10, கார்த்திகை தீபம் சீரியல்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் கடந்த வாரத்தில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதுவும் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் கடந்த வாரத்தில் ஒரே டிஆர்பி அளவைப் பெற்று இருந்ததால் இரண்டும் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் இந்த வாரத்தில் 5.82 பெற்று 10-வது இடத்தை பிடித்திருக்கிறது.
-
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications