சிறுவனிடம் அசிங்கப்பட்ட யூடியூபர் இர்பான்.. முகத்துக்கு நேராக இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: யூடியூபர் இர்ஃபான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த வார எபிசோடில் கலந்து கொண்ட சிறுவன் ஒருவர் இர்பான் முகத்துக்கு நேராக சொன்ன வார்த்தை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் இதற்கு இர்பான் கமெணட் கொடுத்திருக்கிறார்.
எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்ல பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடக்கிறது. அதனால் தான் அந்த மாதிரி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இயல்பாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியிலும் பேசப்படுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெயர் வாங்கிய நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் சமீபத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் youtube மற்றும் சின்னத்திரையில் பிரபலமான பலர் இந்த சீசனில் குக்காக கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் யூடியூபர் இர்பான். இவர் சமையல் வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் பிரபலமாக இருக்கிறார்.
இவருக்கு என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இர்ஃபான் உள்ளூர் கடை முதல் பல வெளிநாடு ஹோட்டல்கள் வரை பல இடங்களுக்கு சுற்று திரிந்து பல வகையான உணவுகளை ருசி பார்த்து அதை ரிவியூ செய்து வரும் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் ஆக கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் நான் எந்த இடத்திலும் கில்லி தான் என்று சொல்வது போல நிகழ்ச்சி தொடங்கி இப்ப வரைக்கும் அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புதுமையாக சமையல் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. செஃப் மற்றும் கோமாளி இருவரையும் கலாய்க்கும் வகையில் பல சிறுவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு பேசிக்கொண்டே செஃப் சமையல் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது இர்பானிடம் கண்ணாடி போட்ட ஒரு சிறுவன் வந்திருக்கிறார்.
அவர் இர்பான் காய்கறி வெட்டுவதை பார்த்து நீங்கள் எல்லாம் எப்படித்தான் இவ்வளவு வேகமாக டக்கு டக்குனு காய்கறி வெட்டுவீங்க கையில வெட்டிடுமோன்னு பயம் இல்லையா என்று கேட்க, அதற்கு இர்பான் நான் பெரிய செஃப் தெரியாதா...? செஃப் எல்லாரும் இப்படித்தான் காய்கறி வெட்டுவாங்க என்று கதை விடுகிறார். அந்த சிறுவனும் அப்படியா என்பது போல பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது இர்பான் என்னை இதற்கு முன்பு உனக்கு தெரியுமா என்று கேட்க அதற்கு அந்த சிறுவன் உங்க பேரு இர்பான் தானே என்று சொல்ல ஆமாம் என்று இர்பான் சொல்கிறார். அதற்கு அந்த பையன் எனக்கு உங்களை தெரியாது... இங்கே தான் தெரியும். நீங்க ஏதாவது youtube சேனல் வச்சிருந்தா எனக்கு தெரிஞ்சிருக்கும் என்று சொல்ல, அதற்கு இர்ஃபான் அதிர்ச்சி ஆகி தன்னுடைய முட்டை கண்களை மேலும் விரிவாக்கி பார்க்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வீடியோவிற்கு கீழே இர்பான் கமெண்ட் போட்டு இருக்கிறார். அதில் வெஷம்... வெஷம்... அத்தனையும் வெஷம் என்று வடிவேலுவின் காமெடியை கமெண்ட்டாக அவர் போட அதற்கு கீழே பல ரசிகர்களும் ஜாலியான கிண்டல் தோணியில் கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். youtube ல் மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ்களை வைத்திருக்கும் இர்பானிடமே நீங்கள் youtube சேனல் வைத்திருந்தால் உங்களை எனக்கு தெரிந்திருக்கும் என்று அந்த சிறுவன் பேசியது வேடிக்கையாக இருக்கிறது.
ஏற்கனவே இது போல ஒரு சம்பவத்தை நடிகர் ஆனந்தராஜ் பகிர்ந்து இருந்தது நினைவுக்கு வருகிறது. ஆனந்தராஜ் ஒரு முறை ஒரு தெரு வீதியில் நின்று கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில் ஆனந்தராஜ் அதிகமான திரைப்படங்களில் வில்லனாகவும், முன்னணி கேரக்டரிலும் நடித்து கொண்டிருந்தாராம்.
அப்போது அந்த பக்கமாக வந்த நபர் ஆனந்தராஜை நெருங்கி வந்திருக்கிறார். அப்போது அவர் நம்மிடம் ஏதோ பேச வருகிறார் போல என்று நினைத்திருக்கிறார். ஆனால் பக்கத்தில் வந்ததும் அந்த நபர் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார். அப்போதுதான் ஆனந்தராஜ்க்கு புரிந்ததாம் இப்போதும் பலர் சினிமா பார்ப்பதில்லை...
நாமெல்லாம் பெரிய ஆட்கள் ஒன்றும் கிடையாது, சினிமா பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் நாம் பிரபலமாக இருக்கிறோம் அவ்வளவுதான். மற்றபடி நம்மை தெரியாதவர்களும் அதிகமானோர் இருக்கிறார்கள் என்று தனக்கு புரிந்தது என்று ஆனந்தராஜ் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதுபோலத்தான் இப்போது இர்பான் நிலைமையும் ஆகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications