"யூத்” & "மொத ராத்திரி” படத்திற்குள் இருக்கும் ஒரு ஒற்றுமை.. ஆனால் ஏன் இது நடக்கல? சிம்பு ரசிகர்கள் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : 90ஸ் கிட்ஸ்களின் ஹீரோவாக இருந்த சிம்பு இப்போ 2கே கிட்ஸ்களின் ஹீரோவாகவும் மாறி இருக்கிறார். கென் கருனாஸ் இயக்கி நடித்த யூத் படத்தில் கென் கேரக்டர் சிம்புவின் ரசிகராக நடித்திருப்பார். அதேபோல ராஜ் கருப்பன் இயக்கி நடித்த மொத ராத்திரி படத்திலும் சிம்புவின் ரெபெரென்ஸ் இருக்கிறது. இந்த படங்கள் எல்லாம் இப்போ சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று வரும் நிலையில் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரே ஒரு வருத்தம் இருக்கிறதாம்.

சிம்பு போட்டோ ரெஃபரன்ஸ்

சிம்பு போட்டோவை ரெஃபரென்ஸாக வைக்கும் படங்கள் எல்லாம் இப்போ அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிறது. ஆனால் எங்க தலைவர் சிம்பு படம் எப்போதான் ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் வருத்தத்தோடு கமெண்ட்ஸ்களையும் மீம்ஸ்களையும் போட்டு வருகிறார்கள். கென் கருனாஸ் யூத் படத்தை இயக்குகிறார் என்றபோது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு சின்ன பையனாக அசுரன் படத்தில் பார்த்தவர் எப்படி ஒரு படத்தை இயக்குவார் என்ற கேள்வியே பலருக்கும் இருந்தது. ஆனால் யூத் படம் வெளியான பிறகு அந்த கேள்வி தவறு என்று புரிந்து விட்டது. அந்த அளவிற்கு அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது.

Simbu movie review

ஹீரோக்களின் ஹீரோ

அதேபோலத்தான் இப்போது ராஜ் கருப்பன் இயக்கிய மொத ராத்திரி படமும் படத்தின் பெயரை கேட்டாலே. இது ஒரு விதமாக இருக்கிறதே படம் எப்படி இருக்கும் என்று பலரும் யோசித்துக் கொண்டிருந்தனர். கடைசியில் படம் வெளியானதும் அந்த கதையை இப்போ ஊரெல்லாம் பாராட்டி வருகிறார்கள். இந்த படத்திலும் ராஜ் கருப்பன் நடித்த நிதிஷ் கேரக்டர் சிம்புவின் ரசிகராகத்தான் இருப்பார்.

சிம்புவின் ரசிகர்கள்

சிம்புவின் ரசிகர் என்றால் ஜாலியாக எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத ஒரு நபராகவும், அதே நேரத்தில் மனசாட்சியுடன் நடக்கும் நபராகவே இப்போ படங்களில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் அப்டேட் மட்டும் ரசிகர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. சிம்பு போட்டோவை படத்தில் காட்டினாலே அந்த படம் வெற்றி பெற்று விடுகிறது. அதனால் சிம்புவுக்கு இனிவரும் படங்களாவது வெற்றி கொடுக்குமா? என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Simbu movie review

சிம்புவின் அடுத்த படங்கள்

உண்மையில் சிம்பு படம் வராமல் வெளியே இருப்பதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் இப்போது அவர் கைவசம் சாதாரணமாக ஒரு படம் மட்டும் இல்லை. வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் சிம்பு இப்போ கவனம் செலுத்தி வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. அரசன் படத்தை முடித்ததும் STR 5. ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குகிறார். இந்த படமும் எப்போது வெளியாகும் என்பது ரசிகர்களுக்கு தெரியாததால் சிம்பு படத்துக்காக தான் இப்போ ரசிகர்கள் வெய்ட்டிங்கில் இருக்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+