அனிருத் கல்யாணத்தில் நடந்த கதையே வேற.. பிரபலம் போட்ட போஸ்ட்.. பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிருத் காவ்யா மாறன் கல்யாண போட்டோஸ்கள் வெளியானதில் இருந்து ஒவ்வொரு போட்டோவையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவர்களுடைய உடை, ரஜினிகாந்த், ஸ்டாலின் குடும்பத்தினர் வருகை என பல விஷயங்கள் பேசப்பட்ட நிலையில் இப்போது அவர்களுடைய திருமணத்தில் நடந்த ஒரு விஷயம் தனியாக விவாதமாக இருக்கிறது. அது தாலி விஷயம்தான்.

பொதுவாக ஒரு கல்யாண போட்டோவில் மணமகன் மணமகள் கழுத்தில் ஏதாவது ஒரு சங்கிலி அணிவித்தால் அது தாலியாகத்தான் இருக்கும் என்று பலரும் நினைப்பார்கள். அனிருத் காவியா திருமண போட்டோக்களில் அப்படித்தான் பலருக்கும் தோன்றியது. ஆனால் இந்த விஷயத்தில் டிஆர்பி ராஜா கொடுத்த விளக்கம் வேறு மாதிரியாக இருக்கிறது.

Anirudh

அனிருத் கல்யாணம்

கிரீஸ் நாட்டில் நம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற அனிருத் காவ்யா மாறன் கல்யாண போட்டோக்களை பார்த்ததும் மணமகள் கழுத்தில் வழக்கமான தாலி தெரியவில்லையே என்று பலரும் கேள்வி எழுப்பினர். திருமண போட்டோக்களை அனிருத் வெளியிடாததால் இது சுயமரியாதை திருமணமாக இருக்குமா? என்றும் சோசியல் மீடியாவில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த விவாதத்துக்கு தான் திமுக ஐடி பிரிவு செயலாளர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்திருக்கிறார்.

காவியாவும் அனிருத்தும் முதலில் மாலை மாற்றிக் கொண்டனர். காவியாவிற்கு ஸ்டாலின் ஒரு செயினையும், அனிருத்துக்கு ரஜினிகாந்த் ஒரு செயினையும் கொடுத்தார்கள். அதற்கு பிறகு மணமக்கள் இருவரும் அந்த செயின்களை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொண்டனர். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அவர்களுடைய திருமண வாழ்க்கை தொடங்கியது என்று அவர் கூறியிருக்கிறார். புகைப்படத்தில் அனிருத் காவியா கழுத்தில் அணிவித்தது வழக்கமான தாலி என்று நினைத்தனர். ஆனால் ராஜாவின் விளக்கத்தின்படி பார்த்தால் அது இருவரும் மாற்றிக் கொண்ட செயின் என்பது தெரிய வந்திருக்கிறது.

செயின் மாற்றி திருமணம்

இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். காவியாவிற்கு ஸ்டாலின் செயின் கொடுத்து இருக்கிறார், அனிருத்துக்கு ரஜினிகாந்த் செயின் கொடுத்திருக்கிறார். அதாவது இரு குடும்பங்களையும் பிரதிநிதிப்படுத்தும் முக்கியமானவர்கள் மணமக்களுக்கு செயின் வழங்கி இருக்கிறார்கள். அதற்கு பிறகு இருவரும் மாலை மாற்றுவது போல அந்த செயினை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக திருமணங்களில் மணமகன் மற்றும் மணமக்களுக்கு தாலி கட்டும் காட்சியை பார்த்து பழகியவர்களுக்கு இங்கே இருவரும் ஒருவருக்கொருவர் செயின் மாற்றிக் கொண்டது வித்தியாசமான விஷயமாக தெரிந்திருக்கிறது.

திருமண புகைப்படங்கள்

இதனால் தான் திருமண புகைப்படம் வெளியான பிறகு அந்த சடங்கு குறித்து இவ்வளவு கேள்விகள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் அனிருத்த் காவியா கல்யாணத்தை பற்றி பேசும் போது சுயமரியாதை கல்யாணம் என்ற வார்த்தையும் அதிகமாக பேசப்படுகிறது. பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கத்தில் முக்கிய சமூக மாற்ற கருத்துக்களில் ஒன்றுதான் இந்த திருமண முறை. திருமணம் என்பது மத சடங்குகள் அல்லது புரோகிதர்கள் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தாண்டி, மணமக்கள் இருவரின் விருப்பம், சம்மதம் மற்றும் சமத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் முறையாக இது உருவானது.

இந்த திருமணத்தில் புரோகிதர் வேத மந்திரங்கள் போன்ற வழக்கமான சடங்குகள் கட்டாயம் இல்லை, மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வது, தங்களுடைய திருமண உறுதியை சொல்வது போன்ற முறைகளில் திருமணம் நடைபெறலாம். இதற்கிடையில், தாலி கட்டினார்களா? இல்லையா? என்பதைவிட இருவரும் தங்களுக்கு பிடித்த முறையில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே பல ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. ஒரு திருமண போட்டோ இத்தனை கேள்விகளை உருவாக்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் அந்த கேள்விகளுக்கு டிஆர்பி ராஜா கொடுத்த விளக்கம் இப்போது இந்த திருமணத்தையும் இன்னொரு பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+