நடிகர் மனோபாலாவின் கடைசி வீடியோ.. ஐயோ அந்த தவிப்பு..அவருக்கா அந்த நிலைமை..?இதை கவனிச்சீங்களா?
சென்னை: நடிகர் மனோ பாலா சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.
அவருடைய மறைவு குறித்து இப்ப வரைக்கும் ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் உயிரோடு இருக்கும்போது கடைசியாக எடுத்த வீடியோ தற்போது அவருடைய யூடியூப் சேனல் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது.

நடிகராகவும், இயக்குனராகவும், காமெடியனாகவும் பல வருடங்கள் தொடர்ந்து சினிமாவில் பயணித்த மனோபாலா கடந்த வாரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருடைய திடீர் இறப்பு செய்தி சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மனோபாலாவிற்கு நடிகர் விஜய் உட்பட தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பலர் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வருத்தத்தை பகிர்ந்து தங்களுக்கு மனோபாலாவோடு இருந்த நெருக்கம் மற்றும் அவருடைய மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு இருந்தனர்.
மனோபாலா நடிகராக மட்டும் அல்லாமல் சமூக வலைத்தளத்திலும் youtube சேனல் ஒன்றில் பல பிரபலங்களை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் கடைசியாக கூட அவர் நடிகை கோவை சரளாவை பேட்டி எடுத்திருந்தார். அதில் மனோரமாவை பற்றி பல தகவல்களையும் பேசி இருந்தார். அந்த வீடியோ தான் அவர் தன்னுடைய youtube சேனலில் கடைசியாக வெளியிட்டு இருந்த வீடியோ.

அந்த வீடியோ வெளியிட்டு 24 மணி நேரத்திற்குள் அவர் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. இந்த நிலையில் தற்போது அவர் உயிரோடு இருக்கும்போது தன்னுடைய மகனோடு குடும்பத்தோடு எடுத்த வீடியோ ஒன்றை அவருடைய youtube சேனல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர்.
அதில் பேச வார்த்தை இன்றி மனோபாலா அமைதியாக உட்கார்ந்து இருக்க, அவருக்கு ஒரு நபர் சாப்பாடு ஊட்டியபடியே அவரை கிண்டல் செய்கிறார். பாட்டு பாட சொல்லி அந்த நபர் கேட்க, மனோபாலா பாட்டு பாட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய மகன் கைகளை பற்றி அருகில் அமர்ந்து பாடல் ஒன்றை பாட, மனோபாலா அதை ரசித்தப்படியே அமர்ந்திருக்க அவருக்கு சாப்பாடு ஊட்டி தண்ணியும் கொடுக்கின்றனர்.
எப்பவும் சிரித்த முகமாக கலகலவென அனைவரையும் கலாய்த்து கொண்டிருந்த மனோபாலா கடைசி நேரத்தில் பேச முடியாமல் தவித்தபடியே இருந்த நிலையை பார்த்து ரசிகர்கள் இப்போதும் பீல் பண்ணி தங்களுடைய வருத்தங்களை கருத்துக்களாக வெளியிட்டு வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications