தன்னுடைய 8 வயதில் பார்த்த நடிகர் மயில்சாமி செய்த செயல்.. நினைவு கூர்ந்து கண்கலங்கிய Kpy பிரபலம்
தன்னுடைய எட்டு வயதில் மயில்சாமியின் நிகழ்ச்சியை பார்த்து தான் நான் மிமிக்ரி பண்ண ஆரம்பித்தேன் என கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பிரபலம் தெரிவித்திருக்கிறார்.
சென்னை: நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமான நிலையில் அவருடைய இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.
நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமான பழனி பட்டாளம் மயில்சாமி மேடை கலைஞராக இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படத்தை பகிர்ந்து பல தகவல்களையும் தெரிவித்திருக்கிறார்.

பல முகங்கள்
100க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி நேற்று மரணம் அடைந்தார். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும், மிமிக்கிரி கலைஞராகவும், தொகுப்பாளராகவும், அரசியல் பிரமுகராகவும், எம் ஜி ஆரின் தீவிரமான ரசிகராகவும், கஷ்டப்பட்டவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்டவராகவும், பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நபராகவும் இருந்து வந்தார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அரிய புகைப்படம்
நடிகர் மயில்சாமியின் திடீர் இழப்பு அவருடைய ரசிகர்களை அதிகமாக பாதித்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவரோடு பணிபுரிந்த நடிகர்கள் பிரபலங்கள் பலர் அவருடைய இறுதி சடங்கில் கலந்து கொண்டு தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பழனி பட்டாளம் உருக்கமான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில் மயில்சாமி மேடை கலைஞராக இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படத்தையும் அதற்கான சுவாரசியமான பின்னணி பற்றியும் நெகிழ்ச்சியோடு பதிவிட்டு இருக்கிறார்.

எட்டு வயதில் பார்த்தது
இது குறித்து அந்த பதிவில் 1990 ஆம் வருடத்தில் அண்ணன் மயில்சாமி அவர்கள் லக்ஷ்மணன் அவர்களோடு இணைந்து ஸ்ருதி இசை குழு ஆரம்பித்து என் வீட்டில் கட்டியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் இசை கச்சேரி நடத்தினார்கள். மயில்சாமி அண்ணனுக்கு நினைவு பரிசு வழங்குபவர் என்னுடைய அப்பா முத்து. அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும். அவர் நிகழ்ச்சியை நேரில் பார்த்து தான் நான் மிமிக்ரி பண்ண ஆரம்பித்தேன். சமீபத்தில் கூட அவரை சந்திக்கும் போது இதை சொல்லி நினைவுபடுத்தி இருக்கேன் என்றும் அவர் இறப்பு மிகவும் வேதனையை அளிக்கிறது. அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

பல வருட நடிப்பு
நடிகர் மயில்சாமி ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என பல நடிகர்களோடு ஆரம்பத்தில் நடித்திருந்தாலும் இன்று முன்னணி நடிகர்களோடு நடித்து வந்தார். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் மயில்சாமி நேற்று காலமான நிலையில் அவருடைய இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சென்னை வடபழனி ஏ.வி.எம் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications