சிவகார்த்திகேயன் பற்றி ஜாடையாக திட்டிய கங்கை அமரன்! வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு.. இப்படியும் நடந்ததா?
சென்னை: சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட் பிரபு இயக்குவதாக இருந்த படம் தொடங்கப்படாமல் போனது கடந்த சில நாட்களுக்கு சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக இருந்தது. அதிலும் வெங்கட் பிரபுவின் அப்பாவும் இயக்குனருமான கங்கை அமரன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பேசிய சில விஷயங்கள் இந்த பிரச்சனையை இன்னும் பெரிதாக்கிவிட்டது.
கங்கை அமரன் பேட்டி
அவர் சொன்ன விஷயங்களை வைத்து பார்க்கும்போது சிவகார்த்திகேயனை தான் கங்கை அமரன் மறைமுகமாக பேசியிருக்கிறார் என்று பலரும் இணையத்தில் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். அதாவது இந்த பிரச்சனைக்கு ஆரம்பம் எப்படி வந்தது என்றால் கங்கை அமரன் ஒரு பேட்டியில் பேசிக்கொண்டு இருக்கும் போது, தனது மகனைப் பற்றி சொல்லும்போது வெங்கட் பிரபு வேறு ஒரு படத்தை நம்பி இருந்தார். அதனால் தான் அவருடைய அடுத்த படம் தாமதமாகி கொண்டிருக்கிறது.

அந்த நடிகர் யார் என்பதை நான் சொல்லப்போவதில்லை. அந்த நடிகர் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால் ஒரு படம் வெற்றி பெற்று பிறகு இன்னொரு இயக்குனரின் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு வெங்கட் பிரபுவின் படத்தில் நடிப்பேன் என்று அந்த நடிகர் சொல்லிவிட்டார். உடனே நான் அதை என்னுடைய மகனுக்கு அனுப்பி இப்படி நீ காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவருடைய காலில் விழுந்து நடிக்க வைக்க வேண்டுமா? என்று நான் கேட்டிருந்தேன் என்று அவர் சொன்னதும் அந்த நடிகர் யாராக இருக்கும் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
அந்த நடிகர் யார்
அப்போது பலர் சிவகார்த்திகேயன் தான் அந்த நடிகர் என்று சொல்லி வந்தனர். காரணம் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணுகிறார் என்று அறிவிப்பு வெளியான பிறகு தாமதமாகி கொண்டிருந்தது. இதனால் இந்த 2 விஷயத்தையும் சேர்த்து பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தான் கங்கை அமரன் சொல்கிறார் என்று சொல்லி வந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.
வெங்கட் பிரபு பதிவு
அதில், சிவகார்த்திகேயன் எப்போதும் எனக்கு ஒரு அன்பான நண்பர், சகோதரர் தான். பலவிதமான வதந்திகளும் சர்ச்சைகளும் போய்க் போய்க்கொண்டிருக்கின்றன. ஒரு தகப்பனாக சொந்த மகனின் படம் தாமதமாகும் போது ஆதங்கமும் ஏமாற்றமும் வருவது இயல்புதான். அவருக்கு முழு பின்னணியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதனால் அவர் மீது தவறு இல்லை. நான் என் வேலை விஷயத்தில் அதிகம் பேசாத அமைதியான நபர்.
மீண்டும் இணைந்து
எனது தொழில் சார்ந்த விஷயங்களை வேறு யாரிடமும், என் தந்தையிடமும் கூட நான் விரிவாக பேசமாட்டேன். சில பல காரணங்களால் அந்த படம் தொடங்க முடியாமல் போய்விட்டது அவ்வளவுதான். அதில் எந்த மனக்கசப்பும் இல்லை. நேரம் கூடி வந்து ஒரு நல்ல கதை அமைந்தால் மீண்டும் எஸ் கே உடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறேன். அதனால் தயவு செய்து இந்த விவாகரத்திற்கு இத்துடன் முற்றுப்புள்ளி வையுங்கள் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார். தன்னுடைய மகனை பற்றி பெருமையாக பேசுகிறேன் என்று கங்கை அமரன் பேச, அதனால் கடுப்பான வெங்கட் பிரபு இப்போது ஒரு நீண்ட அறிக்கை வெளியிட வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது.




Click it and Unblock the Notifications
