தனிமை மனநிலை.. என்னை மாற்றியது டி. ராஜேந்திரன் தான்! கிரேட் செயல்.. நெகிழ்ந்த ஏ.ஆர் ரகுமான்
சென்னை: பலருடைய சோகத்தை மறந்து மனதை துள்ளலாக மாற்றக்கூடிய இசைக்கு சொந்தக்காரரான ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய மனநிலை மாறியது டி ராஜேந்திரனால் தான், அவர் செய்த செயலை பார்த்து நான் என்னையே மாற்றிக் கொண்டேன் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
பொதுவாக இந்த உலகத்தில் மன அழுத்தமும், எரிச்சலும் இல்லாதவர்கள் யாரேனும் இருக்கிறார்கள் என்றால் இல்லை என்பதுதான் பலருடைய பதிலாக இருக்கும். குழந்தைகளில் இருந்து வயது முதிர்ந்த முதியவர்கள் வரை எல்லோரும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். பணம் இருந்தால் வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறது. இல்லை என்றால் பணம் இல்லாதது பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.

அழகான இசை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூபத்தில் பிரச்சனை இருக்கும் போது பலருடைய மனம் தேடுவது இசையை தான். இதிலும் சிலருடைய பாடல்கள் சோகத்தை மறந்து மனதில் புத்துணர்ச்சி ஏற்படுத்தும். அது போல ஒருவர்தான் ஏ ஆர் ரகுமான். ஏ ஆர் ரகுமான் அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார். ஆஸ்கார் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய குடும்ப பிரச்சனையும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வருத்தமான செய்தி
ஏ ஆர் ரகுமான் மற்றும் அவருடைய மனைவி திடீரென விவாகரத்து அறிவித்திருந்தார்கள். அது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு முன்பு பல பேட்டிகளில் இருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்பு மற்றும் விட்டுக்கொடுக்கும் பாசத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு பிறகு பிரிந்து விட்டார்களே என்பது பலருடைய கருத்தாகவும் வருத்தமான கேள்வியாகவும் இருந்தது.
திடீர் விவாகரத்து
ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் எந்த இடத்திலும் குறை கூறவில்லை. அந்த நேரத்தில் ஏ ஆர் ரகுமான் குறித்து பல சர்ச்சைகளும் கிளம்பி வந்தது. அப்போது ஏ.ஆர் ரகுமானுக்கு அவருடைய மகன், மகள் மற்றும் மனைவி என எல்லோருமே சப்போர்ட்டாக பேசிக் கொண்டிருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு ஏ ஆர் ரகுமானின் மனைவிக்கு திடீரென்று உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ஏ.ஆர் ரகுமான் நெகிழ்ச்சி
இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் இப்போது தன்னுடைய வழக்கமான பணியை தொடர்ந்து செய்து வருகிறார். அதே நேரத்தில் அவர் பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் டி ராஜேந்திரன் பார்த்து தனக்கு ஏற்பட்ட மாற்றம் குறித்து பேசி இருக்கிறார். அதாவது நான் பார்த்து இன்ஸ்பியர் ஆன மனிதர்களில் டி ராஜேந்தர் சாரும் ஒருவர். இளையராஜா, எம்எஸ்வி, மகாதேவன் என பலரிடம் நான் வேலை பார்த்து இருக்கிறேன் ஆனால் டிஆர் ராஜேந்திரன் சார் கிட்ட வேலை செய்யும்போது அவர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து தனிமை விரும்பியாக இருந்த நான் எல்லோருடனும் கலகலப்பாக பழகும் நபராக மாறினேன். அதற்கு முக்கிய காரணம் ராஜேந்திரன் சார் தான் என்று ஏஆர் ரகுமான் பாராட்டி இருக்கிறார்.
நன்மதிப்பு
ஏற்கனவே ராஜேந்திரன் பற்றி தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் பெருமையாக சொல்வார்கள். சினிமாவில் டி ராஜேந்திரனை போல ஒரு ஜென்டில்மேன் கிடையாது என்பது பல நடிகைகளின் பாராட்டாக இருக்கிறது. மீ டு பிரச்சனை, அட்ஜஸ்மென்ட் பிரச்சனை வரும்போது கூட டி ராஜேந்திரனை தான் பலரும் பெருமையாக பேசுகிறார்கள்.
ரசிகர்களின் பாராட்டு
எந்த நடிகையின் மீதும் கைகூடப்படாமல் நடிப்பார், எந்த நடிகையிடமும் தவறாக நடந்து கொள்ள மாட்டார், எல்லோரிடமும் சகோதர அன்போடு தான் பழகுவார் என்று பேசி இருக்கிறார்கள். கலகலப்பாக பேசக்கூடியவர் அதே நேரத்தில் சகலகலா வல்லவனாகவும் வளம் வருகிறார். இசையை முறைப்படி கற்காமல் அவர் பாடும் பாடல்கள் மக்களின் மனதில் இயல்பாக இடம் பிடித்திருக்கின்றது. அதுபோல நல்ல நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், பாடகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் டி ராஜேந்தர் குறித்து ஏஆர் ரகுமான் பேசியதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications